Word |
English & Tamil Meaning |
---|---|
கம்பிவாங்கு - தல் | kampi-vāṅku- v. intr. <>கம்பி1+. See கம்பிநீட்டு-. . |
கம்பிவிறிசு | kampi-viṟicu n. <>id. +. Fireworks which shoot forth in pencils of light; கம்பிகம்பியாகப் தீப்பொறி பொரியும் ஒருவகைவாணம். (W.) |
கம்பிவேஷ்டி | kampi-vēṣṭi n. <>id.+. Man's cloth with a thin striped border; கம்பிக்கரையுள்ள வேஷ்டி. |
கம்பீர் | kampīr n. <>Malay. gambier. A preparation from the astringent leaf of a Malay shrub used along with betel; தாம்பூலத்துடன் சேர்க்கும் ஒருவகைத் துவர்ப்புச்சரக்கு. (மூ. அ.) |
கம்பீரசன்னி | kampīra-caṉṉi n. <>gambhīra. 1. High delirium; அதிகாரசன்னி. 2. Superciliousness, boastfulness, haughtiness; |
கம்பீரம் | kampīram n. <>gambhīra. 1. Depth, profundity; ஆழம். (சூடா.) 2. Profound knowledge; 3. Majestic air or bearing; manliness; |
கம்பீரவாக்கு | kampīra-vākku n. <>id.+. 1. Superior style of writing, pregnant with meaning; பொருளாழுந்த செய்யுள். (W.) 2. Manly, authoritative, majestic voice; deep, grave intonation; |
கம்பீரி - த்தல் | kampīri- 11 v. intr. <>id. To exult; to speak in a majestic tone; எடுப்பான குரலாற் பேசுதல். (W.) |
கம்பு 1 | kampu n. <>Pkt. khambha <>stambha [T. kambu.] 1. Post for tying elephants; stake; கட்டுத்தறி. கம்பமருங் கரியுரியன் (தேவா. 1092, 4). 2. Pole, rod, stick; 3. Branch of a tree; 4. Slender twig of a climber, or shrub; 5. Pole for measuring wet lands =2ft. +1 span; |
கம்பு 2 | kampu n. 1. Bulrush millet; கம்புத்தானியம். கம்புகுளிர்ச்சியென . . . சொல்லுவர் (பதார்த்த. 829). 2. Italian millet See செந்தினை. (பிங்.) |
கம்பு 3 | kampu n. <>kambu. Conch-shell; சங்கு. கம்பொன்றியகை. . . திருமால் (இரகு. இலவண. 75). |
கம்புக்கெளுத்தி | kampu-k-kelutti n. prob. id. + கெளிறு. cf. கொம்பன்கெளுத்தி. A fresh water fish, bluish, attaining six ft. in length, Macrones aor; நல்லதண்ணீரில் வாழம் மீன்வகை. |
கம்புக்கொங்கை | kampu-k-koṅkai n. <>கம்பு2+. Cob of the Bulrush Millet after the grain has been removed; தானியம் நீக்கப்பட்ட கம்பங்கதிர் |
கம்புகட்டி | kam-pukaṭṭi n. prob. கம்2 + புகட்டு-. One who irrigates; ஏரி நீர்பாய்ச்சுவோன் கடல் வருணன் கம்புகட்டி (சேக்கிழார். பு. 4). |
கம்புகம் | kampukam n. opium; . அபின் (தைலவ. தைல. 94.) |
கம்புள் 1 | kampuḷ n. prob. கம்2 + புள். 1. A kind of water-fowl; ஒருவகை நீர்ப்பறவை. கம்புட்சேவ லின்றுயி (மதுரைக். 254). 2. Indian sky-lark. See வானம்பாடி, 1. (சூடா.) |
கம்புள் 2 | kampuḷ n. <>kambu. See கம்பு. (சூடா.) . |
கம்பை | kampai n. <>கம்பு. 1. Ledge, frame of a door, etc.; கதவுழதலியவற்றின் சட்டம். Loc. 2. Slips of wood forming the binding of a book made up of plan leaves; 3. Jurisdiction; |
கம்பைக்கல் | kampai-k-kal n. <>U. Cambay +. Cambay pebble, a kind of opal found in Cambay; ஒருவகைப் படிகம். (W.) |
கம்பைகட்டு - தல் | kampai-kaṭṭu- v. intr. <>கம்பை+. To close a book after reading; வாசித்தபின் சுவடியைக் கட்டுதல். Loc. |
கம்பைதை - த்தல் | kampai-tai- v. intr. <>id. +. To nail a beading or border on a door or the edge of a box; கதவுமுதலியவற்றிற் சட்டமடித்தல். |
கம்பைமரம் | kampai-maram n. Broadleaved Gardenia, latifolia; மரவிசேடம். |
கம்மக்குடம் | kamma-k-kuṭam n. <>கம்3+. Pot made by a smith; கம்மியர்செய்த குடம். (நன். 222, மயிலை.) |
கம்மக்கை | kamma-k-kai n. <>id. +. (J.) 1. Pressure of work; நெறுக்குவேலை. 2. Difficult work; |
கம்மகாரர் | kamma-kārar n. <>Pkt. kamma + kāra. Sailors, mariners; கப்பலோட்டிகள். கம்மகாரர் கொண்டாடும்படி நன்றாக ஓடிற்று (சீவக. 501, உரை). |
கம்மத்தம் | kammattam n. <>T. kammatamu. 1. Zemindar's or Inamdar's land which he cultivates with his own labourers; பண்ணை விவசாயம். 2. Grant of a village for a wife's pocket expenses; |