Word |
English & Tamil Meaning |
---|---|
கயடேரிகம் | kayaṭērikam n. cf. கபடேரிகம். Eagle wood. See அகில். (மூ. அ.) . |
கயத்தம் | kayattam n. <>kāya-sthā. Sacred Basil. See துளசி. (மலை.) . |
கயத்தி | kayatti n. <>கய-மை. 1. Base, unworthy woman; கீழ்மகள். 2. Cruel woman; |
கயந்தலை | kaya-n-talai n. <>கய +. 1. Soft head, as of a child; மெல்லிய தலை. முக்காழ் கயந்தலைத் தாழ (கலித். 86, 2). 2. Young elephant, having a tender head; |
கயப்பினை | kayappiṉai n. Galena powder; வங்கமணல். (W.) |
கயப்பு | kayappu n. <>கய-. Bitterness; கைப்பு. வாய் கயப்புற (கம்பரா, மந்தரை. 63). |
கயப்பூ | kaya-p-pu n. <>கயம்4 +. Aquatic flower; நீர்ப்பூ. கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்புவாரை (நாலடி, 215). |
கயம் 1 | kayam n. <>கய. 1. Greatness, superiority, eminence; பெருமை. (பிங்.) 2. Tenderness, softness, smoothness; 3. Youthfulness; |
கயம் 2 | kayam n. <>கய-மை. 1. Inferiority, baseness, meanness; கீழ்மை. கயம்பெருகிற் பாவம் பெரிது (நான்மணி. 92). 2. The mean; the wicked; the vicious; |
கயம் 3 | kayam n. cf. கயவாய்2. See கரிக்குருவி. கோக்கயம் (திருவாலவா. 60, 13). . |
கயம் 4 | kayam n. prob. கசி-. 1. Tank, lake; நீர்நிலை. துணிகயந் துகள்பட (மணி. 24, 84). 2. Water; 3. Sea; 4. [M. kayam.] Depth; |
கயம் 5 | kayam n. <>gaja. Elephant; யானை. கயந்தனைக் கொன்று (திருவாச. 9, 18). |
கயம் 6 | kayam n. <>Pkt.khaya <>kṣaya. 1. Decay, wane, diminution; தேய்வு. தீவினை பின்னுவாமதியென . . . கயந்தருங்கொல் (திருச்செந். பு செயந்திபுரவை11 2. Deficiency, defect; 3. Loss, destruction, ruin; 4. Consumption, tuberculosis. See க்ஷயரோகம். கயக்கொடும் பிணியினால் (உபதேசகா. சிவத்து. 87). |
கயமுகன் | kaya-mukaṉ n. <>gaja-mukha. 1. Gaṇēša, the elephant-headed; விநாயகர். (சூடா.) 2. An asura slain by Gaṇēša; |
கயமுனி | kaya-muṉi n. <>gaja +. Young elephant; யானைக்கன்று. பொய்பொருகயமுனி முயங்குகை கடுப்ப (மலைபடு. 107). |
கயமை | kayamai n. Inferiority, baseness, despicableness; கீழ்மை. (குறள், 108, அதி.) |
கயர் | kayar n. <>கை-. (J.) 1. Astringency; துவர்ப்பு. 2. Astringent matter, as juices that taint metals, linen, skin; 3. cf. கசர். Soft, spongy top of a coconut; |
கயர்ப்பாக்கு | kayar-p-pākku n. <>கயர் +. Highly astringent areca-nut; துவர்மிக்க பாக்கு. (J.) |
கயரோகம் | kaya-rōkam n. <>kṣaya +. Pulmonary disease, consumption; க்ஷயநோய். கயரோகத் திளைப்பர் (சேதுபு. துராசார. 27). |
கயல் | kayal n. perh. கயம்4. Carp, a tank fish, Cyprinus fimbriatus; கெண்டைமீன். கயலெனக் கருதிய வுண்கண் (ஜங்குறு. 36). |
கயவஞ்சி | kaya-vaci n. <>கய-மை + prob. vacaka. Niggard, stingy person; உலுத்தன். (J.) |
கயவன் | kayavaṉ n. <>id. 1. Base, unworthy man; கீழ்மகன். கல்லாக் கயவன் (மணி. 23, 94). 2. Cruel man; |
கயவாய் 1 | kaya-vāy n. <>கயம்4 +. Estuary; நதியின் சங்கழகம். கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப (மலைபடு. 528) |
கயவாய் 2 | kayavāy n. prob. கயம்3 + வாய். 1. See கரிக்கருவி. தேற்றமில் கயவாயாகிச் செனித்தலால் (திருவிளை. கரிக். 3). . 2. Buffalo; |
கயவாளி | kaya-vāḷi n. <>gayā + U. wāl. See கயாவாளி. . |
கயவு 1 | kayavu n. <>கய. See கயம்1, 1 and 2. (திவா.) . |
கயவு 2 | kayavu n. <>கய-மை. 1. See கயம்2, 1. (அக. நி.) . 2. Theft, pilfering, larceny; |
கயவு 3 | kayavu n. <>கயம்3. See கரிக்கருவி. (பிங்.) கரிக்குருவி |
கயற்கெண்டை | kayaṟ-keṇṭai n. <>கயல் +. A kind of keṇṭai fish; கெண்டைமீண்வகை. (W.) |
கயாகரம் | kayākaram n. A glossary in kalittuṟai verse, compiled by Kayākarar of Rāmēswaram; கயாகரர் இயற்றிய நிகண்டு. |
கயாசிராத்தம் | kayā-cirāttam n. <>gayā +. Religious ceremony for the departed, performed at Gayā; கயையிற்செய்யும் பிதிரர்சடங்கு. |