Word |
English & Tamil Meaning |
---|---|
கயிறுகட்டிவிடு - தல் | kayiṟu-kaṭṭi-viṭu- v. intr. <>கயிறுகட்டு- +. To noise abroad false news; to spread a false rumour ; பொய்ச்செய்தி உண்டாக்கிப் பரப்புதல். |
கயிறுகட்டு - தல் | kayiṟu-kaṭṭu- v. intr. <>கயிறு +. 1. To invent a story, spin a yarn ; இல்லாததை உண்டாக்கிச் சொல்லுதல். Colloq. 2. To put off from day to day ; 3. To show a pretended consent, as a seller to one who offers a low price ; 4. To employ one to deceive another ; |
கயிறுசாத்து - தல் | kayiṟu-cāttu- v. intr. <>id. +. To pass a string between the leaves of a sacred book in order to divine by it ; நிமித்தம்பார்க்குமாரு இராமாயணம் தேவாரம் போன்ற நூலினுட் கயிறிடுதல். |
கயிறுசிக்குப்படு - தல் | kayiṟu-cikku-p-paṭu- v. intr. <>id. +. To be embroiled, to disagree, quarrel, get into a tangle ; தொந்தரவுபடுதல் (W.) |
கயிறுதட்டு - தல் | kayiṟu-taṭṭu- v. intr. <>id. +. See கயிறடி-. . |
கயிறுதடி | kayiṟu-taṭi n. <>id. +. A weaving instrument ; ஒரு நெசவுக்கருவி. |
கயிறுதிரி - த்தல் | kayiṟu-tiri- v. intr. <>id. +. 1. To twist twine, cord, rope ; கயிறுமுறுக்குதல். 2. To invent a story, spin a yarn ; |
கயிறுபிடி - த்தல் | kayiṟu-piṭi- v. intr. <>id. +. See கயிறுதிரி-, 1. (W.) . |
கயிறுபிடித்தறி - தல் | kayiṟu-piṭi-taṟi- v. intr. <>id. +. To measure, sound or test by the plumb-line, to adjust erections to a vertical line by means of the plummet ; கட்டடமுதலியவற்றுக்காக கயிறுபிடித்து நேர்மையறிதல். |
கயிறுபோடு - தல் | kayiṟu-pōṭu- v. intr. <>id. +. 1. To twist a rope ; கயிறுதிரித்தல். Loc. See கயிறுசாத்து-. Colloq. |
கயிறுமாறு - தல் | kayiṟu-māṟu- v. tr. <>id. +. To replace the old cord-strings of a newly bought animal, as a horse, by new tethering in confirmation of purchase, the old cords being taken away by the seller ; குதிரைமுதலியவற்றின் விற்பனையை உறுதிப்படுத்த அவற்றின் கயிற்றை மாற்றுதல். பரிகள் . . . கயிறுமாறி நின்னவாக்கொள்ளுநீரால் (திருவிளை. நரிபரி. 83). |
கயிறுருவிவிடு - தல் | kayiṟuruvi-viṭu- v. intr. <>id. + உருவு- +. 1. To untether, as a bull in calli-k-kaṭṭu ; எருதுமுதலியவற்றை வெளியேறும்படி அவிழ்த்துவிடுதல். 2. To unleash and urge, as a hound ; |
கயிறுவெட்டுப்புண் | kayiṟu-veṭṭu-p-puṇ n. <>id. +. Wound caused by the grating of a rope ; வடத்தால் அறுபட்ட புண். |
கயினி 1 | kayiṉi n. <>கை. The 13th nakṣatra, supposed to resemble the hand in shape ; அத்தநாள். (பிங்.) |
கயினி 2 | kayiṉi n. <>கைம்மை. Widow ; கைம்பெண். கயினியவரிற் கண்ணுற்று (இரகு. இந்து. 27). |
கயை | kayai n. Gayā. Gayā, sacred city in Behar, famous place of pilgrimage ; ஒரு க்ஷேத்திரம். |
கர்க்கசம் | karkkacam n. <>karkaša. That whish is rough, gruff, grating, unpolished ; கடினமானது. என் கர்க்கசச்சொல் (இரகு. பாயி.7). |
கர்க்கடகசங்கிராந்தி | karkkaṭaka-caṅki-rānti n. <>karkaṭaka +. Beginning of the month of Aṭi when the sun passes to the sign of Cancer ; ஆடிமாதப்பிறப்பு. (C. G.) |
கர்க்கடகசந்திரன் | karkkaṭaka-cantiraṉ n. <>id. +. The moon in Cancer ; கர்க்கடக ராசியில் நிற்குஞ் சந்திரன். |
கர்க்கடகசிங்கி | karkkaṭaka-ciṅki n. <>id. šrṇgī. Japanese Wax-tree, m. tr., Rhussuccedanea ; கடுக்காய்ப்பூமரம். கர்க்கடகசிங்கி . . . அரிவையரைக் கூடு திறங்கொடுக்கும் (பதார்த்த.1008). |
கர்க்கடகபாஷாணம் | karkkaṭaka-pāṣā-ṇam n. <>id. +. A mineral poison ; பிறவிப் பாஷாணங்களுள் ஒன்று. |
கர்க்கடகம் | karkkaṭakam n. <>karkaṭaka. 1. Crab ; நண்டு. (திவா.) 2. Cancer, a constellation of the Zodiac ; |
கர்க்கர் | karkkar n. <>Garga. Garga, one of the earliest astronomers ; வானசாஸ்திர ஆசிரியரான ஒரு முனிவர். |
கர்க்கரி 1 | karkkari n. <>karkarī. A jar for holding water ; கரகம். (பிங்) |
கர்க்கரி 2 | karkkari n. <>gargarī. Churn ; தயிர்கடை தாழி. (சூடா.) |
கர்க்கவம் | karkkavam n. Ceylon Tea, m. tr., Elaeodendron glaucum ; மரவகை. |