Word |
English & Tamil Meaning |
---|---|
கர்ப்பாஷ்டமம் | karppāṣṭamam n. <>id. + aṣṭama. The eighth year from conception being the seventh year after birth ; கருவுண்டான நாள்தொடங்கி எட்டாவதாகிய வருடம். கர்ப்பாஷ்டமத்தில் தானே உபநயனகர்மத்தையும் . . . செய்து முடிக்க (குருபரம். பன்னீ. 223). |
கர்ப்பிணி | karppiṇi n. <>garbhiṇī. See கருப்பஸ்திரீ. மலடி கர்ப்பிணி தாதி (சைவச. பொது. 388). . |
கர்ப்புரை | karppurai n. prob karburā. Benzoin tree. See சாம்பிராணி. (சங். அக.) . |
கர்ப்பூரக்கிச்சிலிக்கிழங்கு | karppūra-k-kiccili-k-kiḻaṅku n. <>karpūra +. Zedoary root ; பூலாங்கிழங்கு. |
கர்ப்பூரக்கிளுவை | karppūra-k-kiḷuvai n. <>id. +. Hill Balsam tree. See மலைமா. (L.) . |
கர்ப்பூரக்கொடி | karppūra-k-koṭi n. <>id. +. A kind of betel. See வெள்ளைக்கொடி. (G. Sm. D. 215.) வெள்ளைக்கொடி |
கர்ப்பூரசிலாசத்து | karppūra-cilā-cattu n. <>id. +. Foliated crystallized gypsum ; ஒரு வகை மருந்துக்கல். |
கர்ப்பூரத்துளசி | karppūra-t-tuḷaci n. <>id. +. A kind of tuḷaci plant that diffuses the smell of camphor ; கர்ப்பூரவாசனையுள்ள துளசி வகை. |
கர்ப்பூரத்தைலம் | karppūra-t-tailam n. <>id. +. 1. Oil or spirit of turpentine ; கர்ப்பூரம்போல வாசனையுள்ள பூச்சுமருந்து. 2. Oil of camphor ; |
கர்ப்பூரதீபம் | karppūra-tīpam. n. <>id. +. Lighted camphor used in worship ; கர்ப்பூரத்தினின்று எரியுந் தீபம். (பரத. ஒழிபி. 42, உரை.) |
கர்ப்பூரநீர் | karppūra-nīr n. <>id. +. Tincture of camphor; camphor in solution ; கர்ப்பூரத்திராவகம். (W.) |
கர்ப்பூரப்புல் | karppūra-p-pul n. <>id. +. Lemon-grass, Andropogon citratus ; ஒருவகை வாசனைப்புல். (W.) |
கர்ப்பூரம் 1 | karppūram n. <>karpūra. 1. Common camphor ; எரிக்குங் கர்ப்பூரம். 2. Camphor in its native state, one of five mukavācam, q.v.; 3. See கர்ப்பூரமரம். |
கர்ப்பூரம் 2 | karppūram n. <>karbūra. Gold ; பொன். (பிங்.) |
கர்ப்பூரமணி | karppūra-maṇi n. perh. கர்ப்பூரம்1 +. Amber. See அம்பர்3. (M.M.) . |
கர்ப்பூரமரம் | karppūra-maram n. <>karpūra +. 1. Japan Camphor tree, 1. tr., Cinnamomum camphora ; கர்ப்பூரம் உண்டாதற்குரிய மரம். 2. Blue-gum tree, 1. tr., Eucalyptus globulus ; |
கர்ப்பூரவல்லி | karppūra-valli n. <>id. +. See கர்ப்பூரவள்ளி. . |
கர்ப்பூரவள்ளி | karppūra-vaḷḷi n. <>id. +. 1. Thick-leaved Lavender, s. sh., Anisochilus carnosum ; ஒருவகை மருந்துச்செடி. நெஞ்சிற்கட்டு கபம் வாதமும்போம் . . . கர்ப்பூரவள்ளி (பத த்த. 330). 2. Country Borage, s.sh., Coleus aromaticus ; |
கர்ப்பூரவாழை | karppūra-vāḻai n. <>id. +. A kind of plantain ; வாழைவகை. |
கர்ப்பூரவில்வம் | karppūra-vilvam n. <>id. +. A very fragrant Bael tree; வில்வமரவகை. (W.) |
கர்ப்பூரவிலை | karppūra-vilai n. <>id. +. Price paid for temple lands; தேவஸ்தானநிலங்களுக்குக் கொடுக்கும் விலை. Loc |
கர்ப்பூரவெற்றிலை | karppūra-veṟṟilai n. <>id. +. Fragrant white Betel; வெற்றிலைவகை. (W.) |
கர்ப்பூராரத்தி | karppūrāratti n. <>id. + ārātrika. Waving of lighted camphor; கர்ப்பூரத்தலாகிய ஆலத்தி. |
கர்ப்போட்டம் | karppōṭṭam n. <>garbha + ஒட்டம். Southern passage of the rain clouds about the latter half of the Mārkaḻi month; மார்கழிப்பிற்பகுதியில் கருக்கொண்டமேகத்தின் தென் சார்பான ஒட்டம். |
கர்பரி | karpari n. <>U. garbāri. Confusion; குழப்பம். (W.) |
கர்மகாண்டம் | karma-kāṇṭam n. <>karman +. 1. That part of the Vēda chiefly Brāhmaṇā literature which treats about dharma, ceremonial acts and sacrificial rites; யாகம் முதலிய வைதிக தர்மங்களைப்பற்றிக்கூறும் வேதத்தின் முற்பகுதி. A medical treatise, attributed to Agastya; |
கர்மணிப்பிரயோகம் | karmaṇi-p-pirayōkam n. <>karmaṇi + prayōga. (Gram.) Passive voice; செயப்பாட்டுவினைவழக்கு. (பி. வி. 36, உரை). |
கர்மதாரயம் | karma-tārayam n. <>karmadhāraya. (Gram.) Appositional compound noun made up of two nouns in which 'ākiya' the particle of apposition is understood; இருபெயரொட்டுப் பண்புத்தொகை. (பி. வி. 22, உரை). |