Word |
English & Tamil Meaning |
---|---|
கரடிவிடு 1 - தல் | karaṭi-viṭu- v. intr. <>கரடி +. To spin a yarn; to disseminate a lie; பொய்யைக் கட்டீக்கூறுதல். Colloq. |
கரடிவிடு 2 - தல் | karaṭi-viṭu- v. intr. <>கரடி1 + Lit., to let in a bear; fig., to intrude suddently in an irrelevant fashion and thus rudely disturb a situation; சம்பந்தமில்லாத தொன்றைக் கொண்டு புகுத்திக் கலங்கச்செய்தல். பூசைவேளையில் கரடிவிடாதே. Loc. |
கரடிவித்தை | karaṭi-vittai n. <>கரடி2+. Art of fencing; சிலம்பவித்தை. |
கரடிவியாபாரம் | karaṭi-viyāpāram n. <>id. +. Coaxing by flattery, toadying, fawning; இச்சகம் பேசுகை. Mod. |
கரடு 1 | karaṭu n. [K. M. karadu.] 1. Roughness, ruggedness, unevenness; முருடு. ஈண்டுருகாக் கரடு (அருட்பா, iv, பத்தி. 6). 2. Churlish temper; 3. Hillock, low hill; 4. Ankle; 5. Knot in wood; 6. Turf; 7. That which is stunted in growth; 8. A variety of pearl; |
கரடு 2 | karaṭu n. <>karaṭa. Running amuck of an elephant; யானையின் மதவெறி. கரடுபெயர்த்தது (பெருங். உஞ்சைக். 32, தலைப்பு). |
கரடுமுரடு | karaṭu-muraṭu n. <>கரடு1 +. See கரடுமுருடு. . |
கரடுமுருடு | karaṭu-muraṭu n. <>id. +. Unevenness, ruggedness, roughness; ஒழுங்கின்மை. |
கரண் | karaṇ n. cf. கரடு1. 1. The uneven surface in vegetables and fruits; காய்கறிகளின் முண்டு. 2. Scar; |
கரண்டகம் | karaṇṭakam n. <>karaṇdaka. 1. Basket made of plaited coconut-leaves for carrying flowers for divine worship; தென்னை ஒலையால் முடைந்த பூக்குடலை. கரண்டகநீர் தரியாபோல் (ஞானவா. வைராக். 74). 2. Small metal box for keeping quicklime to be used with betel; |
கரண்டம் | karaṇṭam n. <>karaṇda. 1. Water-crow, coot; நீர்க்காக்கை. கரண்டமாடு பொய்கை (திவ். திருச்சந்த. 62). 2. Jewel-box; 3. Spoon, ladle; 4. Water-vessel used by ascetics; 5. See கரண்டகம், 2. (W.) |
கரண்டி | karaṇṭi. n. Spoon or ladle, made of metal; உலோகத்தாலாகியதும் காம்புள்ளதுமாகிய முகத்தற்கருவி. (பிங்.) |
கரண்டிகை | karaṇṭikai n. <>karaṇdikā 1. Flower-basket; பூக்கூடை. கரண்டிகையுட்சாலும் பலபோது (கோயிற்பு. வியாக்கிர. 15). 2. Name of a special part of the crown; |
கரண்டிகைச்செப்பு | karaṇṭikai-c-ceppu n. <>id. +. See கரண்டகம், 2. (S.I.I. ii, 15.) . |
கரண்டிப்பாறை | karaṇṭi-p-pāṟai n. cf. karaṇdin+. Horse-mackerel, greenish, generally attaining 1 ft. in length, Caranx jarra; கடல்மீன்வகை. |
கரண்டு - தல் | karaṇṭu- 5 v. tr. [M. karaṇdu.] To paw, as a dog; to gnaw, as a rat; to scrape; சுரண்டுதல். நாவினையென்பால் .. .கரண்டுகின்ற நாய்க்கும் (அருட்பா, i, மகாதேவ. 86). |
கரண்டை 1 | karaṇṭai n. 1. cf. காண்டை. Rocky cave, cavern; கற்பாழி. (திவா.) 2. The abode of sages, as mountain cave; 3. A mode in the flight of birds; |
கரண்டை 2 | karaṇṭai n. <>karaṇda. Water-vessel, used by ascetics; கமண்டலம். சிமிலிக் கரண்டையன் (மணி. 3, 86). |
கரண்டைக்காய்மோதிரம் | karaṇṭai-k-kāy-mōtiram n. A kind of finger-ring worn by Parava women on all the five fingers, four or five such rings being worn on each finger; பரவமகளிர் ஒருவிரலுக்கு நாலைந்துவீதம் ஜந்துவிரலலிலும் அணியும் மோதிரம். |
கரண்டைக்கை | karaṇṭai-k-kai n. prob. கரண்+. Fore-arm; முன்கை. Loc. |
கரணகளேபரம் | karaṇa-kaḷēparam n. <>karaṇa+. The physical body with its sensory organs; பொறிகளும் சரீரமும். கரணகளே பரங்களை யிழந்து (அஷ்டாதச. முமுட்சுப். வ்யா. அவ.). |
கரணத்தான் | karaṇattāṉ n. <>id. Accountant; கணக்கன். இந்நகரக்கரணத்தான். (S.I.I. iii, 23). |
கரணத்தியலவர் | karaṇattiyalavar n. <>id. +இயலவர். Account officers working under a king, one of eṇperu-n-tuṇaivar, q.v. அரசர்க்குரிய எண்பெருந்துணைவருள் ஒருவராகிய கணக்கர். (திவா.) |
கரணம் | karaṇam n. <>karaṇa. 1. Work by one's hand; கையாற் செய்யுந் தொழில். சித்திரக். கரணஞ் சிதைவின்று செலுத்தும் (சிலப். 3, 54). 2. Organ of sense; 3. Intellect; cognition; 4. Mind; 5. Marriage ceremony; 6. Coition; 7. A variety in dramatic action, a kind of dancing; 8. Somer-sault, tumbling heels over head; caper; 9. Instrument; 10. Implement, means, meterial, instrument; 11. Number; 12. (Astron.) One of the five elements of the pacāṅkam, a division of time, 11 in number, viz., 13. Title-deed, document (R.F.); 14. Accountant, karnam; 15. Ingredients mixed and used in connection with funeral rites, being seven, viz., the five products of the cow together with rice and rapeseed; |