Word |
English & Tamil Meaning |
---|---|
கரப்புநீர்க்கேணி | karappu-nīr-k-kēṇi n. <>id. +. Well containing water that is hidden from view, covered wells ; மறைகிணறு. பரப்புநீர்ப் பொய்கையுங் கரப்புநீர்க்கேணியும் (மணி, 19, 104). |
கரப்பொறி | kara-p-poṟi n. prob. கர-+. A kind of trap for catching monkeys; குரங்கு பிடிக்கும் ஒருவகைப்பொறி. |
கரபத்திரம் | kara-pattiram n. <>kara-patra. 1. Saw; ஈர்வாள. (திவா.) 2. Sword; |
கரபம் 1 | karapam n. <>karabha. 1. Metacarpus, the part of the hand between the wrist and fingers; மணிக்கட்டிலிருந்து விரல்வரையில் உள்ள பகுதி. யானைத் தடவுடைக் கையுங் கரபமும் (திருவிளை. உக்கிர. வேல்வளை. 39). 2. Elephant; |
கரபம் 2 | karapam n. prob. gardabha. Ass; கழுதை. (W.) |
கரபாகம் | kara-pākam n. <>kara + pāka. That stage in the preparation of any medicine by heating, when it reaches such consistency as would admit of a small pinch between wet fingers being easily rolled into a soft globule; சூடுபட்டு மிருதுவான குளிகைபோல் திரளுகிற மருந்துப்பாகம். (பைஷஜ. 9). |
கரம் 1 | karam part. cf. kāra. (Gram.) Expletive used in designating the short vocalic letters of the Tamil alphabet; ஓர் எழுத்துச் சாரியை. (நன். 126.) |
கரம் 2 | karam n. <>kara. 1. Hand; கை. கரமலர் மொட்டித்து (திருவாச. 4, 84). 2. Cubit; 3. Elephant's trunk; 4. Heap of palm leaves; 5. Ray of light; 6. Light; 7. Tax, duty; 8. That which causes, used only as the second member of some compound nouns, as |
கரம் 3 | karam n. <>khara. 1. Heat; உஷ்ணம். (W.) 2. Medicine for winning over a person; love philtre administered to a person without his knowledge or consent; 3. High price; 4 Ass; |
கரம் 4 | karam n. <>gara. Poison; நஞ்சு. கரம் போலக் கள்ளநோய் காணு மயல் (சிறுபஞ். 62) |
கரம் 5 | karam n. <>Karam. Name of an Upaniṣad; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
கரம்பதிவு | karam=pativu n. <>kara +. See கரம்பதிவுக் கணக்கு. . |
கரம்பதிவுக்கணக்கு | karam-pativu-k-kaṇakku. n. <>கரம்பதிவு+. Register of assessment; வரிப்பதிவுப்புத்தகம். |
கரம்பு | karampu n. perh. கரண். Waste land uncultivated though cultivable, of two kinds, viz., அனாதிக்கரம்பு and செய்காற்கரம்பு; சாகுபடி செய்யாத நிலம். Colloq. |
கரம்பை | karampai n. cf. கரம்பு. 1. Land with a surface layer of alluvium; (R.F.); வண்டல் பரந்த பூமி. 2. Hard, clayey soil; 3. Waste land; 4. A lowspreading, spiny, evergreen shrub; See சிறுகளா. (மலை.) |
கரமசாலை | kara-macālai n. <>U. garmmasāla. Pungent curry-stuff; கரமான மசாலை. (W.) |
கரமஞ்சரி | kara-macari n. <>khara-majari. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (பிங்.) . |
கரமுகிழ் - த்தல் | kara-mukiḻ v. intr. <>kara +. To join the palms of the hands in worship ; கைகூப்புதல். கரமுகிழ்ப்ப நின்னருளைக் கருத்தில் வைப்பாம் (தாயு. பொருள்வ. 10). |
கரலட்சணம் | kara-laṭcaṇam n. <>id. +.=(Nāṭya.) Gesticulation by the hands; கையாற்புரியும் அபிநயம். (பரத. பாவ. 19, தலைப்பு.) |
கரவடநூல் | karavaṭa-nūl n. <>கரவடம்+. A treatise on theft, probably adapted from a Sanskrit work on the subject by Karavaṭa who is better known as Karnīsuta; களவைப்பற்றிக் கூறும் நூல். (சிலப்.178, 180, அரும்.) |
கரவடம் | karavaṭam n. <>கர-. cf. karavaṭa. 1. Act or practice of stealing; களவு. (திவா.) 2. Deceit; |
கரவடர் | karavaṭar n. <>கரவடம். 1. Thieves; திருடர். (திவா.) 2. Deceivers, crafty persons; |
கரவம் | karavam n. Wild date-palm; See காட்டீந்து. . |
கரவர் | karavar n. <>கர-. Thieves; கள்வர். (பிங்.) |