Word |
English & Tamil Meaning |
---|---|
கரி 3 - த்தல் | kari- 11 v. tr. Caus. of கரி2-. 1. To char; எரித்துக் கரியாக்குதல். கரித்த மூன்றெயில் (கம்பரா. ஊர்த்தேடு. 44). 2. To season, ascurries, with ghee or oil and spices; |
கரி 4 - த்தல் | kari- 11 v. cf. கார்-. intr. 1. To be saltish to the taste; உப்புச்சுவைமிகுதல். இந்தக்கறி உப்புக்கரிக்கிறது. 2. To smart, as the eyes from oil or soap or chilly; 3. To feel an irritating sensation in the throat due to acidity of the stomach; 1. To nag, worry; to blacken; 2. To shun, despise; |
கரி 5 | kari n. <>karī nom. sing. of karin. Elephant; யானை. கொடுங்கரிக் குன்றுரித்து (திருவாச. 6, 19). |
கரி 6 | kari n. <>kharī She-ass; பெட்டைக் கழுதை. (நீலகேசி.) |
கரி 7 | kari n. [T. kari.] 1. Witness; சாட்சி கூறுவோன். இந்திரனே சாலுங் கரி (குறள், 25). 2. Proof, evidence, testimony; 3. Guest; |
கரிக்கட்டை | kari-k-kaṭṭai n. <>கரி1+. 1. Burnt, charred wood; எரிந்த கட்டை. 2. Red ebony of South India, m.tr., Diospyros hirsuta; |
கரிக்கண்டு | kari-k-kaṇṭu n. See கரிசலாங்கண்ணி. (மலை.) . |
கரிக்கணை | kari-k-kaṇai n. <>kari-kaṇā. cf. கரித்திப்பலி. Monkey-creeper. See யானைத்திப்பலி. (தைலவ. தைல. 74.) . |
கரிக்களி | kari-k-kaḷi n. <>கரி1 +. Charcoal poultice; புண்ணுக்குக் கட்டுங் களி. |
கரிக்காத்தாள் | kari-k-kāttāḷ n. <>கரி5 +. A village goddess. See அங்காளம்மன். . |
கரிக்காந்தல் | kari-k-kāntal n. <>கரி1+. 1. Anything charred or burnt; கருகிக் காந்தினது. (யாழ். அக.) 2. Cooked food charred and sticking to the pot; |
கரிக்காப்பு | kari-k-kāppu n. <>id. +. 1. Smearing charcoal on palmyra MSS. to get a clear relief of the writing; ஓலையெழுத்துவிளங்கக் கரி பூசுகை. Colloq. 2. Charred grass used for cleaning an idol; |
கரிக்காரன் | kari-k-kāraṉ n. <>id. +. Char-coal-dealer; கரிவியாபாரி. (W.) |
கரிக்கால் | kari-k-kāl n. <>கரி2-+. One whose advent brings calamity in its train, lit., one having an evil foot; நாசகா-ரன்-ரி. |
கரிக்காலன் | kari-k-kālaṉ n. <>id. +. Man whose advent brings calamity; நாசகாரன். |
கரிக்காலி | kari-k-kāli n. <>id. +. Woman whose advent brings calamity; துடைகாலி. |
கரிக்கிடங்கு | kari-k-kiṭaṅku n. <>கரி1+. 1. Pit or hole for burning wood for the production of charcoal; அடுப்புக்கரி உண்டாக்குமிடம். (W.) 2. Charcoal-bazaar; |
கரிக்குடல் | kari-k-kuṭal n. <>கரி2+. 1. The large intestine, rectum; மலக்குடல். (J.) 2. Sluggish intestine causing constipation; |
கரிக்குருவி | kari-k-kuruvi n. <>கரி1+. King-crow, glossy black bird with long forked tail, Dicrurus macrocercus; குருவிவகை. (திவா.) |
கரிக்கை 1 | karikkai n. <>கரி4-. A plant found in moist places. See கரிசலாங்கண்ணி. (மலை.) . |
கரிக்கை 2 | kari-k-kai n. <>கரி1 + கை. Hand the very touch of which is enough to cause loss or misfortune; கேடுவிளைக்குங் கை. |
கரிக்கொட்டான் | kari-k-koṭṭāṉ n.<> id. +. Jagged Jujube. See கருக்குவர்ய்ச்சி. . |
கரிக்கொள்ளி | kari-k-koḷḷi n. <>id. +. Charred brand; குறைகொள்ளி. (W.) |
கரிக்கோடிடு - தல் | kari-k-kōṭiṭu- v. intr. <>id. +. 1. To put a kari-k-kōṭu on the forehead; கருஞ்சாந்தால் நெற்றிக்குறியாகக்கோடு இடுதல். 2. To appear, as soft hair, on the chin of a young man; |
கரிக்கோடு | kari-k-kōṭu n. <>id. +. Upright streak of black pigment worn on the forhead by Mādhva Brāhmans; மாத்துவ்ர் நெற்றியில் இடும் கருவஞ்சாந்துக் கோடு. |
கரிக்கோலம் | kari-k-kōlam n.<>id. +. 1. Adorning a widow in weeds, within 10 days of her husband's death, as the last adornment she will ever receive; கணவன் இறந்ததுமுதற் பத்து நாள்வரை மனைவிக்குச் செய்யும் அலங்காரம். Brah. 2. Unclean state, dirtiness; 3. Sage-leaved Alangium. See அழிஞ்சில். (மலை.) |