Word |
English & Tamil Meaning |
---|---|
கரித்தண்ணீர் | kari-t-taṇṇīr n. <>கரி1+. Water in which begrimed pots have been washed; கரிச்சட்டியைக் கழுவிய நீர். W.) |
கரித்திப்பலி | kari-t-tippali n. <>karin+. Monkey-creeper. See யானைத்திப்பலி. (மலை.) . |
கரித்துண்டு | kari-t-tuṇṭu n. <>கரி1+. See கரித்துணி. (W.) . |
கரித்துணி | kari-t-tuṇi n. <>id. +. Dirty, begrimed cloth; அழக்குச்சீலை, கரித்துணி யாடையும் (பட்டினத் திருப்பா. பொது. 29). |
கரிதன் | karitaṉ n. He who is timid; அச்சமுள்ளவன். (பிங்.) |
கரிதூபம் | kari-tūpam n. <>கரி1+. Lampblack; கரிப்புகை. Tinn. |
கரிநாள் | kari-nāḷ n. <>id. +. Inauspicious day; the day after poṅkal; specified days after a death, etc.; தீயநாள். மலரடிகள்... வந்திக்க வராச்சிறுநாளே கரிநாள் (தனிப்பா. ii, 207, 495). |
கரிப்பான் | karippāṉ n. <>கரி4-. See கரிசலாங்கண்ணி. (மலை.) . |
கரிப்பிடித் - தல் | kari-p-piṭi- v. intr. <>கரி1+. To be begrimed with soot, as a pot on the fire; கரி பற்றுதல். Colloq. |
கரிப்பு | karippu n. <>கரி4-. 1. Fear; அச்சம். (திவா.) 2. Worrying, nagging; 3. Pungency; |
கரிப்புளிப்பு | kari-p-puḷippu n. <>கரி1+. Carbonic acid; கரியமிலம். Mod. |
கரிப்புறத்திணை | kari-p-puṟa-t-tiṇai n. <>கரி7+. Citing learned authors in support of one's opinion; சான்றோர் கூற்றைச் சாட்சியாகக் காட்டுகை. (தொன். வி. 161.) |
கரிப்பூட்டை | kari-p-pūṭṭai n. prob. கரி1+. Smut which blights maize crop; சோளப்பயிருக்கு வரும் ஒரு நோய். Loc. |
கரிபூசு - தல் | kari-pūcu- v. <>கரி1+.intr. To begrime with the smut of charcoal to avert the effects of the evil eye; To deliberately put a person to shame, to disgrace one; lit, to begrime a person's face; கண்ணூறு நீங்கக் கரிதீற்றுதல். ரிஷிகரிபூசுகிறான் (ஈடு, 7, 4, ப்ர.).--tr. அவமதித்தல். |
கரிபோக்கு 1 - தல் | kari-pōkku- v. intr. <>id.+. To paint the eyeilds with black collyrium; கண்ணுக்கு மை யெழுதுதல். கருங்கயலல்ல கண்ணேயெனக் கரிபோக்கினாரே (சீவக. 626). |
கரிபோக்கு 2 - தல் | kari-pōkku- v. intr. <>கரி7+. To give testimony; சான்று கூறுதல் அது கூறிக் கரிபோக்கினாராதலானும் (தொல். பொ. 649, உரை.) |
கரிமருந்து | kari-maruntu n. <>கரி+ Power used for fireworks so called from charcoal being an essential ingredient ; வெடிமருந்து. (W.) |
கரிமா | karimā n. <>garimā. nom. of gariman. The supernatural power of making one self heavy at will, one of aṣṭa-mā-citti, q.v.; அஷ்டமாசித்திகளுள் ஒன்றாகிய மிகக்கனமாகை. (பிங்.) |
கரிமுகவம்பி | kari-muka-v-ampi n. <>karin+. Boat with a figure of an elephant's head at the prow; யானைமுகவோடம். (சிலப். 13, 176.) |
கரிமுகன் | kari-mukaṉ n. <>id. + mukha. 1. Gaṇēša, the elephant-faced; விநாயகன். கரிமுகனடிபேணி (திருப்பு. 1). 2. An Asura named Gaja-mukha; |
கரிமுட்டைச்சுறா | kari-muṭṭai-c-cuṟā n. <>கரி1+. 1. A shark, grey, Carchaias dussumieri; கடல்மீன்வகை. 2. A shark attaining 12 ft. in length, Carchariās menisorrah; |
கரிமுண்டம் | kari-muṇṭam n. <>id. +. 1. Person of very dark complexion, lit., a lump, of charcoal; மிகக்கறுத்த ஆள். 2. Bogy mentioned to frighten children; |
கரிமுரடு | kari-muraṭu n <>id. +. Quenched fire-brand; கரிக்கட்டை. (W.) |
கரிமுள்ளி | kari-muḷḷi n. <>id. +. Indian Nightshade, m.sh., Solanmum indicum; நாய் முள்ளிச்செடி. |
கரிமூஞ்சிப்பாறை | kari-mūci-p-pāṟai n. <>id. +. Horse-mackerel, grey, attaining more than a foot in length, Coranx ire; சிறுகடல்மீன் வகை. |
கரியடுப்பு | kari-y-aṭuppu n. <>id. +. Charcoal stove; கரியிட்டெரிக்கும் அடுப்பு. Colloq. |
கரியநிம்பம் | kariya-nimpam n. <>கரு-மை+. Curry-leaf tree. See கறிவேம்பு. (தைலவ. தைல. 39.) . |
கரியபோளம் | kariya-pōḷam n. <>id. +. 1. Socotrine Aloe m.sh., Aloe succotrina; ஒரு பூடு. (பதார்த்த. 1051.) 2. Hepatic aloes; |
கரியமால் | kariya-māl n. <>id.+. Viṣṇu, who is dark in complexion; திருமால். கன்னி கரியமால் (கலித். 92, உரை). 2. A mineral poison. See காய்ச்சற்பாஷாணம். (மூ.அ.) |