Word |
English & Tamil Meaning |
---|---|
கருங்கண்ணிப்பாரை | karu-ṅ-kaṇṇi-p-pārai n. <>id.+. A kind of fish; ஒருவகைமீன். (W.) |
கருங்கந்து | karu-ṅ-kantu n. <>id.+. The second layer of chaff in a threshing floor, next to the poli-k-kantu; நெற்களத்தில் பொலிக்கந்துக்கு அடுத்துவிழும் பதர். (W.) |
கருங்கரப்பான் | karu-ṅ-karappāṉ n. <>id.+. A kind of dark eruption; கரப்பான்வகை. |
கருங்கல் | karu-ṅ-kal n.<>id.+. [M. karingallu] 1. Boulder of black rock, large granite stone; மலைக்கல். எருமையன்ன கருங்கல் (புறநா. 5,1). 2. Flint for striking fire; 3. Pebble or stone; |
கருங்கலம் | karu-ṅ-kalam n. <>id.+.[M.karingalam.] Earthen vessel; மட்பாத்திரம். கருங்கலந் தோய்விலாக் காமர் பூந்துறை (சீவக. 97). |
கருங்களா | karu-ṅ-kaḷā n. <>id.+. Seafish, large size, Cybium kuhlii; கடல்மீன்வகை. |
கருங்கற்றலை | karu-ṅ-kaṟṟalai n. <>id. +. 1. Umbrine, dark brown or coppery, attaining 9 in. in length, Umbrina dussumieri; கடல்மீன் வகை. 2. A sea-fish, silvery, attaining at least 3 ft. in length, Sciaena albida; |
கருங்காக்கணம் | karu-ṅ-kākkaṇam n. <>id. +. Mussel-shell Creeper, s.cl., Clitoriaternatea-typica; காக்கணவகை. |
கருங்காஞ்சொறி | karu-ṅ-kācoṟi n. <>id. +. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (L.) . |
கருங்காடு | karu-ṅ-kāṭu n.<>id. +. Cremation ground; சுடுகாடு. வெண்டலைக் கருங்காடுறை வேதியன் (தேவா. 39, 2). |
கருங்காடை | karu-ṅ-kāṭai n. <>id.+. Black-breasted Bustard Quail, Turnix taigoor; கறுப்புக் காடைப்புள். |
கருங்காணம் | karu-ṅ-kāṅam n. <>id.+. Black Horse-gram, Cassia absus; காட்டுக்கொள். (L.) |
கருங்காந்தள் | karu-ṅ-kāntaḷ n. <>id.+. Brown-backed acute-leaved mangrove, m. tr., Avicennia alba; கார்க்கோடல். |
கருங்காய் | karu-ṅ-kāy n. <>id. +. 1. Dark areca-nut, not yet truned red; இளம் பாக்கு. 2. Grain or fruit almost ripe; |
கருங்காய்ப்பனை | karu-ṅ-kāy-p-paṉai n. <>id. +. Palmyra tree bearing black fruit; பழம் கருநிறமாக இருக்கும் பனைவகை. (சங். அக.) |
கருங்கால் | karu-ṅ-kāl n. <>id. +. Blackleg, symptomatic anthrax; காலிற்காணும் மாட்டு வியாதிவகை. (கால்.வி. 23.) |
கருங்காலி | karu-ṅ-kāli n. <>id. + . [M.kariāli.] 1. Coromandel Ebony of Mysore, s. tr., Diospyros tupru; மாவிசேடம். அங்கருங்காலி சீவி (சீவக. 2473). 2. Ceylon Ebony, l. tr., Diospyros ebenum; 3. Strychnine tree. See எட்டி. (மலை.) |
கருங்காலித்தைலம் | karuṅkāli-t-tailam n.<>கருங்காலி+. Ebony oil, used for syphilitic diseases; மேக வியாதிகளுக்கு உபயோகிக்கும் தைல வகை. (W.) |
கருங்காவி | karu-ṅ-kāvi n. <>கரு-மை +. Blue Indian water-lily. See கருங்குவளை. (மலை.) . |
கருங்காற்சம்பான் | karu-ṅ-kāṟ-campāṉ n. <>id.+. A species of horse, having darkcoloured legs; கருநிறக்காலுள்ள குதிரைவகை. (அசுவசா.152.) |
கருங்காற்றலையன் | karu-ṅ-kāṟṟalaiya n. <>id.+. A kind of rat; எலிவகை. (W.) |
கருங்கிரந்தி | karu-ṅ-kiranti n.<>id.+ granthi. Cutaneous eruption of a black colour affecting children, cyanosis; உடம்பின்தோலைக்கருநிறமாக்குவதாய்க் குழந்தைகட்கு வருவதான ஒரு வகைநோய். (W.) |
கருங்கிளி | karu-ṅ-kiḷi n. <>id.+. Parrot having a black collar around its neck, Palacornis columboides; கிளிவகை. (திவா.) |
கருங்குங்கிலியம் | karu-ṅ-kuṅkiliyam n. <>id.+. Black Dammer, resin, Canarium strictum; ஒருவகை மருந்துப்பண்டம். (W.) |
கருங்குட்டம் | karu-ṅ-kuṭṭam n. <>id.+. Black leprosy; குட்டவகை. (கலித். 65, உரை.) |
கருங்குணம் | karu-ṅ-kuṇam n. <>id.+. Bad, malevolent disposition; தீக்குணம். கருங்குணத்தார் கேண்மை கழிமின் (சிறுபஞ். 26). |
கருங்குதிரையாளி | karu-ṅ-kutirai-y-āḷi n.<>id.+. Bhairava, so called because he rides on a black horse; வைரவன். (சூடா.) |
கருங்குந்தம் | karu-ṅ-kuntam n. <>id.+. A disease of the eye; கண்ணோய்வகை. (W.) |
கருங்கும்மெனல் | karu-ṅ-kummeṉal n. <>id.+. Phrase signifying pitch dark; மிக இருளுதற் குறிப்பு. (W.) |
கருங்குரங்கு | karu-ṅ-kuraṅku n. <>id.+. Black monkey, Semnopithecus johni; குரங்கு வகை. (சீவக.1893, உரை.) |