Word |
English & Tamil Meaning |
---|---|
கருஞ்சீரகம் | karu--cīrakam n. <>id.+. Black Cumin, Nigella sativa; சீரகவகை. (பதார்த்த.1034.) |
கருஞ்சுக்கான் | karu--cukkāṉ n. <>id.+. Black kanker; ஒருவகைக் கல். (W.) |
கருஞ்சுக்கிரன் | karu--cukkiraṉ n.<>id.+. Disease of the pupil of the eye; கண்ணோய் வகை. (சீவரட்.) |
கருஞ்சுண்டி | karu--cuṇṭi n. <>id. + . Species of Sensitive tree, l. sh., Mimosa rubicaulis; சுண்டிவகை. (மலை.) |
கருஞ்சுரை | karu--curai n. <>id.+. 1. A black gourd; சுரைவகை. (W.) 2. cf. கருஞ்சூரை. Hedge Caper Shrub. See காட்டுக்கத்திரி. (L.) |
கருஞ்சூரை | karu--cūrai n. <>id.+. 1. cf. கருஞ்சுரை. Hedge Caper shrub. See காட்டுக்கத்திரி. (W.) . 2. Orbicular-leaved Caper Shrub. See செங்கத்திரி. (மலை). |
கருஞ்செம்பை | karu--cempai n. <>id.+. Common Sesban l. sh., Seabania aegyptiaca; ஒருவகைச் செடி. (பதார்த்த. 533.) |
கருஞ்செய் | karu--cey n. <>id.+. Wet cultivation; நன்செய். நீர்நிலமுங் கருஞ்செய்புன் செயும் (Insc.). |
கருஞ்செவ்வாப்பு | karu--cevvāppu n. <>id.+. Unhealthy colour of a new infant, as patches of dark on the skin; பிறந்த குழந்தையின் நோய்க்குக்குறியான நிறவேறுபாடு. Loc. |
கருஞ்சேரா | karu--cērā n. <>id.+. A poisonous insect whose bite produces dark patches on the skin; கடித்தலால் உட்ம்பில் கறுப்பு நிறமான தடிப்பை உண்டாக்கும் ஒரு விஷப்பூச்சி. (சீவரட்.) |
கருஞ்சேவகம் | karu--cēvakam n.<>id.+. Daring act of heroism; பெருவீரச்செயல். கருஞ்சேவகஞ்செய்து செஞ்சோ றறச்செய்த கைம்மாறு (கலிங். 477, புதுப்.). |
கருஞ்சோளம் | karu--cōḷam n. <>id.+. Black maize, Sorghum vulgare; சோளவகை. (பதார்த்த. 833.) |
கருடக்கல் | karuṭa-k-kal n. <>garuda+. Medicinal stone or mineral used as a charm or antidote for snake-bite; பாம்பின் கடிவிஷத்தை நீக்குங் கல். (W.) |
கருடக்கை | karuṭa-k-kai n. <>id. + .(Nāṭya.) Gesture with both hands, as held together in worship; நின்று வணங்குதலைக் காட்டும் இணைக்கை வகை. (பரத. பாவ. 57.) |
கருடக்கொடி | karuṭa-k-koṭi n. <>id.+. 1. Flag with the figure of a white-headed kite; கருடத்துவசம். 2. Indian Birthwort. See பெருமருந்து. (மலை.) 3. Common Delight of the Woods. See குறிஞ்சா. (மலை.) |
கருடக்கொடியோன் | karuṭa-k-koṭiyōṇ n. <>id.+ கொடி. Viṣṇu, having the figure of karuṭaṉ on his banner; திருமால். (திவா.) |
கருடக்கொவ்வை | karuṭa-k-kovvai n.<>id.+. Mussel-shell Creeper, Clitoria ternatea; கொடிவகை. (W.) |
கருடக்கோவை | karuṭa-k-kōvai n. <>id.+. See கருடக்கொவ்வை. . |
கருடகம்பம் | karuṭa-kampam n. <>id.+. 1. Column in front of a Viṣṇu temple with an image of karuṭaṉ.fixed at the top; திருமால்கோயில் துவசத்தம்பம். கருடகம்பந்தனை வணங்கி (அரிசமய. பத்திசார. 92). 2. Lamp-post near the temple of karuṭaṉ; |
கருடகேதனன் | karuṭa-kētaṉaṉ n.<>id.+ kētana. See கருடக்கொடியோன். . |
கருடசாரம் | karuṭa-cāram n. Sea-salt; சிந்துலவணம். (W.) |
கருடசானம் | karuṭa-cāṉam n.<>garuda+dhyāna. See கருடத்தியானம். கருடசானத்திற் றீர் விடம்போல் (சி. போ. பா. 9, 2, 3). . |
கருடசேவை | karuṭa-cēvai n. <>id.+. A festival of Viṣṇu, as mounted on karuṭaṉ; கருடோற்சவம். Colloq. |
கருடத்தியானம் | karuṭa-t-tiyāṉam n.<>id.+. Imagining oneself to be karuṭaṉ and using charms on the patient bitter by a snake ; சர்ப்பவிஷத்தை நீக்கும் மருத்துவன் கருடனாகத் தன்னைப் பாவிக்கை.கருடத்தியானத்தின் விடமொழியும் (சி.சி. 9, 7). |
கருடத்துவசன் | karuṭa-t-tuvacaṉ n.<>id.+dhvaja. See கருடக்கொடியோன். . |
கருடத்தொண்டை | karuṭa-t-toṇṭai n.<>id.+. See கருடக்கொவ்வை. (W.) . |
கருடத்தொனி | karuṭa-t-toṉi n. <>id.+. A musical mode; ஓர் இராகம். |
கருடதரிசனம் | karuṭa-taricaṉam n.<>id.+. Worship of the white-headed kite; கருடபட்சியைக்கண்டு வணங்குகை. Colloq. |
கருடதிசை | karuṭa-ticai n. <>id.+. (Astrol.) East, being the quarter of karuṭaṉ; கீழ்த்திசை. (W.) |
கருடநதி | karuṭa-nati n. <>id.+. A river in South Arcot District which, according to Hindu mythology, is said to have sprung out of the earth where the karuṭaṉ scratched with his beak; கெடில நதி. Loc. |