Word |
English & Tamil Meaning |
---|---|
கருத்துக்கொள்(ளு) - தல் | karuttu-k-koḷ- v. intr. <>கருத்து+. To have an inclination for; to set one's mind upon; நோக்கமுறுதல். |
கருத்துடையடை | karuttuṭai-y-aṭai n. <>id.+. (Rhet.) Figure of speech in which epithets and phrases are used significantly to add force to a statement; அபிப்பிராயத்தோடுகூடிய விசேடணத்தை உடையதாகிய அலங்காரம். அணியி. 24.) |
கருத்துடையடைகொளி | karuttuṭai-y-aṭai-koḷi n. <>id.+. (Rhet.) Figure of speech in which the word or expression qualified by significant epithets has in itself a suggestive force; அபிப்பிராயத்தோடுகூடிய விசேடியத்தை உடையதாகிய அலங்காரம். (அணியி. 25.) |
கருத்துப்பிசகு | karuttu-p-picaku n. <>id.+. Erroneous interpretation; தவறான தாற்பரியம். (W.) |
கருத்துப்பிரி - தல் | karuttu-p-piri- v. intr.<>id.+. (W.) 1. To occur to the mind, as an idea, a plan; மனத்து உதித்தல். 2. To be clear to the mind; to be well understood; |
கருத்துப்பொருள் | karuttu-p-poruḷ n.<>id.+. Object of thought, a thing imagined, dist. fr. காட்சிப்பொருள்; மனத்தாற் கருதப்பட்ட பொருள். (தொல்.பொ.1, உரை.) |
கருத்துரை | karutturai n. <>id.+உரை. Gist, substance of a text; தாற்பரியம். (நன்22,உரை.) |
கருத்தெடு - த்தல் | karutteṭu- v. intr. <>id.+எடு-. (W.) 1. To plan a project; சூழ்ச்சி செய்தல். 2. To find out the purport of a passage; |
கருத்தொட்டு - தல் | karuttoṭṭu- v. intr.<>id.+ஒட்டு-. (W.) 1. To construe a difficult passage, put a construction on a passage; பொருள் காணுதல். 2. To interpret a passage after supplying the word or words understood; 3. To read one's own meaning in a passage and to distort the idea intended by the author; 4. To concentrate the mind; |
கருதல் | karutal n. <>கருது-. (Log.) Inference; அனுமானம். அளவை காண்டல் கருத லுரை (சி.சி. அளவை.1). |
கருதலர் | karutalar n. <>id.+அல் neg.+. Foes, enemies; பகைவர். கருதலர் பெருமை (கம்பரா. திருவடி.10). |
கருதலளவை | karutal-aḷavai n. <>கருதல்+. (Log.) Law of Inference; அனுமானப்பிரமாணம். (குறள், 930, உரை.) |
கருதலார் | karutalār n. <>கருது-+அல் neg.+. See கருதலர். கருதலார் புரமூன் றெரித்தானை (தேவா.178, 1). . |
கருதாதார் | karutātār n. <>id.+ ஆ neg.+. See கருதலர். கருதாதார் மதிற்குமரிமேல் (பு. வெ. 6,13, கொளு). . |
கருதார் | karutār n. <>id.+ id. +. See கருதலர். கருதார் குலக்கட்டை வாங்கி (உத்தரரா. திருவோலக். 6). . |
கருது - தல் | karutu- 5 v. tr. [M. karutu.] 1. To intend, purpose, design; எண்ணுதல். (பிங்.) 2. To recall to mind, recollect; 3. To judge calmly, take heed; 4. To suppose, consider, imagine; to take it into one's head; 5. To regard; 6. To wish for, desire; 7. (Log.) To infer, deduce; 8. To ponder, think deeply, meditate; 9. To resemble; |
கருந்தகரை | karu-n-takarai n. <>கரு-மை+. A species of Fetid Cassia plant; செடிவகை. (W.) |
கருந்தண்பை | karu-n-taṇpai n. <>id.+ M. tambaham. See கறுப்புத்தாமரம். (L.) . |
கருந்தரை | karu-n-tarai n.<>id.+. Waste land; பாழ்நிலம். (ஈடு.) |
கருந்தலை | karu-n-talai n. <>id.+. 1. A quarter, the fraction 1/4; கால்பாகம். கருந்தலை செந்தலை தங்கா றிரிக்கால் (தனிப்பா. 1, 87, 171). 2. End, close; 3. Beginning; |
கருந்தனம் | karu-n-taṉam n. <>id.+. 1. Gold; பொன். (திவா.) 2. Money; |
கருந்தாது | karu-n-tātu n. <>id.+. Iron; இரும்பு. கருந்தாது கொட்கு மிருஞ்சிலை (ஞானா. 57, 29). |
கருந்தாமக்கொடி | karu-n-tāma-k-koṭi n. <>id.+. A mountain creeper; சிறுசெங்குரலி என்னும் மலைக்கொடி. (குறிஞ்சிப். 82, உரை.) |
கருந்தாரை | karu-n-tārai n. <>id.+dhārā. Black streak on an ox; மாட்டின் கரியரேகை. (W.) |