Word |
English & Tamil Meaning |
---|---|
கருநீலப்பிறப்பு | karu-nīla-p-piṟappu n. <>id.+. (Jaina.) A state of existence just above the lowest existence in a narakam, one of six kinds of births; நரகசன்மத்துக்குச் சிறிதும் மேற்பட்ட பிறவி. கரும்ம்பிறப்புங் கருநீலப் பிறப்பும் (மணி. 27, 150). |
கருநூல் | karu-nūl n. <>கரு3.+. Treatise on black magic; சூனியநூல். (W.) |
கருநெய்தல் | karu-neyal n. <>கரு-மை+. Blue Indian water-lily, Nymphaea stellata; நீலோற்பலம். (பிங்.) |
கருநெருஞ்சி | karu-neruci n. <>id.+. Black Nerinjy, a prostrate herb, Indigofera schinata; நெருஞ்சிவகை. |
கருநெல்லி | karu-nelli n. <>id.+. Small papery-downy-glabrate elliptic-oblong-obtuse-or-acute-leaved feather-foil, Phyllanthus reticulatus; செடிவகை. (பதார்த்த. 226) |
கருநெறி | karu-neṟi n. <>id.+ நெறி.= kṟṣṇa-vartman. Fire; நெருப்பு. (பிங்.) |
கருநொச்சி | karu-nocci n. <>id.+. 1. Willow-leaved Justicia, m.sh., Justicia gendarussa; நொச்சிவகை. (பைஷஜ. 50.) 2. [M. karunocci.] Three-leaved Chaste tree, s. tr., Vitex trifolia; 3. A plant, dark-leaved evergreen, planted in gardens by the side of walks, Gendarussa vulgaris; |
கருநொச்சில் | karu-noccil n. <>id.+. See கருநொச்சி. (மலை.) . |
கருநோய் | karu-nōy n. <>id.+. A kind of mange in cattle; மாட்டுநோய்வகை. (J.) |
கருப்பக்கிருகம் | karuppa-kirukam n. <>garbha+. 1. See கர்ப்பக்கிருகம். . 2. Inner apartment of a palace; the queen's apartment; |
கருப்பங்கொல்லை | karuppaṅ-kollai n. <>கரும்பு+. Sugar-cane field; கரும்புத்தோட்டம். |
கருப்பச்சிதைவு | karuppa-c-citaivu n. <>garbha+. Abortion; கருவழிவு. |
கருப்பஞ்சாற்றுக்கடல் | karuppa-cāṟṟu-k-kaṭal n. <>கரும்பு+சாறு+. The ring-shaped sea of sugar-cane juice, one of eḻu-kaṭal, q.v.; எழுகடல்களு ளொன்று. |
கருப்பட்டி | karuppaṭṭi n. <>id.+ அட்டு. [M. karippaṭṭi.] 1. Jaggery made from palmyra juice; பனைவெல்லம். சீவன் கருப்பட்டியோ (இராம நா.உயுத்.69). 2. Candy made from palmyra juice; 3. Jaggery; |
கருப்பணி | karuppaṇi n. <>id.+ நீர். Sweet toddy of the palmyra, drawn into an earthen vessel smeared within with lime to prevent fermentation; பனையினின்று இறக்கும் பதநீர். (J.) |
கருப்பத்துளை | karuppa-t-tuḷai n.<> garbha +. Inner hole or cavity formed at the first formation of a coral, a flaw in coral; பவளங்கள் உண்டாம்போதே காணும் உட்டுளையாகிய குற்றம். கருப்பத்துளையவுங் கல்லிடை முடங்கலும் (சிலப்.14,197). |
கருப்பதீக்கை | karuppa-tīkkai n. <>id.+. Religious observance of allowing one's hair to grow during the periods of one's wife pregnancy; மனைவியின் கர்ப்பகாலத்து மயிர்வளர்க்கை. பாற்படுங் கருப்பதீக்கையன் (சேதுபு. சேதுபல.42). |
கருப்பதீட்சை | karuppa-tītcai n. <>id.+. See கருப்பதீக்கை. . |
கருப்பந்தெப்பம் | karuppan-teppam n. <>கரும்பு+. Raft made of wild sugar-cane reeds; பேய்க்கரும்புகொண்டு செய்யப்படும் மிதவை. (பதிற்றுப். 87, 4, உரை.) |
கருப்பந்தோகை | karuppan-tōkai n. <>id.+. Leaf of the sugar-cane plant; கரும்பின் இலை. Loc. |
கருப்பநாள் | karuppa-nāḷ n. <>garbha +. The ninth day after child-birth; பிறந்த ஒன்பதாம் நாள். (யாழ் அக.) |
கருப்பநிச்சிதம் | karuppa-niccitam n. <>id.+. Definite understanding, in advance, of a matrimonial alliance, even while the would-be bride or bridegroom is as yet in the womb; கருப்பகாலத்தேயே செய்யப்பட்ட விவாகநிச்சயம். (பஞ்.) |
கருப்பநீர் | karuppanīr n. <>கரும்பு+நீர். 1. Sugar-cane juice; கருப்பஞ்சாறு. 2. See கருப்பணி. (J.) |
கருப்பபாதம் | karuppa-pātam n. perh.garbha-pāta. Red Indian laburnum. See செம்முருங்கை. (மலை.) . |
கருப்பம் | karuppam n. <>garbha. That which is suggestive, prognosticative; உட்பொருளாகக்கொண்டது. (சிலப். 17, 442.) |
கருப்பம்பாகு | karuppam-pāku n. <> கரும்பு+. Sugar-cane treacle, medicated molasses; வெல்லப்பாகு. (W.) |
கருப்பாசயம் | karuppācayam n. <>garbha+ā-šaya. See கர்ப்பாசயம். சிறைக்கருப்பாசயஞ் சேரா (பதினொ. திருவிடைமரு. மும்மணிக்.1). . |