Word |
English & Tamil Meaning |
---|---|
கருந்தாள் | karu-n-tāḷ n. <>id. +. Stubble; அறுபட்ட தாளடி. Tp. |
கருந்தாளி | karu-n-tāḷi n. <>id.+. Gaub. See காட்டத்தி. . |
கருந்திடர் | karu-n-tiṭar n. <>id.+. High mound, hillock; பெரிய மேடு. (W.) |
கருந்தினை | karu-n-tiṉai n. <>id.+. Black Italian millet, Panicum indicum; பைந்தினை. கருந்தினை யோம்பக் கடவுட் பராவி (திருக்கோ.279). |
கருந்துகிலோன் | karu-n-tukilōṉ n. <>id.+. cf. ṅīlāmbara. Balarama, so called because he wore, accg. to mythology, two blue clothes presented to him by Jumna; பலராமன். (பிங்.) |
கருந்தும்பி | karu-n-tumpi n.<>id.+. 1. A sea-fish, red, attaining 14 in. in length, Pterois milis; கடல்மீன்வகை. 2. A sea-fish, brownish black, Gymnapistus niger; 3. Coromandel ebony. See தும்பிலி. |
கருந்தும்பை | karu-n-tumpai n. <>id.+. 1. A very soft woolly plant. See பேய்மருட்டி. . 2. Coromandel ebony. See கருங்காலி. (L.) 3. An ornamental plant, Angelonia salicariafolia; 4. South Indian pine, l. tr., Podocarpus latifolia; |
கருந்துவரை | karu-n-tuvarai n.<>id.+. 1. Angola pea. See மலைத்துவரை. . 2. Blackwood. See தோதகத்தி. 3. Bourdillon's apple-fruited ebony, l.tr., Diospyros bourdillonī; 4. Topasi ebony of Bengal, m. tr., Diospyros topasia; 5. Panicleflowered ebony, m. tr., Diospyros Paniculata; |
கருந்துழாய் | karu-n-tuḻāy n. <>id.+. See கருந்துளசி. . |
கருந்துளசி | karu-n-tuḷaci n. <>id. +. Purple-stalked basil, m.sh., Ocimum sanctumtypica; துளசிவகை. (பதார்த்த.304.) |
கருந்தேள் | karu-n-tēḷ n. <>id.+. Black scorpion; கறுப்புத்தேள். |
கருந்தொழில் | karu-n-toḻil n. <>id.+. 1. Strong workmanship; வலிய தொழில். கருந்தொழில் வினைஞர் (சிறுபாண். 257). 2. Foul deed, dark assassin's work, killing; |
கருந்தோழி | karu-n-tōḻi n. <>id.+dōlā. Indian indigo. See அவுரி. (மலை.) . |
கருநச்சுழி | karunaccuḻi n. Goby, a sea-fish, greenish, stone-coloured, attaining more than 6 in. in length, Gobius gymnocephalus; கடல்மீன்வகை. |
கருநடம் | karu-naṭam n. <>கருநாடகம். See கன்னடம். கருநடப்பேர் வெள்ளத்து விழாமல் (பாரத. சிறப்புப்.18). . |
கருநந்து | karu-nantu n. <>கரு-மை+. A species of snail; நத்தைவகை. (பிங்.) |
கருநாக்கு | karu-nākku n. <>id.+. 1. Vile tongue; தீய நாக்கு. 2. Evil-tongued-person; |
கருநாகப்படலம் | karu-nāka-p-paṭalam n. <>id.+ prob. nāga+. Iritis; கண்ணோய்வகை. (சீவரட்.262.) |
கருநாகம் | karu-nākam n. <>id.+ nāga. 1. Black cobra; கிருஷ்ணசர்ப்பம். 2. Rāhu the ascending node, considered as a planet; 3. Lead, plumbago; |
கருநாங்கு | karunāṅku n. Long-pointed broad-leaved Ceylon ironwood, l. tr., Mesua ferrea-typica; மரவிசேடம். (L.) |
கருநாசம் | karu-nācam n. prob. கரு3+. Rosy-flowered leadwort, m. cl., Plumbago rosea; செங்கொடுவேலி. (மலை.) |
கருநாடகம் | karu-nāṭakam n. prob. கரு-மை+நாடு+அகம். 1. See கன்னடம். . 2. See கர்நாடகம், 2. 3. Music of South India; |
கருநாடர் | karu-nāṭar n.prob. id+நாடு. Kanarese people; கன்னடநாட்டார். கொடுங் கருநாடரும் (சிலப். 25, 156). |
கருநார் | karu-nār n. <>கரு-மை+. Black palmyra fibre; பனையின் கறுத்த நார். (W.) |
கருநார்ப்பெட்டி | karu-nār-p-peṭṭi n. <>id.+. Basket made of good black fibre; பனையின் கருநாரால் முடையப்பட்ட பெட்டி. (W.) |
கருநாரை | karu-nārai n. <>id.+. Black ibis, Geronticus papillosus; நாரைவகை. (பிங்.) |
கருநாவி | karu-nāvi n. <>id.+. Black species of aconite; நாவிப்பூடுவகை. (பதார்த்த.1056.) |
கருநாழிகை | karu-nāḻikai n.<>id.+nādikā Night; இரவு. கருநாழிகைதான்... விடியாவிடின் (கம்பரா. கடிமண.5). |
கருநாள் | karu-nāḷ n.<>id.+. Inauspicious day. See கரிநாள். தொழாமற் செலுத்திய நாள் கருநாள் (அருட்பா, i, வடிவுடை.38). . |
கருநிமிளை | karu-nimiḷai n. <> id. +. Antimony, sulphuret of antimony; அம்பர்வகை. (W.) |
கருநிலம் | karu-nilam n. <>id.+. Barren soil; useless, waste land; பயன்படாத நிலம். (திவா.) |