Word |
English & Tamil Meaning |
---|---|
கருப்பாதானம் | karuppātāṉam n.<>id.+.ā-dhāna. See கர்ப்பாதானம். இருதுசங்கமனங் கருப்பாதானம் புஞ்சவனம் (திருவானைக் கோச்செங். 14). . |
கருப்பாலை | karuppālai n. <>கரும்பு+ஆலை. Sugar-cane press; கரும்பாட்டும் ஆலை. கருப்பாலைச் சோதி நெடும்புகை (சேக்கிழார்.பு.74). |
கருப்பிண்டம் | karu-p-piṇṭam n. <>கரு3+. Foetus; கருப்பத்திலுள்ள பிண்டம். Colloq. |
கருப்பிணி | karuppiṇi n. <>garbhiṇī Pregnant woman. See கர்ப்பிணி. . |
கருப்பு | karuppu n. <>கரு-மை. [T. karuvu.] Famine, dearth, scarcity; பஞ்சம். மழையின்றிப் பசையில் கருப்புவர (சேதுபு. வேதாள.20). |
கருப்புக்கட்டி | karuppu-k-kaṭṭi n. <>கரும்பு+. 1. Sugar-cane jaggery;. வெல்லம். (திருவானைக். திருநீற்று. 13.) 2. Palmyra jaggery; 3. Rock candy; |
கருப்புக்கிட்டி | karuppu-k-kiṭṭi n. <>கருப்பு+. A pest that affects the maize or Indian corn; சோளப்பயிர்க்கு வரும் ஒருவகை நோய். Loc. |
கருப்புரம் | karuppuram n. <>karpūra. See கர்ப்பூரம். கருப்புரந் துதைந்த கல்லுயர் மணித்தோள் (கல்லா.10). . |
கருப்புவில் | karuppu-vil n. <>கரும்பு+. Sugar-cane bow of the God of love; மன்மதனது கரும்பு வில். சுருப்புநாண் கருப்புவி லருப்புக்கணை தூவ (மணி.18, 105). |
கருப்புவில்லி | karuppu-villi n. <> id. +. Kāma, the God of love, whose bow is made of sugar-cane; மன்மதன். மீன்றிகழ் கொடியனைக் கருப்புவில்லியை (மணி.20, 92). |
கருப்பூர்வழக்கு | karuppūr-vaḻakku n. Undecided suit; தீராத வழக்கு. (W.) |
கருப்பூரம் | karuppūram n. <>karpūra. See கர்ப்பூரம். தொகுகருப்பூரமுஞ் சுமந்துடன் வந்த (சிலப். 14, 109). . |
கருப்பேந்திரம் | karuppēntiram n. <>கரும்பு+yantra. Sugar-cane press; கரும்பாலை. கருப்பேந்திர முதலாயின கண்டாள் (கம்பரா. கங்கை. 6). |
கருப்பை 1 | karu-p-pai n. <>கரு3+பை. Womb. See கர்ப்பாசயம். கருப்பைக்குண் முட்டைக்கும் (தனிப்பா.i, 120, 3). . |
கருப்பை 2 | karuppai n.perh. கரு-மை. 1. Rat; எலி. அணிலொடு கருப்பை யாடாது (பெரும்பாண். 85). 2. Palmyra, that bears black fruit; |
கருப்பொருள் | karu-p-poruḷ n. <>கரு3+. 1. God the efficient Cause, the originator of all things; காரணவஸ்து. அந்தக்கரணங் கடந்த கருப் பொருளே (பதினொ. திருக்கழும. மும்மணிக். 3). 2. (Akap.) Distinctive regional features of each of the aintiṇai or five tracts of land, embracing 14 items, viz., |
கருப்போட்டம் | karuppōṭṭam n. <>garbha+ஒட்டம். See கர்ப்போட்டம். . |
கரும்படை | karu-m-paṭai n. <>கரு-மை+ Ringworm; மேகப்படை. (M. L.) |
கரும்பணி | karumpaṇi n. <>கரும்பு+அணி. Figure of sugar-cane drawn with sandal paste on women's arms and breasts, an adornment for women in ancient times; பெண்பாலாரின் தோள்மார்புகளில் சந்தனக்குழம்புமுதலியவற்றாற் கரும்பின்வடிவமாக எழுதப்படுங் கோலம். அன்றுதானீத்த கரும்பணி வாட (கலித். 131, 29). |
கரும்பருந்து | karu-m-paruntu n. <>கரு-மை+. Spotted eagle, Aquila navia; பருந்து வகை. (W.) |
கரும்பளிங்கு | karu-m-paḷiṅku n. <>id.+ Basalt, crystalline form of dolerite; பளிங்குக் கல்வகை. (M.M. 247.) |
கரும்பன் | karumpaṉ n. <>கரும்பு. God of love who has a sugar-cane bow; கரும்பை வில்லாகவுடைய மன்மதன். சாற்றுக் கரும்பனைக் கூற்றென்னும் (அஷ்டப். அழகரந்.17). |
கரும்பனசை | karu-m-paṉacai n. <>கரு1+. A venomous kind of snake; ஒருவகை விடப்பாம்பு. Loc. |
கரும்பனையன் | karu-m-paṉaiyaṉ n. <>id.+. Krait, as black in colour, Bungarus caruleus; பாம்புவகை. (W.) |
கரும்பாடு | karu-m-pāṭu n. <>id.+ படு-. Margin of a tank between the bund and the water limit, usually clayey; ஏரியின் நீர்ப்பிடிவரையுள்ள நிலம். Rd. |
கரும்பாம்பு | karu-m-pāmpu n. <>id.+. 1. Black snake; கிருஷ்ண சர்ப்பம். 2. Rāhu, the ascending node, which accg. to mythology is regarded as a serpent; |
கரும்பாலை 1 | karumpālai n. <>கரும்பு+ஆலை. Sugar-cane press; கரும்பாட்டும் யந்திரம். Colloq. |
கரும்பாலை 2 | karu-m-pālai n. <>கரு1+ பாலை. Obtuse-leaved Ape Flower, m. tr., Mimusops roxburghiana; பாலை மரவகை. |
கரும்பித்தம் | karu-m-pittam n.<>id. + (W.) 1. Black bile; ஒருவகைப் பித்தநீர். 2. Madness, dementia; |