Word |
English & Tamil Meaning |
---|---|
கருமம் 2 | karumam n. <>gharma. Heat; உஷ்ணம். (பிங்.) |
கருமமல்லாச்சார்பு | karumam-allā-c-cār-pu n. <>karman +. Relationship of the subject of a verb with its object denoted either by the accusative case or locative case, as in அரசரைச்சார்ந்தான் or அரசர்கட்சார்ந்தான்; செயப்படு பொருளையேனும் ஆதாரத்தையேனும் கருத்தா மெய்யுறுதலின்றி வரும் சார்பு. (தொல். சொல். 84.) |
கருமமீமாஞ்சை | karuma-mīmācai n. <>id. +. System of Indian philosophy whose founder or the earliest systematic exponent was Jaimini and which consists of an enquiry into the nature of dharma according to the Karma-kāṇda of the Vēda; பூர்வமீமாஞ்சை. |
கருமமூலம் | karuma-mūlam n. <> id. +. Darbha grass. See தர்ப்பை. (மலை.) . |
கருமயாகம் | karuma-yākam n. <>id. +. Due performance of all religious duties enjoined for daily practice regarded in itself as a religious sacrifice, one of ai-vakai-yākam, q.v.; நித்தியகருமானுஷ்டானம், அறைந்த கருமயாக முதலைந்து மொன்றுக்கொன் றதிகம் (சிவதரு. ஐவகை. 8). |
கருமயோகம் | karuma-yōkam n. <>id.+. 1. Performance of rites and duties without any expectation of fruits therefrom; நிஷ்காமியமான கருமானுஷ்டானம். (பகவற். அத். 3.) 2. Yōga consisting in the systematic control of breath practised for the attainment of longevity; |
கருமருது | karu-marutu n. <>கரு-மை+. Brown-hard-felted-backed-leaved Winged Myrobalan, l. tr., Terminalia tomentosa; மருதமர வகை. |
கருமலை | karu-malai n. <>id.+. Mountain containing iron ore; இரும்புக்கனியுள்ள மலை. (W.) |
கருமவதிகாரர் | karuma-v-atikārar n. <>karman+. Heads of the various departments of administration in a State; இராச்சியகாரியம் நடத்துந் தலைவர். (பிங்.) |
கருமவிதிகள் | karuma-vitikaḷ n. <>id.+. See கருமவதிகாரர். (திவா.) . |
கருமவியாதி | karuma-viyāti n. <>id.+. Incurable disease, believed to be the result of the sins committed in previous births; முன்செய்த தீவினையால் உறும் தீராநோய். Colloq. |
கருமவினைஞன் | karuma-viṉaiaṉ n. <>id.+. One who officiates as priest in conducting the religious rites and ceremonies performed by the householder; புரோகிதன். கருமவினைஞருங்கணக்கியல் வினைஞரும் (சிலப். 26, 40). |
கருமன் | karumaṉ n. cf. karma-kara. Blacksmith; கொல்லன். (பிங்.) |
கருமா | karu-mā n. <>கரு-மை + மா. 1. Hog, பன்றி. கருமாலுங் கருமாவாய் (பெரியபு. திருஞான. 1003). 2. Elephant; |
கருமாதி | karumāti n. <>karman + ādi. Final funeral obsequies; funeral ceremonies, etc. See கருமாந்தரம். Colloq. . |
கருமாதிகாரி | karumātikāri n. <>id. + adhi-kārin. 1. Superintendent, minister; head of a department; காரியத்தலைவன். 2. One entitled to perform the funeral rites; |
கருமாதிபதி | karumātipati n. <>id.+ adhipati. (Astrol.) The lord of that sign of the Zodiac which is the tenth from the ascendant; ஜாதகன் பிறந்த இலக்கினத்திற்குப் பத்தாம் இடத்து அதிபதி. |
கருமாந்தம் | karumāntam n. <>id. + anta. See கருமாந்தரம். . |
கருமாந்தரம் | karumāntaram n. <>id. + antara. Final ceremony, usually performed among non-Brahmans, on the 16th day after death, as the end of funeral obsequies; இறந்தவர் பொருட்டுப் பதினாறாநாட்செய்யுஞ் சடங்கு. |
கருமாநிமிளை | karu-mā-nimiḷai n. <>கரு-மை+. Black bismuth, used as antimony to blacken the eye lids; கண்களுக்கு அஞ்சனமிடுதற்குரிய அம்பரைவகை. |
கருமாயம் | karu-māyam n. <>கரு-மை+. 1. Exorbitant price; அதிகவிலை. கத்தரிக்காய் கருமாயமாய் விற்கிறது. Colloq. 2. That which is scarce; |
கருமாறிப்பாய் - தல் | karu-māṟi-p-pāy- v. intr. <> கரு3+. To do a very difficult and hazardous feat as jumping between two impaling stakes into a tank from a high place; கருமாறிப் பாய்ச்சல்போன்ற அரியசெயலைச் செய்தல். கருமாறிப் பாய்ந்தாலும் பேற்றுக்குத் தக்கது போராதாய் (திவ். திருவிருத். 21, வ்யா.). |
கருமாறிப்பாய்ச்சல் | karu-māṟi-p-pāyccal n. <>id.+. Very difficult and hazardous feat, as that of jumping from a high place between two impaling stakes planted into the tank in the temple of Kāmākṣī at Conjeevaram; காஞ்சீபுரத்துக் காமாட்சிகோயிற் குளத்துள் நாட்டப்பட்ட இரண்டு கழுக்கோல்களின் இடையே உயரமான இடத்தினின்றுந் தவறாது குதிக்கை. கருமாறிப்பாய்ச்சல் யார்க்கு மினிது (தனிப்பா. i, 21, 37). |