Word |
English & Tamil Meaning |
---|---|
கருவழிவு | karu-v-aḻivu n. <>கரு3+ அழிவு. [M. karuvaḻivu.] Abortion; கருப்பச்சிதைவு. |
கருவளைச்சுக்கான் | karu-vaḷai-c-cukkāṉ n. <>கரு-மை+. Black limestone; கருஞ்சுக்கான் கல். (W.) |
கருவறி - தல் | karu-v-aṟi- v. intr. <>கரு3+அறி-. To attain the age of discretion; பகுத்தறியும் பருவமடைதல். (W.) |
கருவறு - த்தல் | karu-v-aṟu- v. tr. <>id.+. To ruin, as an enemy; to exterminate, as a family; நிர்முலமாக்குதல். தானவரைக் கருவறுத்து (கம்பரா. சூர்ப்ப. 111). |
கருவறை | karu-v-aṟai n. <>id.+. Womb; கர்ப்பக்குழி. ஆணவக் கருவறையி லறிவற்ற ... குழவியைப்போல் (தாயு. சின்மயா. 6). |
கருவன் 1 | karuvaṉ n. <>garva. Arrogant man; செருக்கன். |
கருவன் 2 | karuvaṉ n. <>gṟ. (=to swallow.) Destroyer; சங்காரமூர்த்தி. கருவனாய்க் காலனை முன்காய்ந்த நாளோ (தேவா. 731, 1). |
கருவா | karuvā n. 1. Cinnamon tree, m. tr., Cinnamomum zeylanicum; இலவங்கப் பட்டைமரம். 2. Cassia Cinnamon, Cinnamomum macrocarpum; 3. Clove tree, m. tr., Eugenia caryophyllata; |
கருவாகை | karu-vākai n. <>கரு-மை+. Fragrant sirissa, l. tr., Albizzia odoratissima; வாகைமரவகை. (பதார்த்த. 223.) |
கருவாட்டுவாலி | karu-v-āṭṭu-vāli n. prob. id. + ஆட்டு-+. King crow. See வலியான். (W.) . |
கருவாடு | karu-vāṭu n. prob. id. + வாடு-. [T. karavādu, M. karuvāṭu, Port. cravado.] Salted and dried fish; உப்புமீன்கண்டம். (பதார்த்த. 921.) |
கருவாப்பட்டை | karuvā-p-paṭṭai n. <>கருவா +. Cinnamon, the dry bark of Cinnamomum zeylanicum; இலவங்கப்பட்டை. (மூ.அ.) |
கருவாமுப்பு | karu-v-ām-uppu n. prob. கரு3+ஆம்+. Saltpetre; வெடியுப்பு. (W.) |
கருவாலி | karuvāli n. (W.) 1. Ceylon tea, l. tr., Blaodendron glaucum; மரவகை. 2. Partridge. See கதுவாலி. |
கருவாழை | karu-vāḻai n. <>கரு-மை+. A plantain tree bearing small fruit of dark colour, from 200 to 400 to the bunch; சிறியனவும் கருமையுடையனவுமாகிய பழங்கள் ஒருகுலையில் 200 முதல் 400 வரை உண்டாகக்கூடிய வாழைச்சாதி. (G. Sm.D. iv, 216.) |
கருவாளி | karu-v-āḷi n. <>கரு3 + ஆள்-. Sagacious person, genius; புத்திமான். (யாழ்.அக.) |
கருவாற்றிருக்கை | karu-vāṟṟirukkai n. <>கரு-மை+வால்+திருக்கை. Broad flat sea-fish, greyish olive, attaining upwards of 6 ft. in width, with whip-like tail three or four times as long as the body, Aetobatis narinari; சாட்டை போன்று தட்டையும் வால்நீட்சியுமுடைய கடல் மீன்வகை. |
கருவி | karuvi n. prob. கரு3. [M. karuvi.] 1. Instrument, tool, implement; ஆயுதம். கருவி கொண்டு ... பொருள்கையுறின் (சிலப். 16, 186). 2. Means, materials, as for a sacrifice; 3. Armour, coat of mail; 4. Shield; 5. Saddle; 6. Horse-whip; 7. Assembly, collection, flock, group; 8. Connection, concatenation; 9. Garment; 10. Painting; 11. Secondary or instrumental cause; 12. Lute; 13. One of the musical instruments, of which there are four kinds, viz., தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி to which கண்டக்கருவி (the larynx) is sometimes added as the fifth; |
கருவிக்கருத்தன் | karuvi-k-karuttaṉ n. <> கருவி +. (Gram.) Instrument, as agent, as வாள் எறியும்; கருவி வினைமுதலாகவருவது. (இறை. 18, உரை.) |
கருவிக்குயிலுவர் | karuvi-k-kuyiluvar n. <>id.+. Drummer; தோற்கருவி வாசிப்பவர். கண்ணுளாளர் கருவிக்குயிலுவர் (சிலப். 5, 184). |
கருவிகரணங்கள் | karuvi-karaṇaṅkal n. <>id.+. Faculties; senses and intellectual powers; இந்திரியங்களும் மனமும். (W.) |
கருவிகழல்(லு) - தல் | karuvi-kaḻal- v. intr. <>id.+. To be greatly exhausted, to lose one's strength; வலியழிதல். (W.) |
கருவிடும்வாசல் | karu-viṭum-vācal n. <> கரு3+விடு-+. Penis; ஆண்குறி. கருவிடும் வாசலிருவிரற் கீழே (திருமந். 584). |
கருவிநூல் | karuvi-nūl n. <>கருவி+. Book that is of help to the study of literature, philosophy or religion; கல்வியறிவினை வளர்த்தற்குச் சாதனமான நூல். |
கருவிப்புட்டில் | karuvi-p-puṭṭil n. <>id.+. Scabbard, sheath; ஆயுதவுறை. (பிங்.) |