Word |
English & Tamil Meaning |
---|---|
கருவிப்பை | karuvi-p-pai n. <>id.+. Instrument-case; barber's bag; ஆயுதமிடும் பை. (W.) |
கருவிமாக்கள் | karuvi-mākkaḷ n. <>id.+. Bards, minstrels; யாழ்வாசிக்கும் பாணர். கருவிமாக்கள் கையற வுரைத்தன்று (பு.வெ. 2, 10, கொளு). |
கருவியாகுபெயர் | karuvi-y-āku-peyar n. <>id.+. Metonymy in which cause is put for effect, as திருவாசகம்; கருவி காரியத்துக்கு ஆகிவரும் பெயர். (நன். விருத். 290.) |
கருவிரலூகம் | karu-viral-ūkam n. <> கரு-மை +. A catapultic machine, of the shape of a monkey with black claws, mounted on the walls of a fort in ancient times and intended to seize and bite the approaching enemy; கரியவிரல்களையுடைய குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி. கருவிரலூகமுங் கல்லுமிழ் கவணும் (சிலப்.15, 208). |
கருவிரி - தல் | karu-viri- v. intr. <> கரு3+. To ear; to come into ear; தானியத்திற் கதிர்பரிதல். (W.) |
கருவிலி | karuvili n. cf. கருவழலை. A nocturnal ground-snake; பாம்புவகை. (J.) |
கருவிழி | karu-viḻi n. <> கரு-மை+. [M. karumiḻi] Apple of the eye; கண்மணி. |
கருவிழிக்கெண்டை | karu-viḻi-k-keṇṭai n. <>id.+. Carp. See கருமணிக்கெண்டை. . |
கருவிளங்கனி | karu-viḷaṅ-kaṉi n. <>கருவிளை+. (Pros.) Formula denoting a foot of three nirai; மூன்று நிரையசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 7, உரை.) |
கருவிளங்காய் | karu-viḷaṅ-kāy n. <>id.+. (Pros.) Formula denoting a foot of two nirai followed by a nēr-; நிரைநிரைநேர் கொண்ட மூவசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப் 7, உரை.) |
கருவிளநீர் | karu-v-iḷa-nīr n. <>கரு-மை + இளநீர். Black milk of a kind of young coconut, having the property of curing sores and eruptions; சொறிபுண்களைப் போக்கக்கூடிய கருநிறமுள்ள இளநீர். (பதார்த்த. 68). |
கருவிளம் | karu-viḷam n. <>கருவிளை. 1. (Pros.) Formula denoting a foot of two nirai; இரண்டு நிரையசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 7.) 2. Mussel-shell creeper. See காக்கட்டான், 1. (மலை.) 3. Bael. See வில்வம். (மலை.) |
கருவிளா | karu-viḷā n. <>கரு-மை+. 1. Wood-apple. See விளா. (மலை.) . 2. Bael. See வில்வம். (மூ.அ.) |
கருவிளை | karu-viḷai n. <>id. + விளை-. Mussel-shell creeper. See காக்கணம். கண்ணெனக் கருவிளை மலர (ஐங்குறு. 464). . |
கருவினை | karu-viṉai n. <>id.+. Sin; பாவம். ஐம்பதங்க ணீராக் கருவினை கழுவப்பட்டு (சீவக. 951). |
கருவீரல் | karu-v-īral n. <>id.+ ஈரல். Liver; பித்தாசயம். |
கருவுகலம் | karuvu-kalam n. cf. கருகூலம். Treasury, treasure-house; பொக்கிஷவறை. கருவுகலத்திலே ஒரு நெஞ்சைத் தந்தாய் (ஈடு, 2, 7, 7). |
கருவுப்பு | karu-v-uppu n.<>கரு-மை+. Salt ext acted out of sesamum seed; எள்ளுப்பு. (சங். அக.) |
கருவுயிர் - த்தல் | karu-v-uyir- v. intr. <>கரு3+உயிர்-. To bring forth, bear; ஈனுதல். கருவுயிர்ப்பன கங்குடிப்பன (தணிகைப்பு. திருநாட். 145). |
கருவுளமைப்பு | karuvuḷ-amaippu n. <>id. The six incidents of birth, viz., பேறு, இழவு, இன்பம், பிணி, மூப்பு, மரணம்; சன்மமெடுத்ததால் வரும் விளைவு. (பிங்.) |
கருவுறு - தல் | karu-v-uṟu- v. intr. <>id.+. 1. See கருத்தரி-. . 2. To bloom; |
கருவூமத்தை | karu-v-ūmattai n. <>கரு-மை+. Purple stramony, s.sh., Datura fastuosa; ஊமத்தைவகை. (பதார்த்த. 271.) |
கருவூர் | karu-v-ūr n. <>கரு3+ cf. garbhapurī 1. Karur in Trichinopoly District, the ancient capital of the Chēra kingdom; சேரரது பழைய தலைநகர். நெடுந்தேர்க் கோதை ... கருவூர் முன்றுறை (அகநா. 93). 2. See கருவூர்த்தேவர். கருவூரறைந்த சொன்மாலை (திருவிசை. கருவூர்த். 6, 10). |
கருவூர்த்தேவர் | karuvūr-t-tēvar n. <>கருவூர்+. A šaiva saint, one of the authors of Tiru-v-icai-p-pā; திருவிசைப்பாவாசிரியருள் ஒருவர். (திருவிசை. கருவூர்த்தேவர்.) |
கருவூரன் | karu-v-ūraṉ n. <>id. See கருவூர்த்தேவர். (திருவிசை. கருவூர்த். 7, 10.) . |
கருவூரானிலை | karuvūr-āṉilai n. <>id.+. The šiva temple at Karur; கருவூரிலுள்ள சிவபிரான் கோயில். (தேவா.) |
கருவூலம் | karuvūlam n. cf. கருகூலம். Treasure, treasure-house; பொக்கிஷவறை. புந்திய தாகுமெய்க் கருவூலப் பொருளை (பிரபோத. 27, 72). |
கருவெடு - த்தல் | karu-v-eṭu- v. intr. <>கரு3+. 1. To gather ingredients for witchcraft; அட்டகருமக்கருச்சேர்த்தல். (W.) 2. To counteract the effect of witchcraft; |