Word |
English & Tamil Meaning |
---|---|
கரைபோடு - தல் | karai-pōṭu- v. intr. <>id.+. 1. To construct an embankment, as of a tank; செய்கரை கட்டுதல். 2. To fix the boundaries of land; 3. To cast lots; |
கரைமடி | karai-maṭi n. <>id.+. A shorenet, dist. fr. தட்டுமடி. See கரைவலை. (W.) . |
கரைமரஞ்சேர் - தல் | karai-mara-cēr- v. intr. <>id.+. To attain salvation, as a boat reaching the shore; உய்வடைதல். லௌகிகர் நம்மையேபற்றிக் கரைமரஞ்சேரும் விரகேதோ (ஈடு, 4, 8, 9). |
கரைமானியம் | karai-māṉiyam n. <>id.+. Tax-free land assigned for the service of collecting workmen to repair tanks; ஏரிக்கரையைப் பழுதுபார்ப்பதற்கு வேண்டிய ஆட்களைக்கூட்டுவதற்கு விடப்பட்ட இறையிலிநிலம். (M.M.) |
கரையப்பாடம்பண்ணு - தல் | karaiya-p-pāṭam-paṇṇu- v. tr. <> கரை1-+. To learn perfectly, as a lesson; நன்றாகக் கற்றல். (W.) |
கரையல் | karaiyal n. <>id. 1. Dissolving; கரைகை. 2. Melting; 3. That which is dissolved, reduced; |
கரையற்சாதம் | karaiyaṟ-cātam n. <>id.+. Rice over-boiled; குழைந்த சாதம். (J.) |
கரையற்பனங்கட்டி | karaiyaṟ-paṉaṅ-kaṭṭi n. <>id.+. Jaggery, reduced to a fluid condition by moisture; இளகின கருப்பட்டி. (W.) |
கரையனூல் | karaiyaṉūl n. <> கரையல்+ நூல். Loose yarn that easily parts; எளிதிற்பிரியக்கூடிய நூல். (W.) |
கரையாத்திரை | karai-yāttirai n. <>கரை+. A land-journey; நிலத்திற்செய்யும் பிரயாணம். (W.) |
கரையாளன் | karai-y-āḷaṉ n. <>id.+. 1. Owner of karai land in a village; கிராமக்கரைப் பங்குக்கு உரியவன். (W.) 2. Caste-title of Maravas and some Iṭaiyas; |
கரையான் | karaiyāṉ n. <>id. Fisherman living near the sea-coast; கடற்கரைப்பக்கத்து வாழும் வலைஞன். |
கரையிடு - தல் | karai-y-iṭu- v. intr. <>id.+. 1. To divide land into portions; நிலப்பங்கு பிரித்தல். 2. To assign portions of land to be cultivated; |
கரையீடு | karai-y-īṭu n. <>id.+. Tenure by which the lands of a village are exchanged amongst the co-parceners or owners periodically; கிராமநிலங்களை மாற்றியடைக்கை. (C. G.) |
கரையேற்றம் | karai-y-ēṟṟam n. <>id.+. [M. karayēṟṟam.] 1. Salvation; final deliverance of the soul; நற்கதியடைகை. 2. Emancipation from poverty, etc.; |
கரையேற்று - தல் | karai-y-ēṟṟu- v. tr. <>id.+. 1. To save, redeem, emancipate, as from karma; நற்கதிசேர்த்தல். 2. To raise from indigence; to reinstate in affluent circumstances; 3. To marry and settle, as a destitute girl; |
கரையேறு - தல் | karai-y-ēṟu- v. intr. <>id.+. [M. karayēṟu.] 1. To get ashore, land; நீரினின்று கரையடைதல். கடலோடி மீண்டு கரையேறினாலென் (நல்வழி, 6). 2. To be saved, rescued, as from the sea of transmigration; to gain heavenly bliss; 3. To be freed from distress; 4. To get married; 5. To attain an object of desire; |
கரைவலை | karai-valai n. <>id.+. [M. karavala.] Drag-net, having a cotton bag with fine meshes in the centre, sometimes 1/2 mile in length spread out from the shore in a semi-circle and after an hour or two withdrawn from the water நுட்பமான துவாரங்கள் பொருந்திய ஒரு பையைத் தன்னகத்தேகொண்டதாய்க் கரையிலிருந்து அரைமைல்தூரம் வட்டமாகவீசி மீன்களைத் துரத்திப் பிடிக்க உதவும் ஒருவகை வலை. |
கரைவலைத்தோணி | karai-valai-t-tōṇi n. <> கரைவலை+. Boat for fishing with the dragnet; கரைவலையை இழுத்துச்செல்லுந் தோணி. (W.) |
கரைவழி | karai-vaḻi n. <>கரை+. [M. karavaḻi.] 1. Road or path along the shore; நீர்க்கரைப்பாதை. (W.) 2. Lands lying along the banks of a river; 3. See கரையீடு. |
கரைவழித்தீர்வை | karai-vaḻi-t-tīrvai n. <>கரைவழி+. Land customs, duty; வேற்றூர்களிலிருந்து உள்நாடுவழியாக வரும் பண்டங்களுக்கு விதிக்கப்படுஞ் சுங்கம். (W.) |
கரைவாடை | karai-vāṭai n. <>கரை +. North-west wind; வடமேல்காற்று. (W.) |