Word |
English & Tamil Meaning |
---|---|
கல்யாணச்சாவு | kalyāṇa-c-cāvu n. <>id. + Death of a person at an extreme old age வயதுமுதிர்ந்தோரது மரணம் |
கல்யாணசுந்தரர் | kalyāṇa-cuntarar n. <>id. + One of the forms in which šiva is worshipped சிவழர்த்தங்களுள் ஒன்று |
கல்யாணம் | kalyāṇam n. <>kalyāṇa 1. Good fortune, prosperity, felicity சுபம் கல்யாண குணகண பரிபூர்ணனாய் (ஈடு, மஹாப்ர) 2. Wedding 3. Festivity, conviviality, joyful celebration 4. Gold 5. Good character, virtue |
கல்யாணன் | kalyāṇaṉ n. <>id Person of good disposition, of noble character நற்குணமுடையவன். இங்குனை யாரொப்பார் நல்ல கல்யாணனன்றோ (திருவாலவா, 29, 12) |
கல்யாணி | kalyāṇi n. <>kalyāṇī 1. See கலியாணி. திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரகல்யாணி (கந்தரலங். 80) 2. (Mus.) A musical mode |
கல்லக்காரம் | kal-l-akkāram n. <>கல்+அக்காரம்1. Candied molasses made from palmyra juice பனங்கற்கண்டு. (J.) |
கல்லகச்சத்து | kal-l-aka-c-cattu n. <>கல்+அகம் +jātu Fossil or mineral drug, supposed to ooze from mountains, bitumen சிலாசத்து (பதார்த்த.1130) |
கல்லகம் | kal-l-akam n. <>id. +id Mountain மலை. (திவா) |
கல்லகாரம் | kallakāram n. <>kahlāra Arrow-head. See நீர்க்குளிரி. கல்லகாரப்பூவாற் கண்ணி தொடுத்தாளை (பரிபா.11, 103) . |
கல்லங்காய் | kal-l-aṅ-kāy n. <>கல்+ Fruit which becomes as hard as stone இறுகிய காய் (w.) |
கல்லங்கோரை | kal-l-aṅ-kōrai n. <>id. + A kind of sedge கோரைவகை |
கல்லட்டிகை | kal-l-aṭṭikai n.<>id. + Necklace set with precious stones இரத்தினம் வைத்து இழைத்த அட்டிகையணி |
கல்லடார் | kal-l-aṭār n. <>id. + Trap for tigers and other animals விலங்குகளை அகப்படுத்தும் பொறி. புனவன் சிறுபொறி மாட்டிய பெருங்கல்லடார் (நற், 119) |
கல்லடி - த்தல் | kal-l-aṭi- v. intr. <>id.+ 1. To hew or cut stone கல்வெட்டுதல் 2. To strike the foot against a stone |
கல்லடிச்சேம்பு | kal-l-aṭi-c-cēmpu n. Prob. id. + An edible vegetable, an inferior kind of cēmpu சேம்புவகை. (W.) |
கல்லடிமூலம் | kallaṭimūlam n. Prob. id. + See கற்கடகபாஷாணம். (மு.அ) . |
கல்லடைப்பு | kal-la-aṭaippu n. <>கல்+ Stone in the bladder, retention of urine by gravel, Vesical calculus நீரடைப்பு நோய்வகை |
கல்லண்டம் | kal-l-aṇṭam n. <>id. + Bloodswelling, haematocele அண்டவீக்கநோய்வகை (M.L.) |
கல்லணை 1 | kal-l-aṇai, n. <>id. +. Dam built of stone, anicut, causeway; கல்லாற் கட்டிய நீரணை. |
கல்லணை 2 | kallaṇai n See கலனை=2. (திவா.) . |
கல்லத்தி | kal-l-atti n. <>கல்+.[K.kallatti.] 1. Hill Banyan, l.tr., Ficus tomentosa அத்திமரவகை. பாலைகல்லத்தி தோ£கத்தி (மச்சபு. நைமிச 8). 2. Nooga, Ficus altissima |
கல்லதர் | kal-l-atar. n. <>id. + Narrow path full of stones in a desert tract பருக்கைக் கற்கள் பொருந்திய சிறுவழி. கல்லத ரத்தம் (சிலப். 16, 57) |
கல்லரசு | kal-l-aracu n. <>id. + Wild pipal See கொடியரசு (L.) |
கல்லரவிந்தம் | kal-l-aravintam n. <>id. + A mountain shrub பூடுவகை. (மலை) |
கல்லல் | kallal n. cf. அல்லல் Disturbance, confusion, tumult குழப்பம். கலல்லற வொன்றை யருள்வோனே (திருப்பு. 291) |
கல்லலகு | kallalaku n A kind of musical instrument ஒருவகை வாச்சியம். கல்லலகு பாணி பயின்றார் (தேவா. 519, 1) |
கல்லலசு | kallalacu n See கல்லலகு கல்லலசு துத்தரி யேங்க (கல்லா.34) |
கல்லவடம் | kallavaṭam n A kind of drum ஒருவகைப் பறை. கல்லவடமிட்டுத் திசைதொழுதாடியும் (தேவா, 576, 6) |
கல்லளை | kal-l-aḷai n. <>கல்+ Cleft or cave in a rock or mountain மலைக்குகை. புலி சேர்ந்து போகிய கல்லளை போல (புறநா, 86, 4) |
கல்லறு - த்தல் | kal-l-aṟu- v. intr. <>id. + To cut bricks out of a clayey mould பச்சை வெட்டுக்கல் அறுத்தல் |
கல்லறை | kal-l-aṟai n.<>id. +. (M. kallaṟa.) 1. Cave, cavern குகை. கல்லறையி னுழுவை சினங்கொண்டு (தேவா. 1155, 4) 2. Vault, tomb hewn out in a rock, sepulchre, grave 3. Room having stone walls and roof |