Word |
English & Tamil Meaning |
---|---|
கலவிருக்கை 1 | kalav-irukkai n. <>கலவு-+. இருக்கை. Pleasant abode; பிரியமான இடம். மாவலியை . . . பாதாளங் கல விருக்கை கொடுத்து (திவ். பெரியாழ்4, 9, 7 ). |
கலவிருக்கை 2 | kala-v-irukkai n. <>கலம்+இருக்கை. Stone-house; பண்டசாலை. வேயாமாடமும் வியன் கலவிருக்கையும் (சிலப். 5, 7). |
கலவிரைப்பாடு | kala-virai-p-pāṭu n. <>id.+. See கலவித்துபாடு. Colloq. . |
கலவினார் | kalaviṉār n. <>கலவு-. Friends, loving associates, relations; உற்றார். கல்வினார் பழிகரக்கு மேதை (தணிகைப்பு, திருநாட்டு. 142). |
கலவு 1 - தல் | kalavu- 5 v. tr. & intr. <>கல-. To mix; கலத்தல். கனியின் றிரளுங் கலவி (சூளா. சீய. 230). |
கலவு 2 | kalavu n. <>கலவு-. Joint of the body; உடலின் முட்டுவாய். கலவுக்கழி கடுமுடை (அகநா. 3). |
கலவை 1 | kalavai n. <>கல-. 1. Mixture, compound, medley; கலப்புண்ட பொருள். 2. Perfumed paste; 3. Mixture of different kinds of food, scraps, leavings; 4. Lime and sand mixed for mortar; |
கலவை 2 | kalavai n. cf. கலவா. Indian Rockcod; மீன்வகை. (G. Tn. D. i, 229.) |
கலவைக்கீரை | kalavai-k-kīrai n. <>கலவை+. Edible greens of sorts mixed together and cooked as a disṉ; பலவகைக் கீரைகள் கலந்தது. (பதார்த்த. 592.) |
கலவைச்சந்தனம் | kalavai-c-cantaṉam n. <>id.+. Sandal paste prepared with the addition of many aromatic substances; வாசனைப் பண்டங்கள் சேர்த்த சந்தனம். (பரத. பாவ. 23, உரை.) |
கலவைச்சுண்ணாம்பு | kalavai-c-cuṇṇām-pu n. <>id.+. Lime and sand mixed with water, mortar; மணலோடு கலந்த சுண்ணாம்பு. |
கலவைச்சேறு | kalavai-c-cēṟu n. <>id. +. See கலவைச்சந்தனம். (திவா.) . |
கலவைத்தசை | kalavai-t-tacai n. <>id.+. Complex muscle; இறுகியமைந்த சதை. (W.) |
கலவைநீர் | kalavai-nīr n. <>id.+. Fragrant solution for ladies' baths; வாசங்கலந்த நீர். கருங்குழல் கழீஇய கலவை நீரும் (மணி. 28, 6). |
கலவையணி | kalavai-y-aṇi n. <>id.+. (Rhet.) Figures of speech indistinguishably blended together, dist. fr. சேர்வையணி; நீரும் பாலும்போலப் பிரிக்கமுடியாத பல அலங்காரம் விரவி வருவது. (அணியி. பக். 43.) |
கலன் | kalaṉ n. cf. kalaha. Encumbrance; வில்லங்கம். மனைக்கு . . . எப்பேர்ப்பட்ட கலனுமில்லை (S.I.I. i, 104). |
கலன்கழிமடந்தை | kalaṉ-kaḻi-maṭantai n. <>கலம்+. Lit., woman who has given up wearing ornaments, widow; கைம்பெண். (சூடா.) |
கலனம் 1 | kalaṉam n. <>skhalana. 1. Prattling, as in sleep; வாய்பிதற்றுகை. கலனமுறு சொப்பனத்தில் (ஞானவா. உற்பத். 65). 2. Seminal emission; |
கலனம் 2 | kalaṉam n. See கலவை. . |
கலனரசு | kalaṉ-aracu n. <>கலம்+. Lit., the paramount of all ornaments, tāli, the marriage badge; மங்கலியம். |
கலனிருக்கை | kalaṉ-irukkai n. <>id.+. See கலவிருக்கை. (திவா.) . |
கலனை 1 | kalaṉai n. 1. cf. hala. Plough; கலப்பை. (திவா.) 2. Parts, as of a sacrifice; |
கலனை 2 | kalaṉai n. <>khalīna. cf. கலணை. Horse-saddle; சேணம். மேற்கலனையி னுக்க செம்மணி (காஞ்ப்பு. நகர.17). |
கலாங்கம் | kalāṅkam n. A mineral poison See துத்தபாஷாணம். (W.) . |
கலாங்கழி | kalāṅkaḻi n. See கலாங்கம். (யாழ். அக.) . |
கலாங்கன் | kalāṅkaṉ n. See கலாங்கம். (W.) . |
கலாங்கனி | kalāṅkaṉi n. See கலாங்கம். (யாழ்.அக.) . |
கலாசு | kalācu n. <>U.khalās. Shipping; மரக்கலத்தின் சம்பந்தமானது. (W.) |
கலாசுகாரன் | kalācu-kāraṉ n. <>id. +. 1. Indian seaman; மரக்கலம் ஒட்டுவோன். Loc. 2. Native gunner who works in an armoury; |
கலாசோதனை | kalā-cōtaṉai n. <>kalā+.(šaiva.) The fourth stage of initiation, one of five tīṭcai, q.v.; சைவதீட்சைகளுள் ஒன்று. |
கலாட்டா | kalāṭṭā n. <>U.galātā Riot, commotion, tumult, insurrection, strife; கலவரம். |
கலாத்துவா | kalāttuvā n.<> kalā + adhvan.(šaiva.) A path to salvation in the form of paca-kalai, one of six attuvā, q.v.; பஞ்சகலைகளாகிய அந்துவாவகை. (சி.சி.8,6-9, மறைஞா.) |
கலாதத்துவம் | kalā-tattuvam n. <>id. +. (šaiva.) That which slightly reduces the power of āṇava-malam (which acts as a veil on the soul), so as to enable the soul to act, one of seven cuttācutta-tattuvam, q.v.; சுத்தாசுத்த தத்துவங்களுள் ஒன்று. (சி. போ. ப. 2, 2, பக. 151.) |