Word |
English & Tamil Meaning |
---|---|
கலாதி | kalāti n. <>kalaha. Agitation, stir, disturbance, tumult, quarrel, scuffle, squabble, brawl, wrangle; கலகம். (W.) |
கலாநிதி | kalā-niti n. <>kalā+. 1. Moon, having phases; சந்திரன். (பிங்.) 2. Treasure-house of learning, a title given to a learned person; |
கலாப்பி - த்தல் | kalāppi- 11 v. tr. <>கல-. To mix; கலத்தல். (அக. நி.) |
கலாபம் 1 | kalāpam n. <>kalāpa. 1. Women's zone of beads or bells consisting of 16 strands; பதினாறுகோவையுள்ள மாதரிடையணி. கலாபம் வீக்கி (சீவக. 624). 2. Jewelled girdle of a woman; 3. Peacock's tail; 4. Umbrella made of peacock's feathers; |
கலாபம் 2 | kalāpam n. prob.galba. Rising, disturbance, uproar, raid, invasion; கலகம். ஐதர் கலாபம். |
கலாபனை | kalāpaṉai n. <>id.[T.kalāpana.] See கலாபம். . |
கலாபி 1 | kalāpi n. <>kalāpin. Peacock; மயில். (பிங்.) |
கலாபி 2 - த்தல் | kalāpi- 11 v. intr. <>கலாபம். To create disturbance, stir up a revolt; கலகம் பண்ணுதல். Loc. |
கலாபேதம் | kalā-pētam n. <>kalā+. Heresy; வேறுபட்ட சயமம். கலாபேதத்த கடுவிட மெய்தி (திருவாச. 4, 57). |
கலாம் | kalām n. <>kalaha. 1. War, battle; போர். கலாஅத் தானையன் (புறநா. 69, 11). 2. Rivalry; competition; 3. Rage, fury; 4. Impetuosity; |
கலாம்பூரம் | kalāmpūram n. A kind of drug; மருந்துவகை. (W.) |
கலாய் - த்தல் | kalāy- 11 v. intr. <>kalaha. 1. To quarrel, to be at variance; கலகித்தல். யாமினிக் கலாய்த்தல் வேண்ட லொழிகென (காஞ்சிப்பு. அனந்த 5). 2. To get angry; |
கலாயி | kalāyi n. <>U. galaī Tin used for tinning vessels; பாத்திரங்கட்குப் பூசப்படும் ஈயம். Loc. |
கலால் | kalāl n. <>U. kalāl. Toddy; கள். Colloq. |
கலால்தீர்வை | kalāl-tīrvai n. <>id. +. Tax on toddy; கள்வரி. Colloq. |
கலாவம் | kalāvam n. <>Pkt. kalāva <>kalāpa. Peacock's tail. See கலாபம் கலிமயிற் கலாவம் (புறநா. 146, 8). |
கலாவு 1 - தல் | kalāvu- 5 v. intr. <>கலவு-. To mix, join together, unite; கலத்தல். வானத்து வீசு வளி கலாவலின் (குறிஞ்சிப். 48). |
கலாவு 2 - தல் | kalāvu- 5 v. intr. prob. kalaha. 1. To be perturbed, confused; கலக்கமடைதல். கண்ணி நீரலைக் கலாவ (நெடுநல். 6). 2. To be displeased, angry; |
கலி 1 - த்தல் | kali- 11 v. intr 1. prob. கல் onom. To sound, clamour, roar; ஒலித்தல். கடவுட் பராவி நமர்கலிப்ப (திருக்கோ. 279). 2. To sound, as yāḻ; 3. To grow luxuariantly; 4. To sprout, come into being; 5. To appear, become manifest; 6. To increase: 7. cf களி-. To rejoice; 8. To swell, to be proud, to grow arrogant; 9. To be swift, quick; 10. To be dense, crowded; To cause to go, move; |
கலி 2 | kali n. <>கலி-. 1.Sound; ஒலி. (தொல். சொல். 349.) 2. Sea; 3. Strength, force; 4. Haughtiness, conceit, self-esteem; 5. Flourishing, thriving, prospering; 6. Perturbation; discomposure; uneasiness; 7. Spiritedness, sprightliness, animation; 8. See கலிப்பா. (தொல். பொ. 53.) 9. A poem of the Middle Sangam period, not extent; 10. See கலித்தொகை. கலியேயகம்புற மென்று (புறநா, முகவுரை). 11. War, dissension, strife; |
கலி 3 - த்தல் | kali- 11v. <>skhal. intr. To trickle, flow gently; To remove; நழுவுதல். சுக்கிலங் கலித்தலாற் பெருந்தவலி குன்றும் (வைராக். சத. 43)-trநீக்குதல். (சி. போ. பா. 151.) |
கலி 4 | kali n. <>Kali. 1.The deity presiding over the Iron age; கலிபுருஷன். கலிநீங்கு காண்டம். (நள.) 2. See கலியுகம். (பிங்.) 3. Saturn, as a malignant planet; 4. Mishap, disaster, calamity; 5. Poverty, want; 6. Deceit, fraud; |