Word |
English & Tamil Meaning |
---|---|
கலிழ் | kaliḻ n. <>id. See கலிழிநீர். விரை மண்ணுக் கலிழை (பரிபா. 6, 44). |
கலிழிநீர் | kaliḻi-nīr n. <>id. +. Muddy water, puddle; கலங்கனீர். மானுண்டெஞ்சிய கலிழிநீரே (ஐங்குறு.203) |
கலின்கலினெனல் | kaliṉ-kaliṉ-eṉal n. Onom. Tinkling of anklet bells; ஓர் ஒலிக்குறிப்பு. கிண்கிணி சிலம்பொடு கலின்கலினென (குமர.பிர. முத்துக். வருகைப். 1). |
கலினம் | kaliṉam n. <>khalina. Bit of a horse's bridle; கடிவாளம். கலினமா (சீவக.2258). |
கலினி 1 | kaliṉi n. cf. கலிதி. Long pepper. See திப்பலி. (பிங்.) |
கலினி 2 | kaliṉi n. cf. கயினி. Widow, as afficted; கைம்பெண். (W.) |
கலினெனல் | kaliṉ-eṉal n. Onom. See கலின்கலினெனல். கலினென வறைகழ லமரேசன் (சேதுபு. சேதுபல. 40). . |
கலினை 1 | kaliṉai n. 1. cf. krṣṇa. 1. Black pepper. See மிளகு. (சூடா.) . 2. Horse gram. See கொள்ளு. (மலை.) |
கலினை 2 | kaliṉai n. <>khalina. See கலினம். (W.) . |
கல¦ரம் | kalīram n. prob. கலிரம். A tree. See முருக்கு, 1, 2. (மலை.) . |
கல¦ரிடல் | kalīr-iṭal n. See கலிரெனல். . |
கல¦ரெனல் | kalīr-eṉal n. Onom. expr. of sounding, as small bells, a brass vessel; ஓர் ஒலிக்குறிப்பு. |
கலுக்குப்பிலுக்கு | kalukku-p-pilukku n. Onom. Tinkling sounds of ornaments worn by women and children; clinking of little bells; ஆபரணவொலி. (W.) |
கலுக்குப்பிலுக்குப்பண்ணு - தல் | kaluk-ku-p-pilukku-p-paṇṇu- v. intr. <>கலுக்குப்பிலுக்கு+ To walk in such a way as to make ornaments tinkle on the stage; ஆபரணவொலிபட நடத்தல். (W.) |
கலுங்கு | kaluṅku n. See கலிங்கு. . |
கலுடம் | kaluṭam n. <>kaluṣa. 1. Muddy, turbid water; கலங்கனீர். (W.) 2. Sin; |
கலுமொலெனல் | kalumol-eṉal n. Onom. Chattering, clacking; ஒர் ஒலிக்குறிப்பு. (W.) |
கலுவடம் | kaluvaṭam n. Flower-bud; பூவரும்பு. (பிங்.) |
கலுவம் | kaluvam n. <>கல்வம். cf. Pkt. khala. Small stone slab for grinding drugs, apothecary's mortar for macerating with a pestle; மருந்து அரைக்குங் குழியம்மி. கலுவத்தில் வெள்வேற்றோற் குடிநீரா லரைத்து (தைலவ. தைல. 33). |
கலுழ் - தல் | kaluḻ- 4 v. cf. ka-luṣa. intr. 1. To become turbid, as water; கலங்குதல். (பிங்.) 2. To be troubled, disturbed in mind; 3. To weep, wail, shed tears; 4. To shine forth, as beauty; 5. To be touched, as the heart; To join with; |
கலுழ் | kaluḻ n. <>கலுழ்-. 1. Weeping; அழுகை. (பிங்.) 2. Muddiness; |
கலுழ்ச்சி | kaluḻcci n. <>id. 1. Sorrow; துக்கம். உவகைகலுழ்ச்சி யோவிலரே (ஞானா. 31, 14). 2. Weeping; |
கலுழ்வு | kaluḻvu n. <>id. See கலுழ்ச்சி. கோயிலெல்லாம். . . கலுழ்வுற்றதன்றே (சீவக. 2137). . |
கலுழக்கல் | kaluḻa-k-kal n. See கருடக்கல். . |
கலுழம் | kaluḻam n. <>kaluṣa. See கலுடம், 1. . |
கலுழன் | kaluḻaṉ n. <>garuda. See கருடன். கலுழன்மேல் வந்து தோன்றினான் (கம்பரா. திருவவ.13). . |
கலுழி | kaluḻi n. <>கலுழ்-. 1. Disturbed water; puddle; கலங்கனீர். (திவா.) 2. Jungle river; 3. Flood; 4. Tears; 5. Confusion, perturbation; |
கலேகபோதநியாயம் | kalē-kapōta-niyāyam n. <>khaīē+kapōta+nyāya. Maxim of the doves and the threshing-floor used to denote the way in which many seek the same vast source for enrichment and each do so unmindful of others; புறாக்கள்பல ஒரே நெற்களத்தில் தானியங்களைப்பொறுக்க மேல்விழுவதுபோலும் நெறி. |
கலேயகம் | kalēyakam n. cf, kāḷēyaka. Turmeric. மஞ்சள். (மலை.) |
கலேர் | kalēr n. See கலேல். . |
கலேல் | kalēl n. Onom. An imitative sound; ஒர் ஒலிக்குறிப்பு.(W.) |
கலை - தல் | kalai- 4 v. intr. [M. kala.] 1. To disperse, as an assembly, a defeated army; to be driven to different parts, as a herd pursued by dogs; to be scattered, as clouds; குலைதல். உடலுமுயிரு நினைவுந் தம்மிற்கலையா (அஷ்டப். அழகரந். 12). 2. To be ruined, destroyed; 3. To be absent-minded, to wander in thought; 4. To be out of tune, as an instrument; 5. To be blurred beyond recognition, as the writing on slate; 6. To glide from one tune into another; |