Word |
English & Tamil Meaning |
---|---|
கலைஞானி | kalai-āṉi n. <>id. + ānin. One well versed in arts and sciences; சாஸ்திர மறிந்தோ-ன்-ள் நண்ணிலேன் கலைஞானிகடம்மொடும் (திருவாச.26, 6). |
கலைத்தொழில் | kalai-t-toḻil n. <>id.+. The eight kinds of action involved in playing the yāḻ, viz., பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு; யாழ்வாசினைக்குரிய செய்கைகள். (சீவக. 657, உரை.) |
கலைநாதன் | kalai-nātaṉ n. <>id. +. Buddha, the Enlightened; புத்தன். (சூடா.) |
கலைநியமம் | kalai-niyamam n. <>id. +. The temple of Sarasvatī which existed in Madura at the time when the classic Maṇimēkalai was written; மதுரையிலிருந்த சிந்தாதேவி கோயில்., சிந்தா விளக்கின் செழுங் கலைநியமத்து (மணி. 13, 106). |
கலைப்பாகி | kalai-p-pāki n. <>கலை+பாகு. Durgā who rides on a stag; துர்க்கை, வெய்ய கலைப்பாகி கொண்டுவளாய் நின்றாள் (திவ், பெரியாழ்.1, 3, 9). |
கலைமகள் | kalai-makaḷ n. <>கலை+. Sarasvatī, goddess of learning; சரசுவதி. (பிங்.) |
கலைமடந்தை | kalai-maṭantai n. <>id.+. See கலைமகள். (திவா.) . |
கலைமலைவு | kalai-malaivu n. <>id. +. Anything opposed to arts and sciences; கீதம் கணிதம் முதலிய கலைநூல்களிற் கூறியவற்றோடு மாறுபட வருவது. (தண்டி.118, தலைப்பு.) |
கலைமான் 1 | kalai-māṉ n. <>கலை+. [M.kalamān.] Stag; மான்வகை. கலைமான் வினாயது (திருக்கோ. 53, கொளு) |
கலைமான் 2 | kalai-māṉ n. <>கலை+. Sarasvatī; சரசுவதி. கலைமான்றனை நன்முறை திரியாக் காயத்திரியை முகநோக்கி (சேதுபு. காயத்.32). |
கலையறிபுலவன் | kalai-y-aṟi-pulavaṉ n. <>id. +. Skanda, well versed in all branches of knowledge; முருகக்கடவுள். (பிங்.) |
கலையானத்தி | kalai-yāṉatti n. <>கலை+yāna. See கலையூர்தி. (சூடா.) . |
கலையினன் | kalaiyiṉaṉ n. <>கலை. Moon, as having phases; சந்திரன். (சூடா.) |
கலையுருவினோன் | kalai-y-uruviṉōṉ n. <>id. +. šiva, who is the embodiment of all knowledge; கலைகளை உருவாகவுடையன் எனப்படுஞ் சிவன். கட்டி நிற்போனுங் கலையுருவினோனும் (மணி. 27, 91). |
கலையூர்தி | kalai-y-ūrti n. <>கலை+. Durgā who rides on a stag; துர்க்கை. (திவா.) |
கலையேறு - தல் | kalai-y-ēṟu- v. intr. <>கலை+. 1. To increase, as divinity in an idol with the increase of worship, of mantras, etc.; தெய்வசத்தி மிகுதல். 2. To grow arrogant by propsperity, promotion; |
கலையோன் | kalaiyōṉ n. <>id. Moon, as having phases; சந்திரன். (பிங்.) |
கலைவல்லார் | kalai-vallār n. <>id. +. 1. Learned men, the literati; புலவர். (திவா.) 2. Dancing-girls, who are skilled in the arts of music, dancing etc.; |
கலைவாகன் | kalai-vākaṉ n. <>கலை+vāha. Vāyu, said to ride on a stag; வாயு. நெடுஞ்கலை வாக னேக (பாரத. சம்பவ. 76). |
கவ்டா | kavṭā n. <>Mhr. gāvadā. Head of a village; கிராமத்தலைவன். (W.) |
கவ்வக்குன்று | kavva-k-kuṉṟu n. <>கவ்வம்+. Mt. Mandara with which the gods churned the sea of milk; மந்தரமலை. (W.) |
கவ்வம் | kavvam n. <>T. kavvamu. Churning-stick; மத்து. |
கவ்வா | kavvā n. <> U. kabā. Long coat, tunic; நீண்ட அங்கி. parav. |
கவ்வாணம் | kavvāṇam n. An ancient secondary melody-type of the kuṟici class; குறிஞ்சியாழ்த்திறங்களுள் ஒன்று. (பிங்.) |
கவ்வியம் 1 | kavviyam n. <>gavya. Any one of the five choice products yielded by the cow; பசுவினின்று கொள்ளப்படும் தூயவஸ்துக்கள் ஐந்தனுள் ஏதேனும் ஒன்று. |
கவ்வியம் 2 | kavviyam n. <>kavya. Oblation of food to manes; பிதிரர்களை உத்தேசித்துக் கொடுக்கும் பிண்டம். அவ்வியகவ்வியத்தை . . . மறையோர்க்கீயின் (மச்சபு. சிராத்தானு. 2). |
கவ்வு - தல் | kavvu- 5 v. tr. <>கௌவு-. [T. kaviyu.] To seize, grasp with eagerness; வௌவுதல். கவ்வித்தோ றின்னும் குணுங்கர்நாய் (நாலடி, 322). |
கவ்வு | kavvu- n. <>கவ்வு-. 1. Bite, seizing by the mouth, as dog; வாயாற் கவ்வுகை. நாய் ஒரு கவ்வுக் கவ்வியது. 2. Eating; 3. Fork of a branch or horn; |
கவ்வை 1 | kavvai n. prob. கவ்வு-. 1. Sound, din, noise, roar; ஒலி. எவ்வையர்சேரி யிரவு மிமை பொருந்தாக் கவ்வை (பு. வெ. 12, பெண்பாற். 10). 2. Scandal, slander, calumny; 3. Affiction, distress; 4. Anxiety, care; 5. Jealousy; 6. Toddy; |