Word |
English & Tamil Meaning |
---|---|
கவணம் | kavaṇam n. Bandage for wound; அடிபட்ட காயக்கட்டு. கவணங்கட்ட. (W.) |
கவணி | kavaṇi n. <>M. kavaṇi. Muslin; ஒருவகை மெல்லிய சீலை. (W.) |
கவணிச்சால்வை | kavaṇi-c-cālvai n. <>id.+. Muslin shawl; மெல்லிய சால்வை வகை. (J.) |
கவணை 1 | kavaṇai n. See கவண். கவணையிற் பூஞ்சினை யுதிர்க்கும் (கலித். 23). . |
கவணை 2 | kavaṇai n. prob. gō+அணை. [T. kavaṇamu.] Place for feeding cattle; மாட்டுக்குத் தீனிவைக்கும் இடம். (W.) |
கவந்தம் | kavantam n. <>kabandha. 1. Headless body; தலையற்ற உடல். கவந்த மெங்கணு மாடவும் (சீவக. 2310). 2. Stump of a tree; 3. Oil-press; 4. Demon; 5. Water; |
கவந்தன் | kavantaṉ n. <>id. A demon mentioned in the Rāmāyaṇa; ஒர் அரக்கன். (கம்பரா. கவந்த. 2.) |
கவந்தி | kavanti n. [K. kavudi, M. kaviyan.] Quilted cover made of rags to keep off cold; கந்தைகளாலாகிய மெத்தைப்போர்வை. ஓடுங் கவந்தியுமே யுறவென் றிட்டு (திருவாச. 40, 1). |
கவந்திகை | kavantikai n. See கவந்தி. போர்வைக் கவந்திகை கரியுரி . . . அரவங்கோவணம் (திருவிசை. கருவூ. திருச்சாட். 3). . |
கவம் 1 | kavam n. See கவ்வம். . |
கவம் 2 | kavam n. <>kapha. Phlegm; கபம். கவம் புருடராகம் பொருந்து செங்குருதி மாணிக்கம் (திருவாலவா. 25, 10). |
கவயம் 1 | kavayam n. <>gavaya. Bison, wild cow, Bos gavaus; காட்டுப்பசு. (திவா.) |
கவயம் 2 | kavayam n. <>kavaca. Armour, coat of mail; கவசம். வீரக் கழலினார்க் கொருகவயமுங் கண்ணுமாய் நடப்பார் (திருவிளை. பன்றிக்குட்டிகளை.12). |
கவயமா | kavaya-mā n. <>gavaya+மா. See கவயம். அவைய மிட்டன கவயமா (சேதுபு. சங்கர. 19). . |
கவயல் | kavayal n. See கவயம். (சங். அக.) . |
கவர் 1 - தல் | kavadral 4 v. tr. [K. M. kavar.] 1. To seize, grasp, catch, capture, take by force, steal; அகப்படுத்துதல். மூங்கிற் கவர்கிளை போல (பதிற்றுப். 84, 12). 2. To rob, plunder, pillage; 3. To get control of, charm, captivate; 4. To desire; 5. To receive; 6. To experience, enjoy; 7. To have sexual connection with; 8. To churn, reduce by trituration or attrition; 9. To call, summon; |
கவர் 2 - தல் | kavar- 4 v. intr. cf. கவை-. 1. To separate into various channels; பலகாலாகப் பிரிதல். காவிரிவந்து கவர்பூட்ட (புறநா. 35, 8). 2. To deviate, depart from instructions; |
கவர் 3 - த்தல் | kavar- 11 v. intr. cf. id. [T.M.kava, K. kavalu.] 1. To branch off, as roads; பிரிவுபடுதல். அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும் (சிலப். 11, 73). 2. To fork, bifurcate; |
கவர் 4 | kavar n. <>கவர்-. [T. M. Tu. kava, K. kaval.] 1.Bifurcated branch, as of a tree or river; பிரியுங் கிளை. தெற்குநோக்கி நீர்பாய்கிற கவருக்குக் கிழக்கும் (S.I.I. iii, 45). 2. Divergence of branches, roads, rivers; 3. Prong, tine, as of a trident; 7. Cone-shaped white clay for marking the forehead; 5. Groove or a kind of mortise on the top of a gate or door-post to receive a beam; 6. Deception; 7. Plantain tree. See வாழை. (பிங்.) |
கவர்க்கால் | kavar-k-kāl n. <>கவர்+. 1. Forked prop; கவராயுள்ள முட்டுக்கட்டை. 2. Tree with forked branches; 3. Branch channel, in irrigation; |
கவர்க்குளம்பு | kavar-k-kuḷampu n. <>id.+. Cloven hoof; பிளவுபட்ட குளம்பு. |
கவர்கோடல் | kavar-kōṭal n. <>id.+கொள்-. A state of doubt; சந்தேகநிலை. சுட்ட றிரிதல் கவர்கோட றோன்றாது (மணி. 27, 22). |
கவர்ச்சி 1 | kavarcci n. <>கவர்1-. Captivation, attraction; இழக்கை. |
கவர்ச்சி 2 | kavarcci n. cf. gavākṣī. Whiteflowered Mussel-shell Creeper. See வெள்ளைக்காக்கணம். (மலை.) . |
கவர்ச்சுத்தியல் | kavar-c-cuttiyal n. <>கவர்+. Claw hammer; சுத்தியர் கருவிவகை. |
கவர்த்தடி | kavar-t-taṭi n. <>id.+. Forked stick, used as a pitchfork; முள்ளைத்தூக்கும் கவர்க் கோல். (W.) |