Word |
English & Tamil Meaning |
---|---|
கவலை 2 | kavalai n. 1. A rooted creeper; கிழங்குள்ள ஒருவகைக்கொடி. ஆய்கொடிக் கவலையும் (சிலப். 11, 82). 2. Malabar Sardine of beautiful green colour, attaining 7 in. in length Dussumieria acuta; |
கவலை 3 | kavalai n. [T. kapile, K. kapali, M. kappi, Tu. kapi.] A kind of waterlift. See கபிலை1. . |
கவலைகவற்று - தல் | kavalai-kavaṟṟu- v. intr. <>கவலை1+. To cause distress; வருத்தஞ் செய்தல். பேய்மகள் கவலைகவற்ற (பதிற்றுப். 67, 11). |
கவலைச்சால் | kavalai-c-cāl n. <>கவலை3+. Large leather bucket for a kapilai waterlift; கபிலையேற்றத்தில் தூக்குஞ் சால். |
கவலைபாய் - தல் | kavalai-pāy- v. intr. <>கவலை1+. 1. To be very anxious; கவலைமிகுதல். 2. To be so confused that one cannot attend to anything; 3. To be confused in the recitation of the Vēda; |
கவலையேற்றம் | kavalai-y-ēṟṟam n. <>கவலை3+. A kind of waterlift. See கபிலை1. . |
கவவு 1 - தல் | kavavu- 5 v. tr. 1. To put in, insert; அகத்திடுதல். செவ்வாய் கவவின வாணகை (திருக்கோ. 108). 2. To desire; 3. To embrace; 4. To copulate; 1. To crowd, to draw near; 2. To be connected; |
கவவு 2 | kavavu n. <>கவவு-. 1. Being contained; அகத்திடுகை. (தொல். சொல். 357.) 2. The contents of anything; 3. Embracing; Copulation; |
கவவுக்கை | kavavu-k-kai n. <> கவவு+. 3. Embracing arms; அணைத்த கை. திங்கண்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய் (சிலப். 7, 52). |
கவழம் | kavaḻam n. See கவளம். கவழ மறியாநின் கைபுனை வேழம் (கலித். 80). . |
கவழிகை | kavaḷikai n. cf. yavanikā. [K. kavadike.] Curtain; திரைச்சீலை. (W.) |
கவளம் | kavaḷam n. <>kavala. 1. Morsel, mouthful of food; வாயளவுகொண்ட உணவு. 2. Ball of rice or other food for an elephant; 3. Boiled rice; |
கவளி | kavaḷi n. 1. See கவளிகை. புத்தகக் கவளி யேந்தி (பெரியபு. மெய்ப். 7). . 2. Pack of betel leaves, its number varying in different places; |
கவளிகை | kavaḷīkai n. <>kavalikā. Bundle, as of books; கட்டு. புத்தகங் கட்டியார்த்த கவளிகையே கொலோ (சேதுபு. இராமதீர்.49). |
கவளீகரி - த்தல் | kavaḷīkari- v. tr. <>kavalī-kr. 1.To take in at one sweep; மொத்தமாக விழுங்குதல். 2. To misappropriate; |
கவற்சி | kavaṟci n. <>கவல்-. 1. Anxiety, concern; மனோவிசாரம். இரங்கினர் கவற்சியெய்தி (கந்தபு. மேரு. 19). 2. Grief, sorrow, anguish; 3. Desire; |
கவற்றி | kavaṟṟi n. <>id. See கவற்சி, புடை கவற்றியில்லா நிலைமை (இறை. 12, உரை). . |
கவற்று - தல் | kavaṟṟu- 5 v. tr. Caus. of கவல்-. To cause anxiety or sorrow; கவலையுறுத்துதல். காதல் கவற்று மனத்தினால் (நாலடி, 306). |
கவற்றுமடி | kavaṟṟu-maṭi n. A kind of silk used in ancient times; பட்டாடைவகை. (சிலப். 14, 108, உரை.) |
கவறல் | kavaṟal n. <>கவல்-. 1. Being anxious; விசாரங்கொள்கை. 2. Sorrowing, grieving; |
கவறாடல் | kavaṟāṭal n. <>கவறு1 + ஆடு-. Gambling; சூதாடுகை. காதல் கவறாடல் (நள. கலிதொ. 39). |
கவறு 1 | kavaṟu n. perh. கவர்1-. 1. Dice; சூதாடுகருவி. அரும்பொற் கவறங் குருள (சீவக. 927). 2. Gambling; |
கவறு 2 | kavaṟu n. prob. கவர். Palmyra timber; பனைவிட்டம். (J.) |
கவறுருட்டு - தல் | kavaṟuruṭṭu- v. intr. <>கவறு1+உருட்டு-. To play at dice; சூதாடுதல். |
கவறை | kavaṟai n. [M. kavara.]. Balija caste among the Telugus வடுகாருள் ஒருசாதி |
கவனஞ்செலுத்து - தல் | kavaṉa-celuttu- v. intr. <>கவனம்3+. To pay attention; கருத்தாயிருத்தல் |
கவனம் 1 | kavaṉam n. cf. kadana. 1. war போர். (சூடா). 2. Army 3. Perplexity, bewilderment 4. Heat |