Word |
English & Tamil Meaning |
---|---|
களவுகாண்(ணு) - தல் | Kaḷavu-kān-, v. tr. <> களவு1+ . To steal; திருடுதல். கைத்தலங் கண்ணாக் களவுகாண்பா னொருவன் (இலக் வி. 665, உரை). |
களவுச்சொத்து | Kaḷavu-c-cottu, n. <> id. +. Stolen property; திருட்டுப்பொருள். |
களவுப்புணர்ச்சி | Kaḷavu-p-puṇarcci, n. <> id. +. Clandestine union between lovers before marriage without the knowledge of others; தலைவனுந் தலைவியும் பிறரறியாது தனியிடத்தில் எதிர்ப்பட்டுக் கூடுகை |
களவுபண்ணு - தல் | Kaḷavu-paṇṇu-, v. <> id. + intr. To play the thief;(களவடித்தல்) To embezzle, swindle; அபகரித்தல் |
களவுபிடி - த்தல் | Kaḷavu-piṭi-, v. intr.<> id. +. To catch a thief by magic, stratagem, etc.; மந்திரதந்திரங்களால் திருடனைக் கண்டுபிடித்தல். (w.) |
களவேர்வாழ்க்கை | Kaḷavēr-vāḻkkai, n. <> id. + ஏர் +. Lit., living by the plough of theft, profession of thieving; திருட்டுத்தொழில். களவேர் வாழ்க்கையை ருறூங் கடுந்துயர் (மணி, 23, 126) |
களவேள்வி | Kaḷa-vēḷvi, n. <> களம்2+ . (Puṟap.) Theme eulogising a warrior on his destroying his enemies to feast, devils, as gods in a sacrifice; பேய்கள் வாயிறாரவுண்ணும்படி வீரன் போர்புரிந்து பகையழித்ததைக் கூறும் புறத்துறை (பு.வெ.8, 6, ) |
களவொழுக்கம் | Kaḷavoḻukkam, n. <> களவு1+ . See களவுப்புணர்ச்சி. களவொழுக்கமென்னும் பெயர்பெற்று (திருக்கோ, 1, உரை) |
களன் 1 | Kaḷan, n. <> களம2. 1. See களம். . 2. Agricultural tract; 3. Natural reservoir of water; |
களன் 2 | Kaḷan, n. Prob. kala. Sound, noise; ஓலி. (திவா) |
களன் 3 | Kaḷan, n. <> gala. Throat, neck; கழுத்து. (திவா.) |
களன் 4 | Kaḷaṉ, n. Perh. கல-. 1. Attachment, connection; தொடர்பு. (திவா.) 2. Stupor, bewilderment; |
களா | Kaḷā, n. cf. kāla. [K.kaḷave, M. kaḷavu.] 1. A low spreading shrub. See சிறுகளா. தீம்புளிக் களாவொடு துடரி முனையின் (புறநா. 177, 9). . 2. Large Bengal currant . See பெருங்களா. 3. Small lance-crenate-acute-leaved whortleberry, s.tr.,Vaccinium nilgherrense; 4. Farkleberry. See மலைக்களா. (L.) 5. Nepal barberry. See முண்முருங்கை. (L.) 6. Whirling - nut. See தணக்கு. (L.) |
களாக்காய் | Kaḷā-k-kāy, n. <> களா +. A circular piece of gold or silver in the shape of a carissa fruit attached to the necklace or tāli worn by women; களாக்காயுருவாகச் செய்யும் ஒரு வகைக் கழத்தணி. Loc. |
களாசம் | Kaḷacam, n. Cane, rattan; பிரம்பு. வேதாகமப் பவுரி வீசுங் களாசநிலை (ஒழிவி. பொது.1). |
களாசாத்திரம் | Kaḷā-cāttiram, n. <> kalā +. Treatise on sexual love; காமநூல் |
களாசி | Kaḷāci, n. <> காளாஞ்சி. See களாஞ்சி. வெண்குடை களாசி பகடுசாமரை (திருவாலவா, 30, 53). |
களாசுக்காரன் | Kaḷācu-k-kāraṉ, n. <> U. khalāsi +. Lascar; கப்பல்வேலையாள். Loc. |
களாஞ்சி | Kaḷāci, n. Spittoon. See காளாஞ்சி. உருப்பசி களாஞ்சி தாங்க (குற்றா. தல. திருமண. 131). |
களாப்பூ | Kaḷā-p-pū, n. <> களா +. A kind of woman's ear ornament; மகளிர் காதணிவகை. Loc. |
களாப்பூக்கோரை | Kaḷā-p-pū-k-kōrai, n. <> id. +. A kind of sedge; கோரைவகை. (w.) |
களாபாடனம் | Kaḷā-pāṭaṉam, n. kalā + pāṭhana. Imparting knowledge, one of 14 tayā-virutti, q.v.; தயாவிருத்தி பதினான்கனுள் கல்வி பயிற்றுகை. (w.) |
களாய் | Kaḷāy, n. U. qalaī. Tin. See கலாயி. பாத்திரத்துக்குக் களாய் பூசுகிறது., Loc. |
களாவகம் | Kaḷāvakam, n. cf. கன்னவகம். A species of amaranth. See சிறுகீரை.(மலை.) . |
களாவதி | Kaḷāvatī, n. <> kalāvati. A kind of lute; விணைவகை. (பரத.ஒழிபி.15.) |
களாவம் | Kaḷavam, n. <> kalāpa. Girdle; இடையணி. களாவம் ஒன்றிற் கோத்த முத்துவட்டமும் அனுவட்டமும் (S.I.I. ii, 180). |
களி 1 - த்தல் | Kaḷi-, 11 v. intr. 1. [M. kaḷi.] To exult rejoice glow with delight; மகிழ்வடைதல். கருணைமட்டுப் பருகிக்களித்து (திருவாச. 6, 33). 2. To be intoxicated; to revel, as bees feeding on honey; 3. To be in rut, as an elephant; 4. To be proud, vain, conceited; |
களி 2 | Kaḷi, n. <> களி-. 1. [M. kaḷi.] Joy, delight, exhilaration, exultation, mirth, hilarity ; மகிழ்ச்சி. களிவந்த சிந்தையோடு (திருவாச. 6, 5). 2. Revelling, intoxication, inebriation; 3. Honey; 4. [T. Tu. kaḷi.] Toddy; 5. Drunkard, reveller; 6. Stanza in kalampakam embodying the effusions of a drunkard; 7. Arrogance, pride; 8. Bewilderment; 9. Must in an elephant; |