Word |
English & Tamil Meaning |
---|---|
அந்திரக்கண்மணி | antira-k-kaṇmaṇi n. <>antara+. Sapphire. See நீலக்கல். (மூ.அ.) |
அந்திரக்கொடிச்சி | antira-k-koṭicci n. Sulphur; கந்தகம். (மூ.அ.) |
அந்திரம் | antiram n. <>antra. Small intestines; சிறுகுடல். (இங்.வை.) |
அந்திரவசனம் | antira-vacaṉam n. Raw areca-nut; கொட்டைப்பாக்கு. (மூ.அ.) |
அந்திரன் | antiraṉ n. <>antara. God; தேவன். அந்திரனை யாரூரி லம்மான் றன்னை (தேவா.723, 4). |
அந்தில் 1 | antil <>அ. adv.; part. There; An expletive generally in poetry; அவ்விடம். (தொல். சொல்.269). ஓர் அசைச்சொல். (தொல்.சொல்.269.) |
அந்தில் 2 | antil n. cf. andya. White mustard. See வெண்கடுகு. (பிங்.) |
அந்திவண்ணன் | anti-vaṇṇaṉ n. <>sandhi+. Siva, as having the rosy colour of sunset; சிவன். (பிங்.) |
அந்து 1 | antu n. [K.andi.] A small grey-winged insect found in stored paddy; நெற்பூச்சி. அந்துகடிதுண்டுபோய கதிர்நெல்லும் (பிரபோத.19, 6). |
அந்து 2 | antu adv. <>K. Intu. In that way, thus; அப்படி. அந்துசெய்குவனென (கம்பரா. இராவணன்வதை. 61). |
அந்து 3 | antu n. <>anta. End; அந்தம். ஆதியந் தகன்ற (சீவக. 3082). |
அந்து 4 | antu n. <>andu. Chain for an elephant's leg; யானைக்காற் சங்கிலி. அந்துப் போதிகை. |
அதுக்கண்ணி | atu-k-kaṇṇi n. Blear-eyed, ill-looking woman; பிளிச்சைக்கண்ணி. அந்துக்கண்ணிக்கு அழுதாலும் வாரான் அகமுடையான். |
அந்துப்போதிகை | antu-p-pōtikai n. <>andu+. Stake for fastening the hind leg chain of an elephant; யானையின் பின்காற் சங்கிலி கட்டுங் குறுந்தறி. அடுகளி றந்துப் போதிகை பரிந்து (சீவக. 1831). |
அந்தேசம் | antēcam n. Extremity, great straits; கதியின்மை. (J.) |
அந்தை | antai n. An ancient standard weight; நிறைவகை. (தொல்.எழுத்.170,உரை.) |
அந்தோ | antō int. cf. hanta. Regarded as a Sinhalese word (தொல்.சொல்.400. உரை). Alas! expressing surprise, pity or distress; அதிசயவிரக்கச்சொல். அந்தோவென்னாருயிரே யரசே யருள் (திவ். பெரியதி.7, ,6). |
அந்தோர் | antōr n. Emblic myrobalan. See நெல்லி. (மலை.) |
அநாதப்பள்ளிக்கூடம் | anāta-p-paḷḷi-k-kūṭam n. <>a-nātha+. School for helpless children, orphanage; அநாதப்பிள்ளைகட்கு ஏற்பட்ட பள்ளிக்கூடம். Mod. |
அநாதப்பிரேதம் | anāta-p-pirētam n. <>id.+. Unclaimed corpse. அநாதப்பிரேத ஸம்ஸ்காரம். |
அநாதப்பிள்ளை | anāta-p-piḷḷai n. <>id.+. Orphan, as without guardians . |
அநாதரட்சகர் | anāta-raṭcakar n. <>id.+. Saviour of the helpless, Lord; கடவுள். |
அநாதன் | a-nātaṉ n. <>a-nātha 1. One who has no superior, the Deity; தனக்குமே லொரு தலைவ னில்லாதவன். ஞாலம் விழுங்கு மநாதனை (திவ்.இயற். திருவிருத். 79). 2. One who has no protector, poor, helpless person; |
அநாதி | a-nāti n. <>a-jāti. Helpless person; திக்கற்றவன். Colloq. |
அநாமதேயன் | anāmatēyaṉ n. <>a-nāmadhēya. Man unknown to fame, as nameless; அப்பிரசித்தன். |
அநாமிகை | anāmikai n. <>a-nāmikā Ring-finger, as having no specific name; மோதிர விரல். பெருவிரலை யநாமிகையோ டியையக் கூட்டி (கூர்மபு. சுத்தாசம. 10). |
அநாயகம் | anāyakam n. <>a-nāyaka. Want of ruler, anarchy; அரசின்மை. |
அநாயம் | anāyam n. <>a-nyāya. Uselessness; வீண். (தேவா.859,7.) |
அநிசம் | anicam adv. <>anišam. Always; எப்பொழுதும். அநிசம் பற்றின்றி நிற்கும் (ஞானவா.புண்ணி. 11). |
அநித்தம் | anittam n. See அநித்தியம். (சி.சி.பர.நிகண்.7) |
அநித்தியம் | anittiyam n. <>a-nitya. 1. Instability; நிலையாமை. 2. That which is transient, unstable; |
அநிதம் | anitam n. <>a-niyata. That which is unrestricted, unlimited; அளவுகடந்தது. அநித கோடி யணிமுடி மாலையும் (பெரியபு. திருமலை.5). |
அநியாயம் | aniyāyam n. <>a-nyāya. 1. Injustice, wrong action; அக்கிரமம். (தாயு. சுகவாரி, 12.) 2. Uselessness; |
அநிர்வசனம் | anirvacaṉam n. <>a-nir-vacana. Māyā; மாயை. (சி.சி.1, 27, சிவஞா.) |
அநிர்வசனீயம் | anirvacaṉīyam n. <>a-nirvacanīya. 1. That which is indefinable; சரியாக நிரூபிக்க முடியாதது. 2. Māyā; |