Word |
English & Tamil Meaning |
---|---|
காகபலி | kāka - pali n. <> kāka + . Ball of rice thrown to crows by Hindus just before their midday meal பகலில் உணவுகொள்ளுதற்கு முன்பு காகத்துக்கு இடும் பலி |
காகபாதம் | kāka-pātam n. <>kāka-pāda. A flaw in diamond, one of 12 vayira-k-kuṟṟam, q.v.; வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.) |
காகபாஷாணம் | kāka-pāṣāṇam n. prob. kāka + . A prepared arsenic, one of 32 ; வைப்புப் பாஷாணவகை. (மு.அ.) |
காகபிந்து | kāka-pintu n. <>kāka-bindu. Black dot ; கரும்புள்ளி. வயிரம், ரக்தபிந்துவும் காக பிந்துவும் உடையன (S.I.I. ii, 78). |
காகபீலி | kāka-pīli n. <>kāka-pīlu. Crab's eye. See குன்றி. (சங்.அக.) |
காகம் | kākam n. <>kāka. 1. Crow, Corvus spledens; காக்கை. காகபந்தரிற் கருமுகிற் காளிமங்கஞலும் (கந்தபு. ஆற்றுப். 13). 2. The 23rd nakṣatra. See அவிட்டம். (சாதகசிந். காலநிகண். 20.) |
காகமாசி | kāka-māci n. <>kāka-mācī. Black nightshade . See மணித்தக்காளி. (தைலவ. தைல. 76.) . |
காகரி | kākari n. cf. krkarā Long pepper . See திப்பலி. (மலை.) . |
காகலிநிஷாதம் | kākali-niṣātam n. <>kākaīī-niṣāda. (Mus) Highest variety of the seventh note of the gamut, one of cōṭacacuram, q.v. ; ஏழாம் இசை வகையுள் ஒன்று. |
காகவாகனன் | kāka-vākaṉaṉ n. <>kāka+vāhana. Saturn, as riding a crow ; சனி (சங்.அக) |
காகவிருந்தம் | kāka-viruntam n. prob.id.+vrnta. A variety of diamond ; வயிரமணி வகை. வயிரம் காகவிருந்தமும் உருளையுமாக ஜந்தும் (S.I.I ii, S96, 143). |
காகவோசை | kāka-v-ōcai n. <>id.+. See காகசுரம். வினைபடு காகவோசை (திருவாலவா. 57, 26). . |
காகளம் | kākaḷam n. <>kāhala. Trumpet ; எக்காளம். கல்லென விரங்குறு கரடி காகளம் (கந்தபு. சரவண. 9) . |
காகாட்சிகோளநியாயம் | kākāṭci-kōḷaniyāyam n. <>kākākṣi-gōla-nyāya. Illustration of the single eye-ball of the crow functioning through both the eyes, to explain the same word or phrase being construed twice ; காகத்தின் இருகண்களுக்கும் ஒன்றே மணி யானாற்போல ஒரே சொல் அல்லது தொடர் ஈரிடத்து இயைந்து பொருள்விளக்கும் நெறி . |
காகாபிசாசு | kākā-picācu n. See காகா விரிச்சி. (J.) . |
காகாவிரிச்சி | kākā-viricci n. <>kāka+வெருட்சி. A kind of vampire-bat of black colour and bristling hair ; இரத்தழண்ணும் வௌவாற்பறவை. (J.) |
காகித்தம் | kākittam n. See காகித்திரம். . |
காகித்திரம் | kākittiram n. Indian ipecacuanha. See குறிஞ்சா. (மலை) . |
காகிதம் | kākitam n. <>Mhr. kāgada. (U. kāgaz.) 1. Paper கடுதாசி 2. Epistle written on paper ; |
காகு | kāku n. <>kāku. Modulation of voice which indicates an implied meaning ; கூறப்படாதபொருளைத் தரக்குடிய சொல்லின் ஓசைவேறுபாடு. (குறள்,1318, உரை) |
காகுத்தன் | kākuttaṉ n. <>Kākutstha. Rama, the hero of the Rāmāyaṇa, as a descendant of aKakutstha ; ககுத்ஸ்தவமிசத்தில் தோன்றிய இராமன். காயுங் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால் (திவ். திருவாய். 5, 4, 3) . |
காகுராசி | kākurāci n. Snake-gourd. See புடல். (மலை.) . |
காகுளி 1 | kākuḷi n. cf. kāhala. 1. Harsh demoniac sound in singing ; பேய் கத்தினாற்போலப் பாடுவது. (கல்லா. 21, 40.) 2. (Mus.) Guttural sound, bass; 3. Tune, melody, music ; |
காகுளி 2 | kākuḷi n. Seat, mat, bed ; தவிசு. (பிங்.) |
காகூவெனல் | kā-kū-v-eṉal n. Onom. expr. as in wailing ; ஒர் ஒலிக்குறிப்பு |
காகோடகி | kākōṭaki n. Black Oil tree. See வாலுளூவை. (மலை.) |
காகோடி | kākōṭi n. cf. kākōla. Strychnine tree. See எட்டி. (மலை.) . |
காகோடியன் | kā-kōṭiyaṉ n. prob. கா+கோடியன் Strolling dancer ; கழைக்கூத்தன். (அக.நி.) |
காகோதம் | kākōtiam n. See காகோதரம். கங்கு லிரைதேருங் காகோதராசனும் (திருப்பு.) . . |
காகோதரம் | kākōtaram n. <>kākōdara. Lit., that which moves on its belly in a zigzag way, snake ; பாம்பு. (பிங்.) |
காகோலம் | kākōlam n. <>kākōla. Jungle crow, raven. See அண்டங்காக்கை. (உரி. நி.) . |
காகோளி | kākōḷi n. cf. kaṅkēli 1. Ašōka. See அசோகு. (திவா.) . 2. Indian turnsole. See தேட்கொடுக்கி. 3. Wild pipal. See கொடியரசு. |
காங்கி | kāṅki n. <>kāṅkṣin. Avaricious person ; பேராசைக்காரன். மற்றவன் கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் (நான்மணி. 61) . |