Word |
English & Tamil Meaning |
---|---|
காடாந்தகாரம் | kāṭāntakāram n. <>id.+ andha-kāra. Pitch-darkness, thick darkness; கனத்த இருள். (சி.சி-2, 58, சிவாக்.) |
காடாய்ப்போ - தல் | kāṭāy-p-pō- v. intr. <>காடு1 + [M. kādāykkida.] To lie waste, grow woody as land; மரமடர்ந்து நிலம் பயனின்றி ஒழிதல். |
காடாரம்பம் | kāṭārampam n. <>id. + [T. kādārambamu, K. kādāramba.] Dry tract rain-fed land where only dry crop can be raised, opp. to nīr-ārampam; நீர்ப்பாசனம் இல்லாத பிரதேசம்.(G. Tn. D. i, 293). |
காடாலிங்கனம் | kāṭāliṅgaṉam n. <>gādha + ā-liṅgana. Close embrace; இறுகத்தழுவுகை. |
காடாவிளங்கு | kāṭā-viḷakku n. <>id.+. See காடவிளக்கு. . |
காடாற்று - தல் | kāṭāṟṟu- v. intr. <>காடு1 +. To perform the ceremony connected with quenching the fire when a corpse has been burnt and collecting the bones in a new earthen pot; சஞ்சயனக்கிரியை செய்தல். இரண்டு மூன்று நாளுறுங் காடாற்றாமுன் (மச்சபு. சபிண்டீ.19). |
காடாற்று | kāṭāṟṟu n. <>காடாற்று-. Ceremony of quenching the fire when a corpse has been burn and collecting the bones; சஞ்சயனம். |
காடி 1 | kāṭi n. <>கடு1-. [T. kādi, M. kāṭi.] 1. Fermented gruel or rice-water; புளித்த கஞ்சி. (பதார்த்த. 49.) 2. Vinegar; 3. Gruel; 4. Acetous fermentation of sweet fruits; 5. Pickles; |
காடி 2 | kāṭi n. prob. கடி5. cf. ghṟta. Ghee; நெய் (பெரும்பாண். 57, உரை.) |
காடி 3 | kāṭi n. prob. ghāṭikā 1. Neck, nape of the neck; கழுத்து. காடியின் மிதப்ப வயின்ற காலை (பொருந. 115). 2. Neck like elevation on the floor for placing big pots; |
காடி 4 | kāṭi n. <>khārī. A measure of capacity for grain; தானியத்தின் முகத்தலளவுள் ஒன்று. ஆயிரக்காடி நெல் (S.I.I. iii, 9). |
காடி 5 | kāṭi n. <>U. gādi. Cart, carriage; வண்டி. |
காடி 6 | kāṭi n. <>U. ghāṭi. 1. Trench of a fort; அகழி. 2. A fireplace in the form of a long ditch; 3. Manger; 4. Groove in wood work, rabbet; |
காடிக்காரம் | kāṭi-k-kāram n. <>காடி1 +. Nitrate of silver, lunar caustic, Argenti nitras; நெருப்புக்கல். (மூ.அ.) |
காடிகம் | kāṭikam n. <>காழகம். Cloth, stiffened with starch or gruel; சீலை. (சூடா.) |
காடிகானா | kāṭi-kāṉā n. <>U. gādī-khāna. Cart-stand, carriage house, shed for keeping carts; வண்டியை நிறுத்தும் கட்டடம். |
காடிச்சால் 1 | kāṭi-c-cāl n. <>காடி1+. Broadmouthed pot for keeping sour rice-water; காடி வைக்குஞ் சால் (சினேந்.172.) |
காடிச்சால் 2 | kāṭi-c-cāl n. <>காடி6+. Groove in wood work, rabbet; மரவேலையின் பொளிவாய். |
காடிச்சால்மூலை | kāṭi-c-cāl-mūlai n. <>காடி1+. North-eastern corner where waste water is emptied in a pot at sacrifice; யாகசாலையிற் காடி வைக்கப்படும் வடகிழக்குத்திசை. காடிச்சால்மூலையில் தேவதையை ஆயித்தாராகில் (திவ். கண்ணிநுண். வ்யா. அவ. பக்.5). |
காடியடுப்பு | kāṭi-y-aṭuppu n. <>காடி6+. A fireplace in the form of a long ditch used for cooking on a large scale; கோட்டையடுப்பு. |
காடியலகு | kāti-y-alaku n. <>id. +. Groove cutter; பொளிவாய் செதுக்குங் கருவி. (C.E.M.) |
காடியிழைப்புளி | kāṭi-y-iḻaippuḷi n. <>id. +. Plough-plane; தச்சுக்கருவி வகை. (C.E.M.) |
காடியுளி | kāṭi-y-uḷi n. <>id. +. Rabbet plane; இழைப்புளி வகை. (C.E.M.) |
காடிவெட்டு - தல் | kāṭi-veṭṭu- v.intr. <>id. +. To scoop, cut into hollowness; பள்ளந்தோண்டுதல். (W.) |
காடினியம் | kāṭiṉiyam n. <>kāṭhinya. Hardness, rigidity, toughness; கடினத்தன்மை. |
காடு 1 | kāṭu n. <>கடி5. cf. kāṣṭha [T.K. M. Tu. kādu.] 1. Forest; jungle; desert; வனம். காடே கடவுண் மேன (பதிற்றுப். 13, 20). 2. Excessiveness, abundance; 3. Density; 4. Chaff, straw, etc.; |
காடு 2 | kāṭu n. cf. kāṣṭhā. 1. Border, limit; எல்லை. (பிங்.) 2. A measure = 4 aṇaippu = more than 2 acres; 3. Burning-ghat, burial ground; 4. Place; tract of land; 5. Dry land; 6. Small village; |
காடு 3 | kāṭu part. An ending of verbal nouns, as in சாக்காடு ஒரு தொழிற்பெயர்விகுதி. |