Word |
English & Tamil Meaning |
---|---|
காடைப்புடம் | kāṭai-p-puṭam n. <>id. +. (Med.) A measure determining the strength of fire in the calcination of reduction of metals with a single dried dung cake; காடையளவாக ஒரெருவிட்டு எரிக்கும் மருந்துப்புடம். (மூ.அ.) |
காடையிறகு | kāṭai-y-iṟaku n. <>id. +. Crest made of variegated feathers, worn by stage-players; நாடகநடிப்போர் தலையிலணியும் பல நிறமுள்ள இறகு. (W.) |
காடோடி | kāṭōṭi n. <>காடு1 + ஓடு-. [M. kāṭoṭi] One who roams about in forest, savage, rustic; வனத்தில் திரிபவன். Colloq. |
காண்(ணு) 1 - தல் | kāṇ- 13 v.[T.Kānu, K.M.kāṇ.] tr. 1. To see, perceive, view, descry; பார்த்தல். காணிற் குடிப்பழியாம் (நாலடி, 84). 2. To gain sight of, as a deity, a great person, the new moon; 3. To discover, find out; 4. To make, create; 5. To perceive by the senses; 6. To consider, investigate; 7. To experience; 8. To regard; 9. To worship, venerate, reverence; 10. To put to flight, drive away, as seeing the back of enemies; 11. To attain, obtain, get; 12. To tell, say; 13. To look like, resemble; 14. To befit; 1. To accrue, result; 2. To appear, to be found, to become visible, evident; 3. To be sufficient; |
காண் 2 | kāṇ <>காண்-. n. 1. Sight காட்சி. காண்பிறந் தமைந்த காதல் (கம்பரா. திருவடிதொழு. 70). 2. Beauty; Expletive of the 2nd pers. meaning behold; |
காண்கை | kāṇkai n. <>id. Knowledge; அறிவு. பொய்யா...காண்கையர் (முல்லைப். 56). |
காண்டகம் 1 | kāṇṭakam n. perh. காண்-. 1. cf. Kāṇda Jungle, desert, woods; காடு. (பிங்.) 2. cf. Kaṇṭaka. Sickness, malady, disease; |
காண்டகம் 2 | kāṇṭakam n. prob. karaṇdaka. Pot with a spout, ewer; கமண்டலம். (பிங்.) |
காண்டகம் 3 | kāṇṭakam n. cf. šara-kāṇda. See காண்டம். (மூ.அ.) . |
காண்டகம் 4 | kāṇṭakam n. cf. kāṇda-tikta. See காண்டம். . |
காண்டம் 1 | kāṇṭam n. perh. காண்-. 1. cf. kandara. Mountain, hill; மலை. (பிங்.) 2. cf Kāṇda. Jungle, desert, wilderness; |
காண்டம் 2 | kāṇṭam n. <>kāṇda. 1. Water; sacred water; நீர். துருத்திவா யதுக்கிய குங்குமக் காண்டமும் (கல்லா. 49, 16). 2. Staff, rod; 3. Stem, stalk; 4. Arrow; 5. Weapon; 6. A large section of a book; 7. End, limit; 8. Opportunity, season; 9. Collection, multitude, assemblage; |
காண்டம் 3 | kāṇṭam n. <>karaṇdaka. (சூடா.) 1. Jewel-box; ஆபரணச் செப்பு. 2. Ewer; |
காண்டம் 4 | kāṇṭam n. prob. kāṇda-tikta. Ground neem. See நிலவேம்பு. (M.M. 177.) . |
காண்டம் 5 | kāṇṭam n. <>kāṇda-paṭa. 1. [K. kāṇda.] Curtain; திரைச்சீலை. (பிங்.) 2. Cloth, garment; |
காண்டம் 6 | kāṇṭam n. <>šara-kāṇda. A mineral poison. See சரகாண்டபாஷாணம். (மூ.அ.) . |
காண்டம் 7 | kāṇṭam n. Moon creeper. See சீந்தில். (மூ.அ.) . |
காண்டமந்திரம் | kāṇṭa-mantiram n. <>kāṇda+. A mantra that enables a horse to fly through the air; குதிரைகளை வானிற் பறக்கச்செய்யும் மந்திரம். (சீவக. 793, உரை.) |
காண்டமோசனம் | kāṇṭa-mōcaṉam n. <>id.+. Ceremony performed at the close of the study of a Kāṇda of a Vēda; வேதத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் ஓதிமுடிக்குங்காற் செய்யுங்கிரியை. (திருவானைக். கோச்செங். 14.) |
காண்டல் | kāṇṭal n. <>காண்-. See காண்டலளவை. காண்டல் கருத லுவம மாகமம் (மணி. 27, 9). . |
காண்டலளவை | kāṇṭal-aḷavai n. <>காண்டல்+. (Log.) Perception; means of perception; பிரத்தியட்சப்பிரமாணம். |
காண்டவதகனன் | kāṇṭava-takaṉaṉ n. <>khāṇdava+dahana. Arjuna, who burnt down the Khāṇdava forest; அருச்சுனன். (சங்.அக.) |