Word |
English & Tamil Meaning |
---|---|
காணம் 2 | kāṇam n. <>K. gāṇa. 1. Oilpress; செக்கு. (சூடா.) 2. A measure of capacity, as much as will fill an oil-press; |
காணம்போடு - தல் | kāṇam-pōṭu- v. tr. <>காணம்2 +. 1. To extract oil by an oil-press, as from coconuts, etc.; செக்காட்டி எண்ணெய் எடுத்தல். காணம்போடுகிறதற்காகத் தேங்காய் உடைக்கிறார்கள். 2. To eat frequently, as children; |
காணல் | kāṇal n. <>காண்-. 1. Beholding; காண்கை. காணலுறுகின்றேன் (திவ். இயற். 4, 41). 2. Seeing with the mind's eye; thinking, considering; 3. Reverencing, worshipping; |
காணலன் | kāṇalaṉ n. <>id. +. அல் neg. Enemy, as one whose sight is unbearable; பகைவன். காணலற் செற்ற காளை (பாரத வேத்.20). |
காணலிங்கம் | kāṇa-liṅkam n. <>gāṇa +. šiva-lingam established by the elestial hosts of šiva; சிவகணங்களால் தாபிக்கப்பட்ட சிவலிங்கம். (சைவவி. 203.) |
காணன் | kāṇaṉ n. <>kāṇa. One-eyed man; ஒற்றைக்கண்ணன். கூனன் காண னிருகண்ணுமில்லான் (சைவச ஆசாரி.10). |
காணா | kāṇā n. A small reptile; சிறுபாம்பு. |
காணாக்கடி | kāṇā-k-kaṭi n. <>காண்-+ ஆ neg. +. 1. Bite or sting of a reptile in the dark; இன்னது கடித்ததென்று அறியமுடியாத விஷக்கடி. Colloq. 2. Bite of a reptile named kāṇā; |
காணாக்கண்ணிடு - தல் | kāṇā-k-kaṇṇiṭu- v. tr. <>id.+<>id.+. To overlook, connive; பார்த்தும் பாராததுபோலுதல். இவன்செய்த குறையைத் தான் காணாக்கண்ணிட்டிருக்கையன்றிக்கே (ஈடு, 6, 10, 10). |
காணாக்காட்சி | kāṇā-k-kāṭci n. <>id. + id.+. A rare spectacle, wonderful sight, exhibition, as not seen before; அற்புதக்காட்சி. |
காணாக்கிரகணம் | kāṇā-k-kirakaṇam n. <>id.+<>id.+. Invisible eclipse; பாதாளக்கிரகணம். (W.) |
காணாக்கிரகம் | kāṇā-k-kirakam n. <>id.+ id.+ graha. See காணாக்கோள். (W.) . |
காணாக்கோல் | kāṇā-k-kōl n. <>id.+id.+. Arrow shot unseen; தெரியாதுவந்து தைக்கும் அம்பு. காணாக்கோலாகவந்து தைக்கிறபடி (திவ். இயற். திருவிருத்.75, வயா.). |
காணாக்கோள் | kāṇā-k-kōḷ n. <>id.+ id.+. Phenomena of the heavens, sometimes visible and sometimes not, opp. to kāṇuṅ-kōḷ. See கரந்துறைகோள். . |
காணாசி | kāṇāci n. <>காணியாட்சி. T. K. [kāṇāci.] See காணியாட்சி. (C.G.) . |
காணாத்தலம் | kāṇā-t-talam n. <>காண்-+ஆ neg.+. Private parts genitals, as kept concealed from view; ஆண்பெண்குறிப்பொது. (W.) |
காணாதம் | kāṇātam n. <>kāṇāda. (Phil.) The Vaišeṣika system of philosophy. See கணாதமதம். . |
காணாபத்தியம் | kāṇāpattlyam n. <>gāṇapatya. See காணபத்தியம். Colloq. . |
காணார் | kāṇār n. <>காண்- + ஆ neg. 1. cf. kāṇa. Blind men; குருடர். காணார் கேளார் கான்முடப்பட்டோர் (மணி. 13, 111). 2. Enemies; |
காணாவுயிர் | kāṇā-v-uyir n. <>id. + id.+. An insect too small to be seen; நுண்ணிய உடம்புள்ள பிராணி. காணாவுயிர்க்குங் கையற்றேங்கி (மணி 3, 89). |
காணி 1 | kāṇi n. <>id. [T.K.M. Tu. kāṇi.] 1. The fraction 1/80; ஓரெண். முந்திரிமேற் காணிமிகுவதேல் (நாலடி, 346). 2. A land measure = 100 kuḻi, or 1.32 acres nearly; 3. cf. kṣōṇī. Land; 4. Landed property, estate, possession; 5. Right of possession; hereditary right; 6. A weight, = 1/40 of a macāṭi; |
காணி 2 | kāṇi n. <>பொன்னாங்காணி. A plant growing in damp places. See பொன்னாங்காணி. (தைலவ. தைல.) . |
காணிக்கடன் | kāṇi-k-kaṭaṉ n. <>காணி1+. Land-tax; நிலவரி. இவ்வூர் இறை கட்டின காணிக்கடன் (S.I.I. iii, 35). |
காணிக்காரன் | kāṇi-k-kāraṉ n. <>id. + [M. kāṇikkāraṉ.] 1. Hereditary proprietor of land, coparcener in village lands held in common; கிராமப்பங்காளி. Loc. 2. A hill tribe in the Tinnevelly district and Travancore; one belonging to that tribe; |