Word |
English & Tamil Meaning |
---|---|
காத்திரவேயம் | kāttiravēyam n. <>kādravēya. Serpent; பாம்பு. (உரி.நி.) |
காத்திரவேயர் | kāttira-vēyar n. <>id. A class of Nāgas or serpent demons supposed to inhabit the lower regions, as the children of Kadru; பாதாளத்தில் வசிக்கும் நாகர் காத்திரவேயரை மன்னன் மைந்தரு மொத்தார் (பாரத. சம்பவ.119). |
காத்திரி 1 | kāttiri n. perh. காதிரி3+-. See காத்திரம்1. (பிங்.) . |
காத்திரி 2 | kāttiri n. <>kṣātra. See காத்திரம். (பிங்.) . |
காத்திரி 3 | kāttiri n. cf. šastra. Weapon; படைக்கலம். (W.) |
காத்திரு - த்தல் | kāttiru- v.tr. <>கா-+ இரு-. [Tu. kātonuni.] 1. To wait, expect, watch for look for; எதிர்பார்த்திருத்தல். 2. To safeguard, as one's property; |
காத்திரை | kāttirai n. See காத்திரி3. (அக.நி.) . |
காத்தூட்டு - தல் | kāttūṭṭu- v. tr. <>கா-+ஊட்டு-. To make frequent use of one's dogma in such a way as to make it pleasant; தனது கொள்கையை அடிக்கடி எடுத்தாண்டு மகிழ்வூட்டுதல். அது நிலைநிற்கைக்காகவும் அத்தைக் காத்தூட்டுகைக்காகவும். (திவ். திருப்பா. 29, வ்யா.). |
காத்தூலம் | kāttūlam n. A garment of ancient times; பண்டைக்காலத்து வழங்கிய துகில் வகை. (சிலப்14, 108, உரை.) |
காத்தை | kāttai part. Expletive; ஓர் அசைநிலை (தொல், சொல் 426, உரை.) |
காத்தொட்டி | kāttoṭṭi n. See காத்தட்டி. (W.) . |
காத்தோட்டி | kāttōṭṭi n. See காத்தட்டி. . |
காதகம் | kātakam n. <>ghātaka. 1. Killing, taking away life; கொலை. 2. Harassing, torturing; |
காதகன் | kātakaṉ n. <>id. 1. Murderer; கொலையாளி. (பிங்.) 2. Villain; |
காதடை - த்தல் | kātaṭai v. intr. <>காது1+. To experience a choking sensation in the ear owing to fatigue, hunger, disease, etc.; நோய் முதலியவற்றால் செவி கேளாதுபோதல். |
காதடைப்பு | kātaṭaippu n. <>id. +. Deafness occasioned by a fatigue disease, etc.; நோய்முதலியவற்றால் காதுகேளாமை. |
காதணி | kātaṇi n. <>id. + அணி. Ear ornament; காதுக்கிடும் ஆபரணம். (திவா.) |
காதம் 1 | kātam n. cf. gavyūta.[K. gāvada, gāvuda, M. kātam, Tu. gāvuda.] Indian league, about 10 miles; ஏழரை நாழிகைவழி காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ் 5, 3, 4). |
காதம் 2 | kātam n. <>ghāta. Killing, slaughter, murder; கொலை. (W.) |
காதம்பம் | kātampam n. <>kādamba. 1. A kind of swan with dark grey wings; அன்னப்புள்வகை. (W.) 2. A kind of wood-fowl with long legs; |
காதம்பரி | kātampari n. <>kādambarī. 1. Tamil rendering of the Sanskrit Kādambari of Bāna by ādi-varāka-kavi; ஆதிவராககவியால் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்க்காவியம். (செந். 5, 492.) 2. Toddy; |
காதர் | kātar n. <>U. qādir, [M. kādar.] The Almighty; சர்வசக்தியுள்ள கடவுள். Muham. |
காதர் பசந்து | kātar-pacantu n. <>id. +. A kidney-shaped graft mango, fleshy, and of milky flavour when ripe; மாம்பழவகை. |
காதரம் | kātaram n. <>kātara. 1. Timidity, want of courage; அச்சம். காதரந் தீர்த்தருளும் (திருக்கோ. 117). 2. Effect of evil deeds upon the soul; |
காதரவு | kātaravu n. <>id. See காதரம். காதரவு செய்து நலங் கற்பித்து (அருட்பா, i, நெஞ்சறி. 170). . |
காதரன் | kātaraṉ n. <>id. Timid person; அச்சமுடையவன். (பிங்.) |
காதல் 1 | kātal n. perh. காது-. [T. gādili, K. kādal.] 1. Warm attachment, fondness, love, affection; அன்பு. காதல்வேண்டி யெற்றுறந்து போதல் செல்லா வுயிர் (அகநா. 55). 2. cf. khēda. Lust; 3. Reverence, devotion; 4. Desire, longing; 5. Earnestness, intentness, eagerness; 6. Son, as an object of love; 7. A kind of amorous poem; |
காதல் 2 | kātal n. <>காது-. 1. cf. ghāta. killing; கொல்லுகை. (சூடா.) 2. Fighting; 3. Cutting in pieces, breaking, snapping; 4. Cry, chirp of certain birds, as ominous; 5. Peg for driving out nails; |