Word |
English & Tamil Meaning |
---|---|
காணிக்கை | kāṇikkai n. காண்-. [T. kānuka, K. Tu. kāṇike, M. kāṇikka.] Voluntary offering, commonly in money, gold, fruits; gift to a temple or church; present to a guru or other great person; கடவுளர்க்கேனும் பெரியோர்கட்கேனும் சமர்ப்பிக்கும் பொருள் வேதாளநாதன் மகிழுங் காணிக்கையாகி (சேதுபு. வேதாள. 34). |
காணிக்கைத்தட்டு | kāṇikkai-t-taṭṭu n. <>காணிக்கை+. Salver for receiving gifts; காணிக்கைவாங்குந் தாலம். |
காணித்தாயம் | kāṇi-t-tāyam n. <>காணி1+. See காணித்தாயவழக்கு. . |
காணித்தாயவழக்கு | kāṇi-t-tāya-vaḻakku n. <>id. +. Dispute between coparceners about hereditary land; பங்காளிகளின் நிலவழக்கு. (J.) |
காணித்துண்டு | kāṇi-t-tuṇṭu n. <>id. +. Piece or strip of land; நிலத்தின் சிறுபகுதி. (W.) |
காணிப்பற்று | kāṇi-p-paṟṟu n. <>id. +. Village in full ownership; உரிமைக்கிராமம். குரு குலராயன் காணிப்பற்று மணவிலிருக்கை (Insc.). |
காணிப்பூமி | kāṇi-p-pūmi n. <>id. +. Land in full ownership; உரிமைநிலம். (W.) |
காணிமானியம் | kāṇi-māṉiyam n. <>id. +. (C. G.) 1. Hereditary land exempt from all tax; சர்வமானியம். 2. Inam land enjoyed in common by the whole community of mirasdars in a village; |
காணியாட்சி | kāṇi-y-āṭci n. <>id. [T. K. kāṇayāci.] Hereditary right to land, to offices, to fees, to an estate or to a kingdom; domain obtained by inheritance; that which is held as free and hereditary property; estate, one's own possession; உரிமைநிலம். மேலைத்தெருவில் ஒருமடமும் காணியாட்சியும் கொடுத்த அளவுக்கு (S.I.I. i, 124). |
காணியாட்சிமிராசு | kāṇi-y-āṭci-mirācu n. <>காணியாட்சி+. Proprietary right in village lands; கிராம நிலவுரிமை. (C.G.) |
காணியாட்சியூர் | kāṇi-y-āṭci-y-ūr n. <>id. +. Hereditary village; பரம்பரையுரிமையுள்ள கிராமம். |
காணியாளன் | kāṇi-y-āḷaṉ n. <>காணி1+. 1. [M. kāṇiyāḷan.] Proprietor of land; காணியாட்சியுள்ளவன். 2. Hard working agriculturist; 3. A sub-division of Smartha Brahmans; 4. A sub-division of Vēḷāḷas; |
காணுங்கோள் | kāṇuṅ-kōḷ n. <>காண்-+. Visible planets, opp. to kaṇā-k-kōḷ; கண்ணுக்குப் புலனாகுங் கிரகம். (W.) |
காணும் | kāṇum part. <>id. Expl. in the 2nd pers. pl. in compounds; முன்னிலைப் பன்மையில்வரும் ஓர் அசை. இக்குடிப்பிறந்தோர்க் கெண்மை காணும் (புறநா. 43). |
காணும்பொங்கல் | kāṇum-poṅkal n. <>id. +. See காண்பொங்கல். . |
காணுமோர் | kāṇumōr n. <>id. Those who see; காண்போர் செலவு பெரிதினிது நிற்காணு மோர்க்கே (பதிற்றுப். 83, 5). |
காத்தட்டி | kāttaṭṭi n. Thorny caper. See ஆதொண்டை. (W.) . |
காத்தண்டு | kā-t-taṇṭu n. <>கா4+. Pole for carrying on the shoulder weights balanced at both ends; காவடியின் தண்டு. (குறள், 1163, உரை.) |
காத்தவராயன் | kāttava-rāyaṉ n. <>கா-+ராயன். A village deity; ஒரு கிராமதேவதை. Tj. |
காத்தாயி | kāttāyi n. <>id.+ஆய். A village goddess; ஒரு கிராமதேவதை. Loc. |
காத்தாலை | kāttālai n. 1. Vul. for காலத்தாலே. 2. Early morning; |
காத்தான் | kāttāṉ n. See காத்தவராயன். . |
காத்தியம் | kāttiyam n. <>khādya. Food munched and eaten; கடித்துண்ணும் உணவு. |
காத்தியாயனம் | kāttiyāyaṉam n. <>Kātyāyana. A treatise in Sanskrit on Hindu law ascribed to Kātyāyana, one of 18 taruma-nūl, q.v.; தருமநூல் பதினெட்டனுள் காத்தியாயனரால் இயற்றப்பட்டது. (திவா.) |
காத்தியாயனர் | kāttiyāyaṉar n. <>Kātyāyana. 1. Name of a Hindu-law-giver; தருமாநூலாசிரியருள் ஒருவர். 2. Varauci, a Sanskrit grammarian, as a descendant of Kata; |
காத்தியாயனி | kāttiyāyaṉi n. <>Kātyāyani. 1. Pārvatī; பார்வதி. (சிவரக. தாருக. 30.) 2. Durgā; |
காத்திரம் 1 | kāttiram n. perh. கா3+sthira. Mungoose; கீரி. (திவா.) |
காத்திரம் 2 | kāttiram n. <>kṣātra. Displeasure, anger; கோபம். (பிங்.) |
காத்திரம் 3 | kāttiram n. <>gātra. 1. Body; உடல். காத்திரங் கரணஞ்சேர்த்தி (வைராக். தீப. 39). 2. Limb, member; 3. Fore leg of an elephant; 4. Thickness, solidity; 5. Corpulence; 6. Importance; |