Word |
English & Tamil Meaning |
---|---|
காண்டவம் | kāṇṭavam n. <>khāṇdava. A forest, sacred to Indra and burnt by Arjuna as an offering to Agni; இந்திரனுக்குப்பிரியமானதும் அருச்சுனனால் அக்கினிக்கு இரையாக அளிக்கப்பட்டதுமான ஒரு காடு. காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானை (திவ். பெரியதி. 2,5,2). |
காண்டவன் | kāṇṭavaṉ n. <>id. See காண்டாவனன். காண்டவனை நோக்குபு ககத்திறைவன் (சேதுபு. கத்துரு. 77). . |
காண்டாதிகிருதம் | kāṇṭāti-kirutam n. <>kāṇda-tikta+ghrta. Medicinal preparation of chiretta, etc., with ghee as vehicle; நிலவேம்பு முதலியவற்றால் ஆன நெய்வடிவாயுள்ள ஒரு கூட்டு மருந்து. (W.) |
காண்டாமிருகம் | kāṇṭā-mirukam n. [M. kāṇṭamrgam.] Rhinoceros; கல்யானை. |
காண்டாமிருகரத்தம் | kāṇṭā-miruka-rattam n. <>காண்டாமிருகம்+rakta. 1. Indian kino tree, 1. tr., Pterocarpus marsupium; வேங்கை மரம். 2. Dragon's-blood tree, 1. tr., Dracaena draco; 3. Dragon's blood cane, m.cl., Daemonorops draco; 4. Resin from these tress; |
காண்டாவனம் | kāṇṭā-vaṉam n. <>khāṇdava+. See காண்டவம். காண்டாவன மென்பதோர் காடு (திவ். பெரியதி. 2, 4, 2). . |
காண்டாவனன் | kāṇṭā-vaṉaṉ n. <>காண்டாவனம். Indra, the lord of Khāṇdava; இந்திரன். (பிங்.) |
காண்டிகை | kāṇṭikai n. prob. khaṇdikā. Brief exposition of the salient points in a text; சூத்திரப்பொருளைச் சுருங்கவிளக்கும் உரைவகை. சூத்திரம் புரைதப வுடன்படக் காண்டிகை புணர்ப்பினும் (தொல். பொ. 654). |
காண்டிபம் 1 | kāṇṭipam n. <>gāṇdīva. See காண்டீவம். (W.) . |
காண்டிபம் 2 | kāṇṭipam n. cf. சரகாண்டம். See காண்டம்6. (மூ.அ.) . |
காண்டியம் | kāṇṭiyam n. perh. காந்து-. Intensity of heat; heat as felt in the hot season; வெக்கை. காண்டியகாலம். (W.) |
காண்டில் | kāṇṭil n. A prepared arsenic. See இரசிதபாஷாணம். (W.) . |
காண்டிவம் | kāṇṭivam n. See காண்டீவம். காண்டிவங் கரத்தேந்தி (பாரத. காண்டவ. 8). . |
காண்டிவன் | kāṇṭivaṉ n. See காண்டீவன். (திவா.) . |
காண்டீபம் | kāṇṭīpam n. See காண்டீவம். (W.) . |
காண்டீபன் | kāṇṭīpaṉ n. See காண்டீவன் (பிங்.) . |
காண்டீவம் | kāṇṭīvam n. <>gāṇdīva. 1. Arjuna's bow; அருச்சுனன்வில். 2. Sagittarius, a constellation of the zodiac; |
காண்டீவன் | kāṇṭīvaṉ n. <>id. Arjuna, as armed with kāṇṭīvam; அருச்சுனன். (பிங்.) |
காண்டு 1 | kāṇṭu n. Earshot; hearing distance; கூப்பிடுதூரம். (W.) |
காண்டு 2 | kāṇṭu n. [T. gādu.] 1. Anger; கோபம். 2. Difficulty; |
காண்டை | kāṇṭai n. prob. காண்டம்1. cf. கரண்டை, kandara. 1. Cave, cavern; கற்பாழி. (சூடா.) 2. Dwelling of a sage, hermitage; |
காண்டோபக்கிரமணம் | kāṇṭōpakkiramaṇam n. <>kāṇda+upa+kramaṇa. Ceremony performed at the commencement of the study of a kāṇda of a Vēda; வேதத்தின் ஒவ்வொரு காண்டத்தையும் ஓதத்தொடங்குங்காற் செய்யுங் கிரியை. (திருவானைக். கோச்செங். 14.) |
காண்பவன் | kāṇpavaṉ n. <>காண்-. (Phil.) One who knows; ஞாதிரு. காண்பவன் முதலிய திறமும் (கந்தபு. கடவுள்வா. 6). |
காண்பு | kāṇpu n. <>id. Seeing, sight; காட்சி. கார்ப்பெய றலைஇய காண்பின் காலை (புறநா.119, 1). |
காண்பொங்கல் | kāṇ-poṅkal n. <>id. +. The day of social visit, following the māṭṭup-poṅkal festival; மாட்டுப்பொங்கலையடுத்து ஒரு வரையொருவர் கண்டு க்ஷேமம் விசாரிக்கும் கொண்டாட்டநாள். (அபி. சிந்.) |
காண்வரி | kāṇ-vari n. <>id.+. Dances performed at frequent and repeated intervals by expert dancers on the stage; பிறர்காணும்படி பலகாலும் வந்து நடிக்குங் கூத்து. கருநெடுங்கண்ணி காண்வரிக் கோலமும் (சிலப். 8, 83). |
காண்வா - தல்[காண்வருதல்] | kāṇ-vā- v. intr. <>id. +. To come into view; to be sighted; காட்சிவருதல். காண்வர வியன்றவிக் கவின் பெறு பனித்துறை (கலித்.127, 14). |
காணடி - த்தல் | kāṇ-aṭi- v. tr. <>காண+அடி-. To lose; போக்கடித்தல். Loc. |
காணபத்தியம் | kāṇa-pattiyam n. <>gāṇapatya. The religion of the Gāṇapatyas who regard Gaṇapati as the Supreme Being; கணபதியை முதற்கடவுளாக வழிபடுஞ் சமயம். |
காணம் 1 | kāṇam n. 1. [M. kāṇam.] See கொள்ளு. (திவா.) . 2. [M. kāṇam.] An ancient weight. 3. Gold; 4. An ancient gold coin; 5. Wealth, riches; 6. Share; |