Word |
English & Tamil Meaning |
---|---|
காடுகட்டு - தல் | kāṭu-kaṭṭu- v. intr. <>காடு1+. To prevent, with incantations, wild beasts and birds of pery from frequenting a particular place; விலங்குபறவைகளைக் குறித்தவிடத்தில் வாராமல் தடைசெய்தல். காக மணுகாம லெங்குங் காடுகட்டி (குற்றா. குற. 23). |
காடுகலை - த்தல் | kāṭu-kalai- v. intr.<>id. +. 1. To beat the bush for starting the game; புதர்களை அடித்து விலங்கு பறவைகளைக் கலைத்தெழுப்புதல். 2. To threaten subordinates or servants by calling them to a strict account; |
காடுகாட்டு - தல் | kāṭu-kāṭṭu- v. tr.<>id. +. Lit., to show the burning-ghat, to deceive, disappoint; ஏமாற்றுதல். (W.) |
காடுகாள் | kāṭu-kāl. n. <>id. + கிழாள். See காடுகிழாள். (சூடா.) . |
காடுகிழவோள் | kāṭu-kiḻavōḷ n. <>id. +. 1. See காடுகிழாள். காடுகிழவோட் கரைத்திருந்த சாந்தை (யாப். வி. 93). . 2. The second nakṣatra, presided over by Durgā. See பரணி. (திவா.) |
காடுகிழாள் | kāṭu-kiḻāḷ n. <>id. +. Durgā, as goddess of the forest; துர்க்கை. (திருமுரு. 259, உரை.) |
காடுகிழாள்வெயில் | kāṭu-kiḻāḷ-veyil n. <>id. +. Refracted light at sunset; சூரியாஸ்த மனத்தில் தோன்றும் மஞ்சள்வெயில். (சிலப்.4, 5, உரை.) |
காடுகெடு - த்தல் | kāṭu-keṭu- v. intr. <>id. +. To clear the forest; காடழித்தல். காடுகெடுத்து நாடாக்கி (தொல். பாயி. உரை). |
காடுகெழுசெல்வி | kāṭu-keḻu-celvi n. <>id.+ கெழுவு- +. Durgā as dwelling in the forest; துர்க்கை. காடுகெழுசெல்விக்குப் பரணிநாட் கூழுந்துணங்கையுங் கொடுத்து (தொ. பொ. 461, உரை.) |
காடுகொல்(லு) - தல் | kāṭu-kol- v. intr. <>id.+. To clear the forest; காட்டை வெட்டையழித்தல். காடுகொன்று நாடாக்கி (பட்டினப், 283). |
காடுபடு - தல் | kāṭu-paṭu- v. intr. <>id. +. 1. To abound, as wealth; நிரம்புதல். ஐசுவரியம் அவனுக்குக் காடுபடும்படியிறே அவன்பார்த்தது (ஈடு, 5, 9, 5). 2. To go to waste; |
காடுபடுதிரவியம் | kāṭu-paṭu-tiraviyam n. <>id. +. Forest-produce, as arakku, iṟāl, tēṉ, mayiṟ-pīli, nāvi; காட்டிலுண்டாகும் பொருள்கள். (சூடா.) |
காடுபலியூட்டு - தல் | kāṭu-pali-y-ūṭṭu- v. intr. <>id. +. To sacrifice cock, etc., to the forest deities before hunting, to ensure a good game; காட்டில்வாழும் தேவர்களுக்குப் பலியிடுதல். காட்டிலுறை தெய்வங்கள் விரும்பியுண்ணக் காடுபலி யூட்டென்றான் (பெரியபு. கண்ணப்ப. 50). |
காடுவசாதி | kāṭuva-cāti n. <>id. + வாழ்-+ jāti. Corr. of காடுவாழ்சாதி. (J.) |
காடுவசாதியாய்த்திரி - தல் | kāṭuva-cātiy-āy-t-tiri- v. intr. <>id. +. (W.) 1. To be slovenly, negligent of one's dress; விகாரமான கோலத்தோடு திரிதல். 2. To be vagrant, as a neglected orphan; |
காடுவாரி | kāṭi-vāri n. <>id. +. (J.) 1. Garden rake; செத்தைவாருங் கருவி. 2. One who scrapes up all he can; 3. He who resorts to any kind of profession however low to maintain himself; |
காடுவாழ்சாதி | kāṭu-vāḻ-cāti n. <>id. +. Savage tribe, as forest dwellers; காட்டில் வாழுஞ் சாதி. காடுவாழ்சாதியு மாகப்பெற்றான் (திவ். நாய்ச்சி 12, 8). |
காடுவாழ்த்து | kāṭu-vāḻttu n. <>id.+. (Puṟap.) Theme of praising the burning-ghat, as perpetually impressing upon the minds of people the transitoriness of earthly things; எல்லோரும் இறந்துபோகவும் தான் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டை வாழ்த்தி உலகவியல்பை விளக்கும் ஒருபுறத்துறை. (தொல். பொ. 79.) |
காடுவெட்டி | kāṭu-veṭṭi n. <>id. +. 1. Wood-cutter, one who clears the forest; மரம் வெட்டுபவன். 2. Savage, uncivilized man; |
காடேறு - தல் | kāṭēṟu- v. intr.<>id. +. 1. To flee away to a forest; காட்டிற்கு ஓடுதல். காடேறி நாடேறித் திரிவார் கண்டீர் (தமிழ்நா. 235). 2. To seemingly disappear, as a disease, just before the death of a person who suffered from it; |
காடை | kāṭai n. <>cāṣa [M. kāda, Tu. kāde.] Rain quail, Turnix taigoor; குறும்பூழ். (திவா.) |
காடைக்கண்ணி | kāṭai-k-kaṇṇi n. <>காடை+. Common millet having the colour of a quail's eyes; காடையின் கண்போன்ற தினைவகை. (பதார்த்த.1400.) |
காடைக்கழுத்தன் | kāṭai-k-kaḻuttaṉ n. <>id. +. Quail-neck paddy, maturing in five months, raised in the southern Tamil districts; ஐந்து மாதங்களில் விளையக்கூடிய நெல்வகை. (W.) |
காடைச்சம்பா | kāṭai-c-campā n. <>id. +. A kind of campā paddy; சம்பா நெல்வகை. (பதார்த்த. 818.) |