Word |
English & Tamil Meaning |
---|---|
காதி 1 | kāti n. <>U. khādi. [K. kādi.] Double-threaded coarse cloth; இரட்டுத்துணி. (W.) |
காதி 2 | kāti n. <>Gādhi. A king of Kānyakubja and father of Višvāmitra; விசுவாமித்திர முனிவரின் தந்தை. காதிவந்துதயஞ் செய்தான் (கம்பரா. வேள்வி.11). |
காதி 3 | kāti n. prob. ghāti. A mineral poison; See மிருதபாஷாணம். (மூ.அ.) . |
காதிகள் | kātikaḷ n. <>id. (Jaina.) Obstructive karmas to be avoided, four in number, viz., ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், மோகநீயம், அந்தராயம், dist. fr. akātikaḷ; முத்திக்குப் பாதகமாயுள்ள கர்மங்கள். செற்றது காதிகள் (திருநூற். 88). |
காதிதம் | kātitam n. <>ghātita. (Math.) Result arising from the multiplication of a number by itself; ஓர் எண்ணை அதனாலேயே ஒருமுறையேனும் பலமுறையேனும் பெருக்கிவந்த தொகை. (W.) |
காதிரைச்சல் | kātiraiccal n. <>காது1+. Ringing in the ear, Tinnitus auvrium; காதடைப்பால் உண்டாகும் குமுறல். (W.) |
காதில்விழு - தல் | kātil-viḻu- v. intr.<>id.+. To reach one's ears; to be heard; காதுக்குச் செய்தியெட்டுதல். |
காதிலடிபடு - தல் | kātil-aṭi-paṭu- v. intr. <>id. +. To be heard frequently, as news; அடிக்கடி செய்தி கேட்கப்படுதல். |
காதிலி | kātili n. <>id.+. Deaf person; செவி-டன்-டி. |
காதிலோது - தல் | kātil-ōtu- v. tr. <>id. +. 1. To initiate a disciple by whispering a mantra in his ear; மந்திரோபதேசஞ் செய்தல். 2. To whisper in the ear, as secrets; 3. To back-bite; |
காதிவென்றோன் | kāti-veṉṟōṉ n. <>ghāti +. (Jaina.) Arhat, who has overcome kātikaḷ; அருகன். (சூடா.) |
காதிற்சவ்வு | kātiṟ-cavvu n. <>காது1+. Eardrum, tympanum; காதிலுள்ள குருத்து. |
காது | kātu n. [M.kātu.] 1. Ear; செவி. வடிந்துவீழ் காதினள் (சிலப். 4, 51). 2. Hole through which thread, rope, hook, pin or shaft is passed, as the eye of a needle; 3. To groove in a sling in which is placed the sling-stone; 4. Part near the stem of a tobacco leaf; 5. Ear of a jar; projection in the rim of a vessel serving as a handle; 6. The top of a bond written it is filed; stamped part of an indenture or bond which is torn off when the bond is discharged; 7. Small wedge, to hold in its place a tenon, a handle, a peg; |
காது - தல் | kātu- 5 v. tr. cf. ghāta. [K. kādu, Tu. kāduni.] 1. To kill, slay, murder; கொல்லுதல். அவுணர்தங் கிளையைக் காதி (கந்தபு. விடை. 43). 2. To cut; 3. To divide, dissect; |
காது | kātu n. <>காது-. Murder; கொலை. (சூடா.) |
காதுக்கரப்பான் | kātu-k-karappāṉ n. <>காது1+ Inflammation of the external part of the ear, Otitis externa; காதின் வெளிப்புறத்திற்காணும் னோய். (M.L.) |
காதுக்கற்சட்டி | kātu-k-kaṟ-caṭṭi n. <>id. +. Eared vessel made of soap-stone; காதுள்ள மாக்கற்சட்டி. Colloq. |
காதுக்கிண்ணம் | kātu-k-kiṇṇam n. <>id. +. Vessel with projections in the rim for lifting; விளிம்பிலே பிடிப்புள் கிண்ணம். |
காதுக்குடைச்சல் | kātu-k-kuṭaiccal n. <>id. Inflammation of the ear; காதுநோய் வகை. (M.L.) |
காதுக்குத்தல் | kātu-k-kuttal n. <>id. +. See காதுக்குத்து. . |
காதுக்குத்து | kātu-k-kuttu n. <>id. +. Ear-ache, Otalgia; உட்காதில் உண்டாகுங் குத்து நோய். (M.L.) |
காதுக்குறும்பி | kātu-k-kuṟumpi n. <>id. +. 1. Ear-wax, cerumen; காதுப்பீளை. 2. Ear-cleaner; |
காதுகன் | kātukaṉ n. <>ghātuka. 1. Murderer; கொலைகாரன். 2. Wicked person; |
காதுகிழி - த்தல் | kātu-kiḻi- v. tr. <>காது1+. Lit., to tear the ear, to tear the top of a bond written on a palmyra-leaf as far as the hole through which it is filed, to tear the stamped part of an indenture or bond, in token of its discharge; பத்திரத்தை ரத்துசெய்து கிழித்தல். Loc. |
காதுகிள்ளு - தல் | kātu-kiḷḷu- v. tr. <>id. +. 1. See காதுகிழி-.Loc . 2. See காதுகுத்து-2. |