Word |
English & Tamil Meaning |
---|---|
காதைநெறி - த்தல் | kātai-neṟi- v. intr. <>காது2+. To cock the ear, as horses on hearing a frightful noise; கவனித்துக்கேட்கும்படி குதிரைமுதலிய விலங்குகள் காதை நிமிர்த்தல். (W.) |
காதோதி | kātōti n. <>id. +. Malicious whisperer; தீய எண்ணத்தோடு இரகசியம் ஓதுவோன். (W.) |
காதோலை | kātōlai n. <>id.+ [M. kātōla.] 1. Small roll of a palmyra leaf, often stained with magenta, used by women as an ornament inserted in the lobe of the ear; காதுக்கிடும் பனங்குருத்தின் ஓலை. 2. Ear ornament made of gold, gems, diamond, etc., worn by women |
காந்தக்கம்பி | kānta-k-kampi n. <>kānta +. 1. Lightning rod; இடிதாங்கி. 2. Electric wire |
காந்தக்கல் | kānta-k-kal n. <>id.+. Magnet, loadstone, Ferri oxidum magneticum; அயக்காந்தம். (W.) |
காந்தசத்துரு | kānta-catturu n. <>id. +. That which counteracts the magnetic power, as blue vitriol, sla-ammoniac, saltpetre காந்தத்துக்கு மாற்றுச்சரக்கு. (W.) |
காந்தசிந்தூரம் | kānta-cintūram n.<> id. +. Loadstone powder of red colour prepared by chemical process ; காந்தத்தினின்று செய்யப்படும் சிந்தூரம். (பதார்த்த.1205.) |
காந்தப்பர் | kāntappar n. <>gandharva. Ghandarvas. See கந்தருவர். அம்பரந் திரியுங் காந்தப்பரெல்லாம் (திவ்.பெரியாழ்3, 6, 6). |
காந்தப்பெட்டி | kānta-p-peṭṭi n. <>kānta +. Mariner's compass; திசையறிகருவி .(W.) |
காந்தபசாசம் | kāanta-pacācam n. <>id. +. Loadstone, magnet ; காந்தக்கல், காந்தபசாசம்போலவ்வினையைப் பேராம லூட்டும் (சி.போ, சிற் 2, 2, 2) . |
காந்தபற்பம் | kānta-paṟpam n. <>id. +. Loadstone powder made by chemical process ; காந்தத்தினின்று செய்யப்படும் பஸ்மம் . |
காந்தபாஷாணம் | kānta-pāṣāṇam n.<> id. +. A mineral poison, one or 32 ; பிறவிப் பாஷாணவகை. |
காந்தபுராணம் | kānta-purāṇam n. <>skānda +. A chief Purāṇa, one of patiṉeṇ-purāṇam, q.v.; பதினெண்புராணத்துள் ஒன்று . |
காந்தம் 1 | kāntam n. <>kānta. 1. See காந்தக்கல். நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம்(மணி. 27, 56). 2. A class of crystals, as cūriya-kāntam, cantira-kāntam; 3. Beauty, loveliness, attractiveness; 4. (Rhet.) Description within coventional limits, satisfying the aesthetic sense, a merit of poetic composition ; 5. Electricity ; |
காந்தம் 2 | kāntam n.<> skānda. See காந்தபுராணம். (தி.வா.) . |
காந்தம்பிடி - த்தல் | kāntam-piṭi- v. intr. <>kānta +. See காந்தம்வலி-. . |
காந்தம்வலி - த்தல் | kāntam-vali- v. intr. <>id. +. To induce magnetic attraction ; காந்தம் இரும்பை இழுத்தல். |
காந்தமண் | kānta-man n. <>id. +. Magnestie wherein is found carbonate of magnesia, red earth ; காந்தச்சத்துள்ள செம்மண்.(W.) |
காந்தமணி | kānta-maṇi n. <>id. +. See காந்தக்கல். (W.) . |
காந்தமலை | kānta-malai n. <>id.+. Mountain far north, regarded as the centre of attraction to the magnet; the magnetic pole ; பூமியின் வடகோடியிற் காந்தமயமாயுள்ளதாகக் கருதப்படும் மலை.(W.) |
காந்தர்ப்பம் | kāntarppam n. <>gāndharva. 1. See காந்தருவம். காந்தர்ப்பமென்பதுண்டால் ... மறைகளே வகுத்த கூட்டம் (கம்பரா. சூர்ப்பண. 54). 2. Arrows of the Gandharvas ; |
காந்தர்ப்பர் | kāntarppar n. <>gandharva. Gandharvas. See கந்தருவர். . |
காந்தருப்பம் | kāntaruppam n. <>gāndharva. See காந்தர்ப்பம். காந்தருப்பம் மெனுங் கடவுண் மாப்படை (கம்பரா. மூலபல 182) . |
காந்தருவநகரம் | kāntaruva-nakaram n. <>id. +. Imaginary city in the sky. See கந்தர்வநகரம். . |
காந்தருவப்புணர்ச்சி | kāntaruva-puṇarcci n. <>id. +. See காந்தருவம் 1. (சங்.அக.) . |
காந்தருவம் | kāntaruvam n. <>gāndharva. 1. A form of marriage which results entirely from love and which has no ritual whatever, as common among Gandharvas; காதலர் தம்முள் மனமொத்துக்கூடுங் கூட்டம். (தொல். பொ. 92, உரை.) 2. Music ; 3. Science of music, musical composition ; |
காந்தருவர் | kāntaruvar n. <>gandharva. 1. Gandharvas; காந்தருவர் (சிலப்.5, 176, உரை.) 2. Songsters, minstrels; |