Word |
English & Tamil Meaning |
---|---|
காப்புக்கடவுள் | kāppu-k-kāṭavuḷ n. <>id. +. Viṣṇu, as preserver; திருமால். (பிங்) |
காப்புக்கரப்பறி - தல் | kāppu-k-karappaṟi- v. intr. <>காப்பு +. To read intelligently, as without confounding the letters கா and கர; பொருளறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல். காப்புக்கரப்பறியாமல் வாசிக்கிறான். (W.) |
காப்புக்காடு | kāppu-k-kāṭu n. <>id. +. Reserved forest; காவற்கட்டுள்ள காடு. Mod. |
காப்புச்செய் - தல் | kāppu-c-cey- v. intr. <>id. +. To tie up, as a cadjan bundle; ஓலைச் சுவடியைக் கட்டிவைத்தல். உடன்காப்புச்செய்து (தணிகைப்பு. அகத்.167) |
காப்புத்தடை | kāppu-t-taṭai n. <>id. +. Prohibition on travel during a temple festival; உற்சவக்காப்புக் கடுதலால் நிகழும் பிரயாணத்தடை. காப்புத்தடையால் வேறு ஊர்க்குப் போகமுடிய வில்லை. Collaq. |
காப்புதாரி | kāppu-tāri n. <>id. + dhārin. Right of private defence; தற்காப்புரிமை. (C.G.) |
காப்புதாரிக்காடு | kāppu-tāri-k-kāṭu n. <>காப்புதாரி +. See காப்புக்காடு. (C.G.) . |
காப்புநாண் | kāppu-nāṇ n.<> காப்பு +. String tied round the wrist of a person with mantras to ward off evils, as an amulet, in times of marriage, illness, etc.; இரட்சையாகக்கட்டும் மஞ்சட்படுத்தின நூற்கயிறு. காப்புநாண் கட்டக் கனாக் கண்டேன் (திவ்.நாய்ச், 6, 4). |
காப்புநீக்கு - தல் | kāppu-nīkku- v. tr. <>id. +. To unloose and open, as a book of palmyra leaves; ஓலைச்சுவடியைக் கட்டவிழ்த்துத் திறத்தல். பரந்தநூல் காப்புநீக்கி (தணிகைப்பு, அகத். 167). |
காப்புப்பருவம் | kāppu-p-paruvam n. <>id. +. Section of piḷḷai-t-tamiḻ, describing the stages of childhood, in which deities beginning with Viṣṇu are invoked to protect the child in about the second month of its birth, one of ten paruvam, q.v.; பிள்ளைத்தமிழ்கூறும் பருவங்களுள் முதற்பருவம். (இலக்.வி.808, உரை.) |
காப்புமறம் | kāppu-maṟam n. <>id. +. Military guard; காவல்வீரர். காப்புமறம் தான்விட்டான் அக்கோ (பதிற்றுப். 90, பதி.). |
காப்புமாலை | kāppu-mālai n. <>id. +. A poem of three, five or seven verses in whcih the protection of deities is implored; தெய்வங்காப்பதாக முன்று ஜந்து அல்லது ஏழு கவிகளாற்பாடப்படும் ஒருபிரபந்தம். (இலக்.வி.832.) |
காப்பொன் | kā-p-poṉ n. <>கா4+. A weight of gold = 1 tulām நூறுபலம் நிறையுள்ள பொன். அவர்க்கு ஒன்பதுகாப் பொன்னுங்...கொடுத்து (பதிற்றுப்.60, பதி.) |
காபட்டியம் | kāpaṭṭiyam n. <>kāpatya. Guile, deceit; கபடத்தன்மை; |
காபணங்கட்டு - தல் | kāpaṇan-kaṭṭu- v. intr. <>காப்பு + பணம் +. To tie up a coin in a piece pf cloth dyed in saffron, as a vow to a diety in any temple; தெய்வத்துக்கு நேர்ந்த பிரார்த்தனைப்பணத்தை மஞ்சள்நோய்த்த துணியிற் கட்டிவைத்தல். |
காபணம் | kāpaṇam n. <>T. kāpadamu.. Fomentation; ஒத்தடம். Loc. |
காபந்து | kāpantu n <>U. khāwand. Careful protection; பாதுகாவல். |
காபரா | kāparā n. <>U. ghābrā. Disorder, confusion, alarm, excitement; குழப்பம். |
காபாலம் | kāpālam n. <>kāpāla. 1. Dance of šiva with the skull of Brahma in His hand; பிரமகபாலத்தைக் கையிலேந்திச் சிவபிரான் ஆடுங்கூத்து. தலையங்கை கொண்டு நீ காபால மாடுங்கால் (கலித்.1). 2. One of the minor šaivite systems which holds that souls re eternal, plural, and omnipresent, enjoins taking alms in human skull with green flags in hand, as a necessary stage for becoming the mukta |
காபாலன் | kāpālaṉ n. <>kāpāla. See காபாலி. (W.) . |
காபாலி | kāpāli n. <>Kapāin. 1. šiva; சிவன். விடையேறு காபாலி யீசன் (திவ். பெரியாழ். 1, 3, 2). 2. One who holds the kāpāla doctrine; |
காபாலிகம் | kāpālikam n. kāpālika. See காபாலம். இவ்விரதங் காபாலிகமென்பது (பிரபோத. 18, 25). |
காபி 1 | kāpi n. [K. kāpi.] (Mus.) A musical mode; ஓர் இராகம். (பரத.இராக. 50.) |
காபி 2 | kāpi n. <>E. Coffee. See காப்பி. . |
காபில் | kāpil n. <>U. qabil. A fit, clever or competent person; சமர்த்தன். (W.) |