Word |
English & Tamil Meaning |
---|---|
காமக்கண்ணி | kāma-k-kaṇṇi n. <>id. + கண். Lit., she that has love-inspiring eyes, a name of Pārvatī, as enshrined at Conjeevaram; காஞ்சியில் கோயில்கொண்டிருக்கும் காமாட்சியம்மன் காமக்கண்ணியாம் பெயரெய்துவை (காஞ்சிப்பு, வீராட். 45). |
காமக்கலகம் | kāma-k-kalakam n. id. +. 1. Copulation; புணர்ச்சி. காமக்கலகந் தெளிந்தபின் (தனிப்பா. i, 82, 164). 2. Love-quarrel |
காமக்கவலை | kāma-k-kavalai n.<> id. +. Mental distress caused by sexual desire; காம மிகுதியால் தோன்றும் துன்பம். |
காமக்காய்ச்சல் | kāma-k-kāyccal n. <>id. +. Lovesickness; காமதாபம். |
காமக்கிழத்தி | kāma-k-kiḻatti n. <>id. +. (Akap.) Faithful concubine or mistress; ஒருவர்க்கே உரிமைபூணுங் குலப்பரத்தைமகளாய்க் காமங்காரணமாகத் தலைமகனால் வரைந்துகொள்ளப்பட்டவள். (நம்பியகப்.113.) |
காமக்குறிப்பு | kāma-k-kuṟippu n. <>id. + (W.) 1. Bodily changes wrought by love; காதலிற்றோன்றும் மெய்ப்பாடு. 2. Amorous gestures; |
காமக்கூட்டம் | kāma-k-kūṭṭam n. <>id. +. Clandestine intercourse between lovers before marriage; தலைவனுந் தலைவியும் தம்முள் அன்பொத்துக் கூடுங் கூட்டம். காமக்கூட்டங் காணுங்காலை (தொல்பொ, 92). |
காமக்கொடி | kāma-k-koṭi n. <>id. +. See காமக்கண்ணி. கச்சிப்பொலி காமக்கொடியுடன் கூடி (தேவா. 772, 4). |
காமக்கோட்டத்தி | kāma-k-kōṭṭatti n. <>காமக்கோட்டம். Pārvatī, that dwells in kāma-k-kōṭṭam; உமை. (சூடா.) |
காமக்கோட்டம் | kāma-k-kōṭṭam n. <>Kāma + kōṣṭha. Temple of Kāmākṣī at Conjeevaram; காஞ்சியிலுள்ள காமாட்சிகோயில். காமக்கோட்டங் காவன்மெச்சி (சிலப் 5, 95, உரை). |
காமக்கோட்டி 1 | kāma-k-kōṭṭi n. <>id. +. 1. Pārvatī, as enshrined at Conjeevaram; பார்வதி. (திவா.) 2. See காமக்கோட்டம். |
காமக்கோட்டி 2 | kāma-k-kōṭṭi n. <>id. + prob. கோடு-. Mad craving for sexual union; காமப்பைத்தியம். Tinn. |
காமகாண்டம் | kāma-kāṇṭam n. <>id. +. A kind of flower used by Kāma as a bow; காமன் வில்லாக உபயோகிக்கும் ஒருவகைப் பூ. கயக்க ணின்ற பூவின்மிக்க காமகாண்டம் (கந்தபு. காமத.62). |
காமகாரம் | kāmakāram n. See காய்மகாரம். . |
காமசலம் | kāma-calam n. <>kāma +. See காமநீர். . |
காமசாத்திரம் | kāma-cāttiram n. <>id. +. Science of erotics, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலைகளுள் ஒன்றான மதனநூல். |
காமசாலை | kāma-cālai n. <>id. +. A place intended for amorous dalliance; சிற்றின்பத்துக்குரிய இடம். தோகையர். காமசாலையுமே கணக்கில்லவே (அரிச். பு.நகரச்.14). |
காமத்தீ | kāma-t-tī n. <>id. +. Venereal principle manifesting itself in the form of sexual desire, one of three uyir-t-tī, q.v.; காமாக்கினி. |
காமத்துப்பால் | kāmattu-p-pāl n. <>id. +. Section of a book treating of love, as in Kuṟaḷ; காமத்தைப்பற்றிக் கூறும் பகுதி. |
காமத்துப்பாலோர் | kāmattu-p-pālōr n. <>id. +. Lascivious persons; தூர்த்தர். (திவா.) |
காமதகனன் | kāma-takaṉaṉ n.<> id. + dahana. šiva, as one who burnt Kāma, god of love; சிவன். (திவா.) |
காமதம் | kāmatam n. <>kāma-da. Cowdung secured after it has fallen on the ground; பூமியில் விழுந்தபின் எடுத்துக்கொள்ளும் பசுவின் சாணம்.(சைவச-பொது. 169, உரை.) |
காமதேவன் | kāma-tēvaṉ n. <>id +. Indian Cupid, the god of love; மன்மதன் முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா (திவ்., நாய்ச் 1, 2, ). |
காமதேனு | kāma-tēṉu n. <>id. + dhēnu. Celestial cow, which supplies every want; தேவலோகப் பசு. போனக மமைந்த தெனவக் காமதேனு...சொலுமே (தாயு. மௌன. 7). |
காமநாசன் | kāma-nācaṉ n. <>id. +. šiva, the destroyer of Kāma; சிவன். (பிங்). |
காமநீர் | kāma-nīr n. <>id. +. Venereal secretion as semen virile; காமத்தால் தோன்றும் சுக்கிலம். கீண்ட பாறொரு முறிய காமநீ ரொழுகிற்றென்ப (கந்தபு, அசுரர்தோற்.15). |
காமநூல் | kāma-nūl n. <>id. +. 1. See காமசாத்திரம். . 2. See காமகாண்டம். (சிலப். 2, 44, உரை.) |
காமநோய் | kāma-nōy n. <>id. +. Love sickness; காமத்தால் உண்டாகும் வேதனை. உரவோர் கட் காமநோ யோஒ கொடிதே (நாலடி, 88). |
காமப்பற்று | kāma-p-paṟṟu n. <>id. +. Sexual desire; காமவிருப்பு, பாரிடை யுயிருங் காமப்பற்றுவிட் டிருந்தகன்றே (கந்தபு. மேரு.17). |
காமப்பால் | kāma-p-pāl n. <>id. +. Mother's milk; முலைப்பால் காமப்பால் விட்டரைப் பாய். (சங். அக). |