Word |
English & Tamil Meaning |
---|---|
காமவாயில் | kāma-vāyil n. <>id. +. Love. as the gateway to conjugal happiness; இயற்கையன்பு. உருவு நிறுத்த காமவாயில் (தொல். பொ.273). |
காமவிகாரம் | kāma-vikāram n. <>id. +. The physical and mental changes brought about by intense love; காமத்தாலுண்டாகும் வேறுபாடு. வெம்மைக் காமவிகாரம் பெறுதியால் (உபதேசகா. அயமுகி.72). |
காமவிடாய் | kāma-viṭāy n. <>id. +. Thirst for sexual union; கலவி விருப்பம். ஆறேனோ வெய்தாமக் காமவிடய் (நள.சுயம்.44). |
காமவெறி | kāma-veṟi n. <>id. +. See காமப்பைத்தியம். . |
காமவேதம் | kāma-vētam n. <>id. + vēda. See காமசாத்திரம். காமவேதத்தைக் கருங்கடைக் கண்களான் மொழிவார் (பாரத. அருச்சுனன்றவ. 62). |
காமவேழம் | kāma-vēḻam n. <>id. +. Kaus, a large and coarse grass. See நாணல். (பிங்.) . |
காமவேள் | kāma-vēḷ n. <>id. +. Kāma, the Indian Cupid; மன்மதன். கருப்புவின் மலர்க்கணைக் காமவேளை (திவ். நாய்ச்1. 10). |
காமற்கடந்தோன் | kāmaṟ-kaṭantōṉ n.<> id. +. Buddha, as having conquered Kāma the Buddhistic god of evil; புத்தன். (மணி5, 102). |
காமற்காய்ந்தோன் | kāmaṟ-kāyntōṉ n. <>id. +. 1. Arhat; அருகன். (திவா.) 2. See காமதகனன். (W.) |
காமன் 1 | kāmaṉ n. <>kāma. 1. The Indian Cupid; மன்மதன். பண்டாரங் காமன் படையுவள் (பரிபா. 11, 123). 2. The Buddhistic god of evil; 3. A kind of masquerade dance; |
காமன் 2 | kā-man n. <>கா3 + மன் . Lord of celestial grove; இந்திரன். (சூட.) |
காமன் 3 | kā-man n. <>id. + மன்னு. 1. Beetle, that abides in a grove; வண்டு. (சூடா.) 2. Long pepper. See திப்பிலி. (திவா.) |
காமன்கொடி | kāmaṉ-koṭi n. <>kāma +. Fish, as the emblem of Kāma's banner; மீன். (பிங்.) |
காமன்பண்டிகை | kāmaṉ-paṇṭikai n. <>id. +. A spring festival in the lunar month of Mākam to commemorate the burning of Kāma by šiva ; மன்மத தகனத் திருவிழா. |
காமன்வில் | kāmaṉ-vil n. <>id. +. Sugarcane, as Kāma's bow; கரும்பு. (பிங்.) |
காமனாள் | kāmaṉāḷ n. <>id. +. Spring season; இளவேனிற்காலம் . |
காமனூர்தி | kāmaṉ-ūrti n. <>id. +. South breeze, as the vehicle of Kāma; தென்றல் (பிங்.) |
காமனை 1 | kā-maṉai n. perh. கா3 + மனை. Goa potato. See சிறுகிழங்கு. (மலை.) . |
காமனை 2 | kāmaṉai n. <>kāmanā. Desire; விருப்பம். காமனைகள் பூரித்து (தேவ.134, 9). |
காமனைங்கணை | kāmaṉ-ai-ṅ-kaṇai n. <>kāma +. Kāma's five arrows. See பஞ்சபாணம். (பிங்.) . |
காமாக்கினி | kāmākkiṉi n. <>id. + agni. See காமத்தீ. . |
காமாட்சி | kāmāṭci n. <>Kāmāksī. Pārvatī worshipped at Conjeevaram, as having loveinspiring eyes; காஞ்சீபுரத்து அம்பிகை. (சிவரக. தேவிமேரு. 13.) |
காமாட்சிக்கீரை | kāmāṭci-k-kīrai n. <>id. + cf. T. kāmancigaddi. A kind of greens, Chamissoa nodiflora; கீரைவகை. (A.) |
காமாட்சிப்புல் | kāmāṭci-p-pul n. <>id. +. 1. Black khus-khus grass, Andropogon muricatus; புல்வகை.(I.P.) 2. Citronella grass. See காவட்டம்புல். (W.) 3. Roussa oil grass. See சுன்னாறிப்புல். (M.M. 765.) 4. Lemon grass. See கர்ப்பூரப்புல். (M.M.) |
காமாட்சிவிளக்கு | kāmāṭci-viḷakku n. <>id +. Brass lamp in the form of a woman who holds with both her hands a hollow vessel for oil and wick, used during marriage occasions; கல்யாணமுதலிய விசேட காலங்களில் உபயோகிக்கும் பாவை விளக்கு. (E.T.) |
காமாட்டி | kāmāṭṭi n. <>Mhr. kāmāṭhi [T. K. kāmāṭi, M. kāmāṭṭi, Tu. kāmāṭe.] 1. Labourer, one who works with a hoe, digger of earth; மண்வெட்டுவோன். 2. Fool, idiot, dunce; |
காமாதுரன் | kāmāturaṉ n.<> kāma + ātura. Libidinous person; காமவிச்சை மிக்கவன். |
காமாந்தகன் 1 | kāmāntakaṉ n. <>id. + antaka. šiva, the destroyer of Kāma; சிவன். |
காமாந்தகன் 2 | kāmāntakaṉ n. <>id. + antaka. Lascivious man blinded by lust; காமத்தால் விவேகமற்றவன். |
காமாப்பலகை | kāmā-p-palakai n. Top board around the side of a boat; மரக்கலத்தின் சுற்றுப்பலகை. (W.) |
காமாரி | kāmāri n. <>kāma + ari. 1. šiva, the enemy of Kāma சிவன். (பிங்.) 2. Durgā; |