Word |
English & Tamil Meaning |
---|---|
காமாலை | kāmālai n. <>kāmalā. Jaundice; ஒருவகைநோய். காமாலை சோகை சுரம் (திருப்பு.153). |
காமாக்ஷியம்மாள்கைவிளக்கு | kāmākṣiy-ammāḷ-kai-viḷakku n. <>kāmākṣī +. Handlamp put in a niche of the front wall of a house; வீட்டின் முன்சுவர்ப்பக்கத்தில் மாடப்புரையில் வைக்கும் விளக்கு. Loc. |
காமி - த்தல் | kāmi- 11 v. tr. <>kāma. 1. To desire; விரும்புதல். தப்புதி யறத்தை யேழாய் தருமத்தைக் காமியாதே (கம்பரா. நிந்த. 54). 2. To have sexual desire; |
காமி 1 | kāmi n. <>kāma. Lascivious person, voluptuary; காமாதுரன். களிமடி மானி காமிகள்வன் (நன். 38). |
காமி 2 | kāmi n. (W.) 1. Fuller's earth; உவர்மண். 2. Gold-coloured antimony; |
காமிகம் | kāmikam n. <>kāmika. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; இருபத்தெட்டுச் சிவாகமத்துள். ஒன்று காமிக மாதி யைந்து முற்பவித்து (சைவச. பொது.331). |
காமியக்கல் | kāmiya-k-kal n. prob. kāmya. +. Cinnamon stone. See கோமேதகம். (W.) . |
காமியகருமம் | kāmiya-karumam n. <>id. +. Deed enjoined to secure a particular object; வேதமுதலியவற்றில் விதிக்கப்பெற்றதாய்ப் பயன்கருதிச்செய்யப்படுங் கிரியை. (பிரபோத., 39, 13.) |
காமியகுரு | kāmiya-kuru n. <>id. +. Preceptor who inculcates devotion and righteousness; ஈசுரபத்தியும் அறமும் போதிக்கும் குரு அறத்தைப் போதகஞ்செய் திருமையினு மின்பமருள் பவனே...காமியகுரு (வேதா. சூ.16). |
காமியசத்தி | kāmiya-catti n. <>id. +. Mica . See அப்பிரகம். (சங். அக.) . |
காமியசிராத்தம் | kāmiya-cirāttam n. <>id. +. šrāddha performed expecting some benefit; பயன்கருதிச் செய்யப்படும் சிராத்தம். |
காமியம் 1 | kāmiyam n. <>kāmya. 1. Desired object; இச்சிக்கும் பொருள். (சது.) 2. That which is done with some particular motive as a religious ceremony, opp. to niṣkāmiyam; |
காமியம் 2 | kāmiyam n. <>kārmya. See கான்மியம். கன்மமு முலங்காட்டிக் காமியமலமாய் நிற்கும் (சி. சி. 2, 39). |
காமியம் 3 | kāmiyam n. <>āgāmya. Actions of the present life in reference to their effects in future births. See ஆகாமியம். ஆகாமியம் காமிய மெனத் தலைக்குறை (சி.போ.12, 1, சிற்). |
காமியமரணம் | kāmiya-maranam n. <>kāmya +. Voluntary death, suicide; தற்கொலை. |
காமியர் | kāmiyar n. prob. kāmin. Licentious, lustful persons; காமவேட்கையுள்ளோர் காமியர்கள் வேடம் பற்றி (பிரபோத. 5, 25). |
காமினி 1 | kāmini n. <>kāmiṉi Lit., lustful woman, woman; பெண். கஞ்சமலரா ளனைய காமினி (உத்தரரா. அசுவமே.65). |
காமினி 2 | kāmiṉi n. <>gāminī. Mantra which, when repeatedly pronounced, enables one to fly through air; ஆகாசகமனம் செய்தற்குரிய மந்திரம் அணிசெய் கோதையங் காமினி யோதினாள் (¦சீவக.1713). |
காமீ | kāmī n. cf. காமம். (Astrol.) The planet in the seventh house from the ascendant; சென்மலக்கினத்தினின்று ஏழாமிடத்துள்ள கிரகம். (சங்.அக.) |
காமுகப்பிரியம் | kāmuka-p-piriyam n. prob. kāmuka + priyā. Yellow zedoary. See கஸ்தூரிமஞ்சள். (சங்.அக.) . |
காமுகன் 1 | kāmukaṉ n. <>kāmuka. 1. Lustful person; தூர்த்தன். காமுகர்ப் படுவ மாதர் கண்களும் (கம்பரா. நாட். 5). 2. Polite, polished man; |
காமுகன் 2 | kāmukaṉ n. perh. kārmuka.(சூடா.) 1. Viṣṇu ; திருமால். 2. See காமதேவன். |
காமுகாரி | kāmukāri n. <>U. kāmkāri. Repairs; மராமத்து. |
காமுருகி | kāmuruki n. Blood-sucker. See ஓணான். (W.) . |
காமுறு - தல் | kāmuṟu- v. tr. <>காமம் + உறு-. 1. To desire, wish for ; விரும்புதல். இன்பமே காமுறுவ ரேழையார் (நாலடி, 60). 2. To beseech, pray for; |
காமோத்தீபகம் | kāmōttīpakam n. <>id. + ud-dīpaka. That which excites sexual passion; காமத்தை மிகுவிக்கும் பொருள். |
காய் 1 - தல் | kāy- 4 v. [T. kāyu, K.M. kāy, Tu. kāyi.] intr. 1. To grow hot, be heated; நீர்முதலியன காய்ச்சப்பெறுதல். 2. To burn; to be warm, as body in temperature; 3. To wither, as vegetables by the sun; to parch, as the lips or mouth; to dry, as the ground; 4. To be dried up, as the humours of the body; to become emaciated; 5. To suffer, as an empty stomach; 6. To dry up, begin to heal, as a sore, a wound, a boil; 7. To be wearied, exhausted; 8. To shine, emit rays; 1. To burn, consume; 2. To kill, destroy; 3.To remove, do away with, lay aside; 4. To be prejudiced; to dislike, hate; 5.To be displeased, indignant, angry, furious; 6. To reprove, scold, reprimand; 7. To cut, sever; 8. To harass, torment; |