Word |
English & Tamil Meaning |
---|---|
காரியசாதனம் | kāriya-cātaṉam n. <>id. +. Means of accomplishing an object, instrument, implement, aid; துணைக்கருவி. |
காரியசித்தி | kāriya-citti n. <>id. +. Accomplishment, success in an undertaking; காரியங்கைகூடுகை. |
காரியசுத்தம் | kāriya-cuttam n. <>id. +. (šaiva.) A minor condition of the sould in its embodied state, when it tries to putify itself by contemplating on God; சரீரத்தைப்பெற்ற ஆன்மா ஒடுக்கமும் வியாபாரமுமின்றி இறைவன் திருவடியை நினைந்துசெல்லும் நிலை. |
காரியசேமம் | kāriya-cēmam n. <>id. +. Circumstances, welfare, etc., as inquired into and reported; விசாரித்துத் தெரிந்துகொண்ட க்ஷேம சமாசாரம். (W.) |
காரியஞ்செலுத்து - தல் | kāriya-celuttu- v. intr. <>id. +. To transact business; தொழில் நடத்துதல்l Loc. |
காரியத்தடை | kāriya-t-taṭai n. <>id. +. Impediment or obstacle to business; தொடங்கிய காரியத்திற்கு நேரும் இடையூறு. |
காரியத்தலைவன் | kāriya-t-talaivaṉ n. <>id.+. Superintendent, manager; மேலதிகாரி. |
காரியத்தவறு | kāriya-t-tavaṟu n. <>id. +. 1. Failure in business; கருமக் கேடு. 2. Ill-success, non-attainment of a desired object ; |
காரியத்தாழ்ச்சி | kāriya-t-tāḻcci n. <>id. +. 1. Ill success; கருமங் கைகூடாமை. 2. Loss; |
காரியத்துக்குவா - தல் [£ரியத்துக்குவருதல்] | kāriyattukku-vā- v. intr. <>id. +. To answer the purpose, to be useful, profitable; உபயோகப்படுதல். |
காரியத்தைமடி - த்தல் | kāriyattai-maṭi v. intr. <>id. +. To pervert an argument; குதர்க்கம் பேசுதல். (W.) |
காரியத்தோன் | kāriyattōṉ n. <>id. Agent; காரியம்பார்க்கும் உத்தியோகஙஸ்தன். வளவன்...காரியத்தோரை முன்னுறவேண்டும் பொருளோடு விடுப்ப (திருவாலவா.43, 2). |
காரியதரிசி | kāriya-tarici n. <>id.+ daršin. Secretary; ஒரு சபையின் காரியங்களை நிர்வகிப்பவன். Mod. |
காரியதுரந்தரன் | kāriya-turantaraṉ n. <>id +. Competent manager, able superintendent, one skilled in the conduct of business; காரியப்பொறுப்பு வகித்தலில் வல்லவன். |
காரியப்படு - தல் | kāriya-p-paṭu- v. intr. <>id. +. 1. To be effected, produced, wrought, operated on; தொழிற்படுதல். 2. To succeed; |
காரியப்பாடு | kāriya-p-pāṭu n. <>id +. Signification, purpose; பயன். காரியப்பாடறக் கண்ணாலே அவனை ஒருகால் நோக்கினால் (ஈடு, 1, 5, 5). |
காரியப்பெயர் | kāriya-p-peyar n. <>id. +. See காரியப்பேர். . |
காரியப்பேர் | kāriya-p-pēr n. <>id. +. Responsible manager; காரியஸ்தர். (சீவக. 2110, உரை.) |
காரியப்பைத்தியக்காரன் | kāriya-p-paitiya-k-kāraṉ n. <>id. +. Dissembler, one who feigns madness with a purpose; பயன்கருதிப்பித்தன்போல் நடிப்பவன். |
காரியப்பொறுப்பு | kāriya-p-poṟuppu n. <>id. +. Responsibility; நிறைவேற்றுங் கடமை. |
காரியபாகம் | kāriya-pākam n. <>id. +. Success in an undertaking; காரிய அனுகூலம், நம்முடைய வழக்கு இப்போது காரியபாகமாய்விட்டது. Loc. |
காரியம் | kāriyam n. <>kāriya. 1. Effect, result, issue; காரணத்தாலாவது. (குறள், 425, உரை.) 2. Action, deed; 3. Affair, thing, business; concern, matter, subject; 4. That which is expedient, fit, profitable; 5. Object, purpose, design end; 6. Final ceremony on the 16th day after death. See கருமாந்தரம். Madr. |
காரியம்பார் - த்தல் | kāriyam-par- v. intr. <>id. +. To look after a business, manage an affair; தொழிலைக் கவனித்தல். |
காரியமாயிரு - த்தல் | kāriyam-ā-y-iru- v. intr. <>id. +. 1. To be busy, intent on business; வேலையில் ஊன்றியிருத்தல். 2. To be useful; |
காரியமாயை | kāriya-māyai. n. <>id. +. (šaiva) Māyā, as the material cause of the world; முலப்பிரகிருதி. (சி.சி.2. 57.சிரம்). |
காரியமுற்று - தல் | kāriya-muṟṟu- v. intr. <>id.+. To get beyond one's control, as a dire disease; to become aggravated, as a grave offence; to be too far gone; எடுத்தகாரியம் கை கடந்துபோதல். (W.) |
காரியமுன்னிடுதல் | kāriya-muṉṉiṭutal n. <>id +. Success, as in an undertaking; எடுத்தகாரியம் கைகூடுகை. (W.) |
காரியவாகுபெயர் | kāriya-v-āku-peyar n. <>id. +. (Gram.) Noun literally signifying effect used figuratively to denote, the cause. dist. fr. kāraṇa-v-āku-peyar; காரியம் காரணத்திற்கு ஆகும் பெயர்ச்சொல். (நன், 290, உரை.) |