Word |
English & Tamil Meaning |
---|---|
காற்சட்டை | kāṟ-caṭṭai, n. <>id. + [M. kāṟcaṭṭa.] Trousers, pantaloons; கால்களுக்கு இடும் நிஜார். |
காற்சப்பை | kāṟ-cappai, n. <>id +. 1. Foot-and mouth disease, Aphthae epiizooticae; கால் நடைகட்கு வருந் தொத்துவியாதிவகை. (M. Cm. D. 247.) 2. Hips. See சப்பை. Colloq. |
காற்சரி | kāṟ-cāri, n. <>id. +. An ornament for ankles; பாதசரம். (கலித். 85, 1, உரை.) |
காற்சவடி | kāṟ-cavaṭi, n. <>id. +. A kind of anklet; காற்சட்டை. |
காற்சிராய் | kāṟ-cirāy, n. <>id. + U. she'ār. Trousers; காற்சட்டை. |
காற்சிலம்பு | kāṟ-cilampu, n. <>id. +. Sounding anklets; காலணி வகை. |
காற்சீப்பு | kāṟ-cīppu, n. <>id. +. Hip bone; இடுப்புச் சந்தேலும்பு. (W.) |
காற்சுவடு | kāṟ-cuvaṭu, n. <>id.+. [M. kālcuvadu.] Foot-print; அடிவைப்பின் குறி. Colloq. |
காற்சுற்று | kāṟ-cuṟṟu, n. <>id. +. Small circular metal ring mostly of silver worn by women on the toes; மகளிர் கால்விரலில் அணியும் ஆணிவகை. |
காற்படம் | kāṟ-paṭam, n. <>id. + Prob. paṭa. 1. Forepart of the sole of the foot; விரலையடுத்திருக்கும் பாதத்தின் அடிப்பக்கம். 2. The instep down to the toes; |
காற்படு - தல் | kāṟ-paṭu-, v. intr. <>கால்5+. To perish; அழிதல். எவையுங் காற்படப் புடைபெயர் கடல் (கம்பரா. எழுச்சி. 10). |
காற்படை | kāṟ-paṭai, n. <>கால்1+. 1. Cock, as using its foot for a weapon; கோழி. காற்படைக் கொடியினன் (கல்லா. 60, 11). 2. Infantry; |
காற்பரடு | kāṟ-paraṭu, n. <>id. +. The roof or upper part of the foot; புறவடி. |
காற்பனிகம் | kāṟpaṉikam, n. <>kālpanika. That which is invented, newly fashioned; கற்பிக்கப்பட்டது. தியான பூசாதிநிமித்தம் காற்பனிக தேகம் (சி. சி. 1, 47, ஞானப்.). |
காற்பாசம் | kāṟpācam, n. <>kārpāsa. Indian cotton plant; பருத்தி. |
காற்பாதை | kāṟ-pātai, n. <>கால்1+. Footpath; ஒற்றையடிப் பாதை. Colloq. |
காற்பிடி - த்தல் | kāṟ-piṭi-, v. tr. <>id.+. To geld, castrate; விதையடித்தல். (W.) |
காற்பிடிப்பு | kāṟ-piṭippu, n. <>id.+. Rhematic stiffness in legs, Anchylosis; வாதத்தினாற் காலிற்காணும் பிடிப்புநோய். |
காற்பித்தவெடிப்பு | kāṟ-pitta-veṭippu, n. <>id.+. Fissure in the foot, cracked foot; காலில் உண்டாகும் பித்தவிரி. (M.L.) |
காற்புத்தி | kāṟputti, n. Yellow sulphrent of arsenic; தாளகம். (தைலவ. தைல. 80.) |
காற்புரவு | kāṟ-puravu, n. <>கால்1+. Land irrigated by channels; ஆற்றுப்பாசன நிலம். |
காற்புள்ளி | kāṟ-puḷḷi, n. <>id.+. Punctuation mark ', ' which indicates the least sepearion between parts of a sentence; ஒரு வாக்கியத்தை வாசிக்கும்பொழுது சிறிதளவு நிறுத்தவேண்டும் இடத்தைக் குறித்தற்கு இடும் ',' குறி. Mod. |
காற்பெட்டி | kāṟ-peṭṭi, n. <>id.+. Back box in a carriage for putting in things; வண்டியின் பின்பெட்டி. Tinn. |
காற்பெய் - தல் | kāṟ-pey-, v. intr. <>கால்5+. To run away; ஓடுதல். கருவினைகாற்பெய்தனவே (சீவக. 3102). |
காற்றண்டை | kāṟṟaṇṭai, n. <>கால்1+தண்டை. Tinkling trinket for ankles; காலணிவகை. |
காற்றருந்து - தல் | kāṟṟaruntu-, v. intr. <>காற்று + அருந்து-. 1. To feed on air, as snakes; காற்றைப்புசித்தல். 2. To be be gaping, listless, idle; |
காற்றழும்பு | kāṟṟaḻumpu, n. <>கால்1+தழும்பு. Bunion, inflamed swelling on foot; வலியோடு கூடிய கால்விக்கம். Loc |
காற்றன் | kāṟṟaṉ, n. Blue vitriol; துரிசு. (சங். அக.) |
காற்றாடவை - த்தல் | kāṟṟāṭa-vai, v. tr. <>காற்று+ஆடு-+. To expose to open air, to air a thing; காற்றுப்படுமாறு பண்டங்களை வைத்தல். |
காற்றாடி | kāṟṟāṭi, n. <>id.+. 1. [M. kāṟṟāṭi.] That which whirls in the wind; சுழல் கறங்கு. (திவா.) 2. See காற்றாடிப்பட்டம். Loc. 3. Windmill; 4. Restless, fidgety person; waverer; 5. Whip tree. See 6. Silk oak, 1. tr., Grevillea robusta; |
காற்றாடிப்பட்டம் | kāṟṟāṭi-p-paṭṭam, n. <>காற்றாடி+. Paper-kite; காற்றிற் பறக்கவிடும் பட்டம். |
காற்றாய்ப்பற - த்தல் | kāṟṟāy-p-paṟa-, v. intr. <>காற்று+. Colloq. 1. To roam, fly about, as the wind; விரைந்தோடுதல். 2. To be overactive in gaining one's ends; to be industrious, zealous; |
காற்றிளவல் | kāṟṟiḷaval, n. <>id. +. Gentle breeze; இளங்காற்று. (யாழ். அக.) |