Word |
English & Tamil Meaning |
---|---|
கிருது | kirutu, n. cf. ahaṅ-krti. 1. Arrogance, haughtiness, self-conceit; செருக்கு. அம் பட்டக்கிருதும் வண்ணார ஒயிலும். 2. Affectation, foppery; |
கிருதுக்காரன் | kirutu-k-kāraṉ, n. <>கிருது+. Arrogant, insolent person; self conceited man; கருவமுடையவன். |
கிருதுநடை | kirutu-naṭai, n. <>id. + Proud strutting gait, affectation; ஒய்யாரநடை. (W.) |
கிருதுப்பாகை | kirutu-p-pākai, n. <>id +. Turban slipped on one side of the head; ஒருபக்கமாகத் தரிக்கும் தலைப்பாகை. (W.) |
கிருதுப்பேச்சு | kirutu-p-pēccu, n. <>id. +. Impertinent talk, insolent speech; செருக்குமொழி. |
கிருதுவுடை | kirutu-v-uṭai, n. <>id. +. Foppish dress, finery; இடம்பமான உடை. (W.) |
கிருபணத்துவம் | kirupaṇattuvam, n. <>krpaṇa-tva. Niggardliness, miserliness; உலோபம். |
கிருபணம் | kirupaṇam, n. <>kr2paṇa. See கிருபணத்துவம். (யாழ். அக.) . |
கிருபணன் | kirupaṇaṉ, n. <>id. Niggard, miser; உலோபி. |
கிருபன் | kirupaṉ, n. <>Krpa. See கிருபாசாரியன். கேதமில் சிந்தையான் கிருபனென்றுளான் (பாரதவாரணா. 29). . |
கிருபாகடாக்ஷம் | kirupā-kaṭākṣam, n. <>krpā+. Benign, gracious look; look of mercy, compassion; அருட்பார்வை. |
கிருபாகரம் | kirupākaram, n. <>id. + kr. Divine grace; திருவருள். உனது கிருபாகரமேதோ (திருப்பு. 499.) |
கிருபாகரன் | kirupākaraṉ, n. <>id. + ākara. The fountain of mercy or grace, as God; அருளுக்கு இருப்பிடமானவன். கிருபாகர ஞானாகர (கந்தரலங். 21). |
கிருபாசமுத்திரம் | kirupā-camuttiram, n. <>id. +. Ocean of grace, as God; கருணைக்கடல். |
கிருபாசனம் | kirupācaṉam, n. <>id. +āsana. Lit., mercy seat, God as the seat of mercy and grace; அருளுக்கு இருப்பிடமான கடவுள். Chr. |
கிருபாசாரியன் | kirupācāriyaṉ, n. <>Krpa + ācārya. A Brahman preceptor who taught archery to the Kaunavas and Pāṇdavas one of seven ciracīviyar, q. v.; கௌரவ பாண்டவர்களுக்கு வில்லாசிரியராயிருந்தவருள் ஒருவர். (பாரத.) |
கிருபாமூர்த்தி | kirupā-mūrtti, n. <>krpā +. One who is the embodiment of mercy; கருணையே உருவானவன். |
கிருபாளு | kirupāḷu, n. <>id. Merciful, compassionate person; கருணையுள்ளவன். மாம்ஸத்தை மாற்றி அன்னாதிகளினால் உருசிக்கப்பண்ணிற்கிருபாளுவாவான் (சி. சி. பர. சௌத். மறு. 6). |
கிருபை | kirupai, n. <>krpā. Grace, mercy, clemency, compassion, benevolence; கருணை. (பிங்.) |
கிருபைக்கண் | kirupai-k-kaṇ, n. <>id. +. Gracious or merciful look; அருட்பார்வை. (யாழ். அக.) |
கிருமி | kirumi, n. <>krmi. Worm, insect, maggot; புழு ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் (திருவாச. 4, 14). |
கிருமிக்கிரந்தி | kirumi-k-kiranti, n. <>id. +. Canker, an eating, spreading sore; அரிபுண் (யாழ். அக.) |
கிருமிக்குன்றம் | kirumi-k-kuṉam, n. prob. id. + குன்று-. Black-oil tree. See வாலுளுவை. (மலை.) |
கிருமிச்சுரம் | kirumi-c-curam, n. <>id. +. Fever caused by worms; கிருமிகளால் உண்டாம் காய்ச்சல்வகை. (மூ. அ.) |
கிருமிச்சூலை | kirumi-c-cūlai, n. <>id. +. Gnawing pain caused by interstinal worms; கிருமிகளாலுண்டாகுஞ் சூலைவகை. (மூ. அ.) |
கிருமிச்சொறி | kirumi-c-coṟi, n. <>id. +. Itching caused by worms; கிருமிகளாலுண்டாகுஞ் சொறியோய் வகை. (மூ. அ.) |
கிருமிசத்துரு | kirumi-catturu, n. <>id. +. 1. Palas tree, m.tr., Butea frondosa; பலாசு. (L.) 2. Palas seed; |
கிருமிநாசம் | kirumi-nācam, n. <>id. +. 1. Black henbane, Hyoscyamus niger; குராசானியோமம். (மலை.) 2. Palas seed; 3. Strainer vine. See 4. Worm-killer. See |
கிருமிநாசி | kirumi-nāci, n. prob. id. +. Tinnevelly senna. See நிலவாகை. (மலை.) |
கிருமிநிசயம் | kirumi-nicayam, n. <>id.+. A hell, one of eight irācanarakam, q. v.; இராசநரகம் எட்டில் ஒன்று. (சி. போ. பா. 23, 1.) |
கிருமிமலடு | kirumi-malaṭu, n. <>id.+. Sterility from animalcule in the uterus; கருப்பசயத்திற் கிருமிகளிருத்தலாலுண்டாகும் மலட்டுத்தன்மை. (மூ. அ.) |
கிருமியரி | kirumi-y-āri, n. <>id. + hari. Windberry. See வாயுவிளங்கம். |
கிருமியுணா | kirumi-y-uṇā, n. <>id. +. a hell where souls in the form of worms eat and are eaten by worms; ஒருவகை நரகம். கிருமியுணா வெனுநரகந் தனிற்புகுந்து . . . கிருமிகளுக்குணவாகித் தாமு மவைதின்று (சேதுபு. தனுக். 12). |