Word |
English & Tamil Meaning |
---|---|
கில் 2 | kil, part.. Verbal infix indicating ability; ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வெம்ப வருகிற்பதன்று கூற்ற நம்மேல் (தேவா. 1229, 2). |
கில்கில்லெனல் | kil-kil-l-eṉal, n. Onom. expr. signifying clinking sound; ஒர் ஒலிக்குறிப்பு. |
கில்பிஷம் | kilpisam, n. <>kilbiṣa. Sin; பாவம். (கோயிலொ. 45.) |
கில்லம் | killam, n. cf. gala. 1. Neck; கழுத்து. (பிங்.) 2. The hollow just below adam's apple; |
கில்லாடி | killāṭi, n. <>Mhr. khilādī. Vagabond, scamp; அயோக்கியவன். Colloq. |
கில்லி | killi, n. Tip-cat. See கிட்டிப்புள். Madr. |
கில்லேதார் | killētār, n. <>U. qliadār. Commandant of a fort; கோட்டை விசாரணைத்தலைவன். (W.) |
கில | kila, part. <>kila. A Sanskrit word signifying expecation, probability etc.; எதிர்பார்த்தல் முதலிய பொருளை யுணர்த்தும் வடமொழி யிடைச் சொல். சுவாகதங் கிலவென்று (திருவிளை. இரசவாத. 15). |
கிலம் | kilam, n. <>khila. 1. That which is ruined, ailapidated, laid waste, destroyed; சிதைந்தது. வீடு கிலமாய்விட்டாது. 2. That which is insufficient; trifle; |
கிலாசு | kilācu, n. <>U. kha1lāsī. Lascar Indian sailor; கப்பல்தொழிலாளி. Naut. |
கிலாம் | kilām, n. <>காலம். Anger, indignation, vexation; கோபம். கிலாந்தோற்றச் சொலுகிறாள். (ஈடு, 6, 1, 1). |
கிலாய் - த்தல் | kilāy-, 11. v. intr. <>கலாய்-. 1. To be angry, indignant; கோபித்தல். பிரணயரோஷந் தலையெடுத்துக் கிலாய்ப்பதும் (ஈடு, 8, 1, 2). 2. To be distressed, afficted; to grieve; |
கிலி | kili, n. [T. K. gili.] Fear, fright; பயம். கிலிகொள்மக னுத்தியினால் (இராமநா. உயுத். 57). |
கிலிகோலம் | kili-kōlam, n. <>கிலி+. Slovenliness, disorder, confusion; அலங்கோலம். (J.) |
கிலிசம்பறை | kilicampaṟai, n. id. +கம்பலை. See கிலிகோலம். (J.) . |
கிலிசைகெட்ட | kilicai-keṭṭa, adj. <>kriyā+. Idle, unemployed, good-for-nothing; வேலையற்ற. |
கிலிபிடி - த்தல் | kili-piṭi- v.intr. <>கிலி +. To be frightened, alarmed; மனத்திற் பேரச்சங்கொள்ளுதல். Colloq. |
கிலிமண்டு - தல் | kili-maṇṭu-, v. intr <>id.+. See கிலிபிடி-. (W.) . |
கிலியம்பறை | kiliyampaṟai, n. id. + கம்பலை. See கிலிசம்பறை. (J.) . |
கிலிஷ்டம் | kiliṣṭam , n. <>klista. (Rhet.) Obscurity, of a passage, unintelligibility; எளிதிற் பொருள்விளங்காமையாகிய குற்றம். |
கில¦பம் | kilīpam, n. <>klība. Person or animal that is neither male nor female, hermaphrodite; அலி. (உரி. நி.) |
கிலுக்கம் | kilukkam, n. A kind of bird; பறவைவகை. கின்னரங் குரண்டங் கிலுக்கஞ் சிரல் (கம்பரா. ஊர்தேடு. 151). |
கிலுக்கு 1 - தல் | kilukku-, 5. v. tr. Caus. of கிலுங்கு-. [K. giluku.] To ring, rattle, clink; ஒலிக்கச்செய்தல். |
கிலுக்கு 2 | kilukku, n. <>கிலுக்கு-. 1. Rattling, tinking, clinking; ஒலிக்கை. (W.) 2. [T. giluka, K. gilike.] Rattling sticks of school boys, used especially in nava-rāttiri in soliciting presents for their teacher; children's rattle-box; |
கிலுக்குத்தடி | kilukku-t-taṭi, n. <>கிலுக்கு+. Staff with jingles at one end, used by post runners and mendicants; அஞ்சலெடுத்துச் செல்வோர் கையிற்கொண்டு ஒலிசெய்யும் தடி. |
கிலுகிலி | kilukili, n. <>கிலுகில் onom. Children's rattle-box; பிள்ளைகளாட்டுங் கிலுகிலுப்பை. கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடும் (சிறுபாண். 61). |
கிலுகிலு - த்தல் | kilu-kilu-, 11. v. intr <>id. 1. To rattle; to make a tinkling, calinking sound; கிலுகிலென்று ஒலித்தல். 2. To resound with noise; |
கிலுகிலுப்பு | kilu-kiluppu, n. <>கிலுகிலு-. See கிலுகிலுப்பை. . |
கிலுகிலுப்பை | kilu-kiluppai, n. <>id. +. 1. Child's rattle; ஒலிசெய்யும் ஒரு விளையாட்டுக்கருவி. 2. Species of rattlewort as having, when ripe, seeds that rattle in the pod (a) rattlewort, m. sh., Crotalaria pulcherrima: (b) laburṅum-leaved rattlewort, m. sh., Crotalaria laburnifolia; 3. A copiously branching shrub with quadrangular stems, Crotalaria Verrucosa; |
கிலுகிலுப்பைக்குட்டான் | kilu-kiluppai-k-kuṭṭāṉ, n. <>கிலுகிலுப்பை+. Child's basketrattle; பிள்ளைகளின் விளையாட்டுக்கருவிவகை. (J.) |