Word |
English & Tamil Meaning |
---|---|
கிழம் | kiḻam, n. cf. கிழவு. 1. Old age, senility, decrepitude; முதுமை. கிழமுதி ரிளநலம் (கந்தபு. கடாவுள். 17). 2. Aged person, aged animal or thing; used as a term of contempt; |
கிழம்படு - தல் | kiḻam-paṭu-, v. intr. <>கிழம்+. To grow old; to become worn out or useless by age; முதுமையடைதல். மரங் கிழம்படுதலின் (பிரமோத். 7, 30). |
கிழமழை | kiḻa-maḻai, n. <>id. +. Rain about to cease; பெய்து ஓயும்நிலையிலுள்ள் மழை. Loc. |
கிழமேல் | kiḻa-mēl, adv. <>கிழக்கு+. From east to west; கிழக்கிலிருந்து மேற்குவரை. Colloq. |
கிழமை 1 | kiḻamai, n. 1. Claim, right, proprity; உரிமை. உணர்ச்சிதா னட்பாங் கிழமை தரும் (குறள், 785). 2. Relation, connection; 3. Friendship, alliance; 4. (Gram.) Relation of one thing to another as denoted by the possessive case, being of two kinds, viz., 5. Quality, property, attribute; 6. [M. kiḻama.] Day of the week, as related to each of the seven planets |
கிழமை 2 | kiḻamai, n. cf. கிழவு. Old age; முதுமை. (சூடா.) |
கிழமைக்கழு - தல் | kiḻamaikkaḻu-, v. intr. <>கிழமை1+அழு-. To mourn for the dead specially on the eighth day after death; இறந்து பட்ட எட்டாம்நாள் துக்கங் கொண்டாடுதல். Tinn. |
கிழமைச்சூனியம் | kiḻamai-c-cūṉiyam, n. <>id.+. (Astrol.) Inauspicious, unpropitious day when the moon is in conjunction with the constellation or nakṣatra unfavourable to that day of the week; வாரசுனியம். (W.) |
கிழமைவட்டம் | kiḻamai-vaṭṭam, n. <>id. +. Week, as the cycle of seven kiḻamai; மண்டலித்துவரும் வாரம். (W.) |
கிழலை | kiḻalai, n. (J.) 1. Quarter, part, region; திசை. இந்தக்கிழலையில் அவனைக் காணவில்லை. 2. prob. கீழ். The lower side of a vessel, the side on which the sail is hoisted; |
கிழவது | kiḻavatu, n. <>கிழ-மை. That which pertains to; உரியது. குழவி மருங்கினுங் கிழவ தாகும் (தொல். பொ. 84). |
கிழவன் 1 | kiḻavaṉ, n. <>id. 1. Owner; உரியவன். செல்லான் கிழவ னிருப்பின் (குறாள், 1039). 2. Lord, master, husband; 3. Chief of an agricultural tract; |
கிழவன் 2 | kiḻavaṉ, n. <>கிழவு. [M. kiḻavan.] aged man; வயதுமுதிர்ந்தவன். மூர்த்துட னடுங்கிநிற்கு மிக்கிழவனை (தேவா. 648, 4). |
கிழவன் 3 | kiḻavaṉ, n. prob. கீழ். Black sediment in oil; எண்யெய்க்கசடு. Oilmonger. |
கிழவன் 4 | kiḻavaṉ, n. Corr. of காடுகிழவோள். The second nakṣatra. See பரணி. (சூடா.) |
கிழவி 1 | kiḻavi, n. <>கிழ-மை. Wife mistress; தலைவி. கிழவிநிலையே வினையிடத்துரையார் (தொல். பொ. 186). |
கிழவி 2 | kiḻavi, n. <>கிழவு. [M. kiḻavi.] Old woman; முதியவள். கிழவி கருந்துணி மேலிடு வெண்பிட்டு (குமர. பிர. மதுரைக். 11). |
கிழவி 3 | kiḻavi, n. Horse-radish tree. See முருங்கை. (மலை.) |
கிழவு | kiḻavu, n. <>கிழ-மை. Old age; கிழத்தனம். பின்னாக் கிழவுதான் விளைகும் (சீவக. 379). |
கிழவோன் 1 | kiḻavōṉ, n. <>id. 1. Proprietor, owner; உரியவன். பழமுதிர் சோலை மலைகிழவோனே (திருமுரு. 317). 2. Lord, master, husband; |
கிழவோன் 2 | kiḻavōṉ, n. <>கிழவு. Old man; முதியவன். கிழவோன்றன் செயலினை (கந்தபு. தவங்காண். 5). |
கிழாஅன் | kiḻāaṉ, n. 1. Curd; தயிர். (பிங்.) 2. Curd-pot; |
கிழாத்தி | kiḻātti, n. cf. கெளிறு. 1. A seafish, silvery, Tricanthus strigilifer; கடல்மீன் வகை. 2. A fresh-water shark of carfish family, Siluridae; |
கிழார் 1 | kiḻār, n. Ancient Vēḷāṇ title; வேளாளர்பட்டப்பெயர். எத்தனையேனூங் கிழார்கிழார்க்கும் (ஈடு, 6, 3, 7). (தொல். பொ. 629, உரை.) |
கிழார் 2 | kiḻār, n. 1. Water lift for irrigation, drawn by bullocks; பூட்டைப்பொறி. ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேற்றமும் (சிலப். 10, 110). 2. Garden; |
கிழாலை | kiḻālai, n. Hard kind of earth; களர்நிலம். (J.) |
கிழாள் | kiḻāḷ, n. <>கிழ-மை. Feminine of proprietress; கிழான். உரியவள். |