Word |
English & Tamil Meaning |
---|---|
கிள்ளி | kiḷḷi, n. perh. கிள்ளு-. Title of some cola kings; சோழர்க்கு வழங்கிய சிறப்புபெயர். (திவா.) |
கிள்ளிக்காட்டு - தல் | kiḷḷi-k-kāṭṭu-, v. intr. <>id. +. 1. To give a hint, signal, as by pinching; குறிப்புக்காட்டுதல். 2. To be niggardly in giving food; |
கிள்ளிக்காய் | kiḷḷi-k-kāy, n. Wing-shell, a molluse, Avicula; நத்தைவகை. (G. Tn. D. 22.) |
கிள்ளிக்கொடு - த்தல் | kiḷḷi-k-koṭu-, v.<>கிள்ளு-+. intr. To give a little from a great quuantity, as a pinch; சிறுகக்கொடுத்தல்.--tr. To stir up, instigate, incite; |
கிள்ளித்தெளி - த்தல் | kiḷḷi-t-teḷi-, v. intr. <>id. +. To give a small quantity, as a pinch; சிறிதுகொடுத்தல். கிள்ளித்தெளிக்கமாட்டான். (W.) |
கிள்ளிவிடு - தல் | kiḷḷi-viṭu-, v. tr. <>id. +. To stir up incite, instigate; தூண்டிவிடுதல். Colloq. |
கிள்ளு | kiḷḷu, n. <>கிள்ளு-. 1. Pinching, nipping; கிள்ளுவகை. 2. That which is nipped off, as a little piece of betel leaf or tobacco; |
கிள்ளு - தல் | kiḷḷu-, 5 v. tr. [T. gillu, M. kiḷḷu.] 1. To pinch with the finger and thumb, with the nails; to pluck, nip, pick off, as a leaf; நகத்தாலெடுத்தல். கற்கிள்ளிக் கையிழந் தற்று (நாலடி, 336). 2. To dig out, scoop; 3. To destroy, as by nipping off the head; 4. To hold, carry, as with the beak, with the fingers and thumb; to take up a little, a pinch; |
கிள்ளுக்கீரை | kiḷḷu-k-kīrai, n. <>id. +. 1. Feeble-rooted greens, as easily plucked; கிள்ளியெடுக்கப்படும் கீரைவகை. 2. Anything easily handled often used in reference to a weak man; |
கிள்ளுக்கீரைபண்ணு - தல் | kiḷḷu-k-kīrai-paṇṇu, v. tr. <>கிள்ளுக்கீரை+. To insult, treat insultingly; தாழ்மைப்படுத்துதல். (W.) |
கிள்ளுங்கிழியுமாய் | kiḷḷuṅ-kiḻiyum-āy, adv. <>கிள்ளு-+. Utterly useless, as shreds of anything; பயனற்றதாய். இந்த வேலை கிள்ளுங்கிழியுமாய்ப் போகக்கடாவது. (W.) |
கிள்ளுவடை | kiḷḷu-vaṭai, n. <>id. +. Cake offered to manes in šrāddha. See காக்காய்வடை. Loc. |
கிள்ளை 1 | kiḷḷai, n. prob. கிள-. 1. Parrot, palaeonis; கிளி. கிள்ளை வளைவா யுகிரின் (சீவக. 2439). 2. A dark species of parrot; |
கிள்ளை 2 | kiḷḷai, n. perh. கிள்ளு-+. 1. Horse; குதிரை. (திவா.) 2. Mace; |
கிள்ளைச்சாதம் | kiḷḷai-c-cātam, n. <>கிள்ளை1+jāta. Young parrot; கிளிக்குஞ்சு. செஞ்சோற்றேனினைத் தஞ்செவிப் படுத்திய கிள்ளைச்சாதமே (இரகு. குறை. 31). |
கிள்ளைவிடுதூது | kiḷḷai-viṭu-tūtu, n. <>id. +. Poem in which the heroine languishing from love sends a parrot as messenger to her lover; தலைவி தன் காதலுக்கு உரிய தலவைவனிடத்துக் கிளியைத் தூதுவிடுத்தலைக் கூறும் பிரபந்தம். |
கிள - த்தல் | kiḷa-, 12 v. tr. 1. To express clearly; புலப்படக் கூறுதல். கிளந்தாங் குரைத்தல் (தொல். பொ. 211). 2. To make special mention of to state, specifically; |
கிளத்து - தல் | kiḷattu-, 5. v. tr. See குலமுரை கிளத்துபடலம் (கம்பரா.). . |
கிளப்பம் | kiḷappam, n. <>கிளம்பு-. Rising, heaving, swelling; கிளர்ச்சி. திரைக் கிளப்பம்போலெ (திவ். திருவாய் 5, 9, 3, பன்னீ.) |
கிளப்பு 1 | kiḷappu, n. <>கிளப்பு-. Raising, rousing; எழுப்புகை. |
கிளப்பு 2 | kiḷappu, n. <>கிள-. Speech, utterance; சொல்லுகை. கிளப்பருஞ் சிறையில் வைத்த (பாரத. இராசசூகய. 87). |
கிளப்பு 3 | kiḷappu, n. <>E. club. A restaurant, an eating house, a hotel; சோற்றுக்கடை. Colloq. |
கிளப்பு - தல் | kiḷappu-, 5 v. tr. Caus. of கிளம்பு-. 1. To raise up some heavy thing, as with a lever; எழுப்புதல். கல்லைக் கிளப்பினான். 2. To raise, as a wall; to erect, cause to grow high; 3. To turn out, discharge, dismiss; 4. To excite, as a disturbance; to induce as fever; to bring about; 5. To rouse, animate, urge, incite; |
கிளப்போசு | kiḷappōcu, n. <>E. club. See கிளப்பு. Colloq. . |
கிளபுறம் | kiḷa-puṟam, n. perh. கீழ்+புறம். Leeward; காற்றுப்படாத பக்கம். Naut. |