Word |
English & Tamil Meaning |
---|---|
கிறிச்சுச்சடா | kiṟiccu-c-caṭā, n. <>கிறிச்சு+. Creaking shoes; கிறிச்சென்றொலிக்குங் காற்சோடு வகை. |
கிறிச்சுச்சாட்டை | kiṟiccu-c-cāṭṭai, n. <>id. +. A large whip creaked before the chief officers of the kandyan country; கண்டிநாட்டுத் தலைமையதிகாரிகள் முன்பு கிறிச்சென்று ஒலிக்கச் செய்யுஞ் சாட்டை. (J.) |
கிறிச்சுத்தலையணை | kiṟiccu-t-talai-y-aṇai, n. <>id. +. Creaking pilow; கிறிச்சென்று ஒலியிடுந் தலையணை. |
கிறிசு | kiṟicu, n. <>Malay, krīs. Malay dagger. See கிரிசுக்கத்தி. |
கிறிஸ்தவன் | kiṟistavaṉ, n. <>கிறிஸ்துமார்க்கத்தான். Christian; கிறிஸ்துமார்க்கத்தான். |
கிறிஸ்து | kiṟistu, n. <>Gr. Kristos. Christ, the Messiah; இயேசுகிறிஸ்துநாதர். |
கிறிஸ்துமார்க்கம் | kiṟistu-mārkkam, n. <>Gr. Kristos. Christianity; கிறிஸ்துவமதம். |
கிறிஸ்துவம் | kiṟistuvam, n. <>id. See கிறிஸ்துபிறந்த திருநாள். . |
கிறிஸ்மஸ் | kiṟismas, n. <>E. Christmas கிறிஸ்துபிறந்த திருநாள். |
கிறு | kiṟu, part. (Gram.) Sign of the present tense; ஒரு நிகழ்கால இடைநிலை. (நன். 143.) |
கிறுக்கட்டி 1 | kiṟukkaṭṭi, n. Confection made of fried mahwa flowers, etc.; இலுப்பைப் பூ முதலான பூக்களை வறுத்துப் பாகில் செய்யும் பணியாரம். Loc. |
கிறுக்கட்டி 2 | kiṟu-k-kaṭṭi, n. prob. கண்+கட்டி. Sty in the eye. See கட்டிகட்டி. . |
கிறுக்கல் | kiṟukkal, n. <>கிறுக்கு-. 1. Scribbling, writing hastily and clumsily; தாறுமாறுக எழுதுகை. 2. Scoring out; |
கிறுக்கன் | kiṟukkaṉ, n. <>கிறுக்கு. [T. kiruku.] 1. Crazy fellow, crank, lunatic; பைத்தியக்காரன். 2. Conceited, arrogant fellow; |
கிறுக்காஸ்பத்திரி | kiṟukkāspattiri, n. <>id. + ஆஸ்பத்திரி. Lunatic asylum; பைத்தியத்துவக்குச் சிகிற்சைசெய்யும் வைத்தியசாலை. |
கிறுக்கு 1 - தல் | kiṟukku-, 5. v. <>கிறு onom. tr. [T. giruku.] 1. To write; எழுதுதல். (பிங்.) 2. To scribble, write illegibly; 3. [M. kiṟukka.] To cancel, score out; 4. To feel giddy, to be delirious, dizzy; |
கிறுக்கு 2 | kiṟukku, n. <>கிறுக்கு-. 1. Scribble; உருத்தெரியாத எழுத்து. 2. Scoring out anything written; 3. Giddiness, dizziness; 4. cf. E. crack. Craziness, eccentricity, lunacy; 5. Passion, as for a thing; 6. Egotism, self-conceit, arrogance; |
கிறுக்குநோவு | kiṟukku-nōvu, n. <>கிறுக்கு+. A disease of sheep; ஒருவகை ஆட்டுநோய். (M. Cm. D. [1887] 249.) |
கிறுகிறு - த்தல் | kiṟu-kiṟu-, 11. v. intr. <>கிறுகிறெனல். [T. giragira.] 1. To be giddy, dizzy; to swim, as the head; மயக்கமாதல். தலைசுழன்று கிறுகிறுத்து (பிரபோத. 18, 54). 2. To be confounded, confused, disconcerted; |
கிறுகிறுப்பு | kiṟu-kiṟuppu, n. <>கிறுகிறு-. 1. Giddiness, dizziness, swimming of the head, vertigo ; தலைச்சுழற்சி. இந்த மையலுங் கிறுகிறுப்புந்தையலர்க்குண்டோ ( (குற்றா. குற. 73, 3). 2. Pride, haughtiness; |
கிறுகிறெனல் | kiṟu-kiṟ-eṉal, n.Expr. signifying (a) being giddy, dizzy; தலைசுற்றற்குறிப்பு: (b)moving rapidly; |
கிறுங்கு - தல் | kiṟuṅku-, 5. v. intr. To move, stir, shake stagger; அசைதல். அவன்சற்றுங் கிருங்கவில்லை. Loc. |
கிறுசன் 1 | kiṟucaṉ, n. cf. ghusrṇa. The flower of a bulbous rooted plant; குங்குமப்பூ. (மலை.) |
கிறுசன் 2 | kiṟucaṉ, n. prob. Turmeric curcuma longa; மஞ்சள். (மலை.) |
கிறுத்துவம் | kiṟuttuvam, n. Eagle-wood. See அகில். (மலை.) |
கிறுது | kiṟutu, n. See கிருது. கிறுதுபடு மொழி பழகி (திருப்பு. 790). . |
கிறுதுவேதன் | kiṟutuvētaṉ, n. Spongegourd. See பீர்க்கு. (மூ. அ.) |
கின்காப்பு | kiṉ-kāppu, n. <>U. kan-khawāb. Silk or sating worked with gold of silver flowers, brocade, knocob; ஒருவகைப் பட்டுச்சீலை. |
கின்று | kiṉṟu, part. (Gram.) Sign of the present tense, as in செய்கின்றது; ஒரு நிகழ்கால இடைநிலை. (நன். 143.) |
கின்னகம் | kiṉṉakam, n. Weaver bird. See தூக்கணங்குருவி. கின்னக விளக்கம் (இரகு. நாட். 44). |
கின்னம் | kiṉṉam, n. khinna. Afficition, sorrow, distress; துனபம். கின்னங் குரித்தடியேன். செவிசொன்ன (கந்தரலங். 24). |