Word |
English & Tamil Meaning |
---|---|
கீணர் | kīṇar, n. <>கீழ்+ந்+அர். Mean, low, vulgar people; கீழோர்.(W.) |
கீதசாத்திரம் | kīta-cāttiram, n. <>gīta +. Science of music; சங்கீதநூல். |
கீதசாலை | kīta-cālai, n. <>id. +. Hall where music is taught; music hall; சங்கீதம்பயிலுங்கூடம். கீதசாலையுங் கேள்விப்பந்தரும் (பெருங். இலா வாண.7, 131). |
கீதநடை | kīta-naṭai, n. <>id. +. Sāma Vēda, as composed of chants; சாமவேதம். (திவா.) |
கீதம் 1 | kītam, n. <>gīta. 1. Song, chant; இசைப்பாட்டு. மங்கைய ரமுத கீதம் (கம்பரா. கார்முக. 40). 2. Melody, music; 3. Beetle, bee; |
கீதம் 2 | kītam, n. cf. kīcaka. Bamboo; மூங்கில். (மலை.) |
கீதவம் | kītavam, n. <>kitava. Thorn-apple. See ஊமத்தை. (மலை.) |
கீதவீதி | kīta-vīti, n. <>gīta. Avenue through which music sounds proceed; கீதநாதம் வருகின்ற வழி. கனிந்த கீதவீதியே . . . தடங்கணார் . . . எய்தினார் (சீவக. 2039). |
கீதவுறுப்பு | kīta-v-uṟuppu, n. ஈid. +. Limbs or component elements of a musical piece, which are four, viz.; உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை; இசைப்பாட்டின்கூறு. (சிலப். 3. 105, உரை) |
கீதவேதம் | kīta-vētam, n. <>id. + vēda. Sāma Vēda, as composed of chants; சாமவேதம். (W.) |
கீதாங்கம் | kītāṅkam, n. <>id. + aṅga. cf. Instrumental accopaniment to vocal music; கீதத்துக்கு வாசிக்கும் வாச்சியக்கூறு. (சிலப். 3, 14, உரை.) |
கீதாரி | kītāri, n. See கீலாரி. (E. T.) . |
கீதானுகம் | kītāṉukam, n. <>gīta + anu-ga. See கீதாங்கம். (சிலப். 3, 14, அரும்.) . |
கீதி 1 | kīti, n. <>gīti. 1. Singing, chanting; பாடுகை. 2. Song; |
கீதி 2 | kīti, n. cf. khadira. Coromandel ebony of Mysore. See கருங்காலி. (தைலவ. தைல. 48.) |
கீதை | kītai, n. <>gītā. 1. Sacred song or poem containing religious doctrines, by an inspired sage; உத்தம தர்மங்களைக்கூறுந் தெய்வப் பாடல். 2. See பகவற்கீதை. கண்ணன் . . . ஸ்ரீ கீதையருளிச்செய்து (மதுரைக். 763, உரை). |
கீயாக்கணக்கு | kīyā-k-kaṇakku, n. prob. kya +. Work dealing with conjunct consonants in Sanskrit; வடமொழிக் கூட்டுமெய்யெழுத்துக்களை அறிவிக்கும் நூல். |
கீயோமாயோவெனல் | kīyō-māyō-v-eṉal, n. Onom. expr. signifying screaming, squalling, as children or young people; பிள்ளைகள் கூக்குரலிடுதற் குறிப்பு. (J.) |
கீர் | kīr, n. <>gīr, Word speech; சொல். (திவ.) |
கீர்கீரெனல் | kīr-kīr-eṉal, n. Onom. expr. signifying creaking sound, as that of a saw when cutting timber; squeaking, screaming, squalling sound, as that of an infant; ஓர் ஒலிக்குறிப்பு. சங்க தனைக் கீர்கீ ரெனவருக்குங் கீரனொ (பெருந்தொ.1397). |
கீர்த்தனம் | kīrttaṉam, n. <>kīrttaṉam, See கீர்த்தனை. . |
கீர்த்தனை | kīrttaṉai, n. <>kārttaṉai, 1. Song, psalm, hymn; ஓர் இசைப்பட்டு. 2. Praise; |
கீர்த்தி | kīrtti, n. <>kīrti. Fame, celebrity, renown, distinction, glory; புகழ். விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் (திருவாச. 8, 8). |
கீர்த்தி - த்தல் | kīrtti-, 11 v. tr. <>id. To praise, extol; புகழ்தல். தன்சொல்லாற் றான்றன் னைக் கீர்த்தித்த மாயன் (திவ். திருவாய். 7, 9, 2). |
கீர்த்தித்தானம் | kīrtti-t-tāṉam, n. id. +. sthāna. (Astrol.) Ascendant, house of one's birth; சென்மலக்கினம். (சங். அக.) |
கீர்த்திப்பிரதாபம் | kīrtti-p-piratāpam, n. <>id. +pra-tāpa. 1. Fame and splendour; புகழும் ஆற்றலும். 2. Lustre of fame, glory, renow. |
கீர்த்திமான் | kīrttimāṉ, n. <>kārti-mān nom. of kīrtimat. Celebreated person, illustrious persongage; புகழ்பெற்றவன். |
கீர்த்திமை | kīrttimai, n. <>kīrti. See கீர்த்தி. அரக்கனைக் கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் (திவ். திருப்பா. 13). . |
கீர்த்திலக்ஷ்மி | kīrtti-lakṣmi, n. <>id. +. Fame personified as Lakshmī; புகழாகிய திரு. |
கீர்வாணம் | kīrvāṇam, n. <>gīr-vāṇa. Sanskrit, as the language of the gods; தேவபாஷையான வடமொழி. |
கீர்வாணி | kīr-vāṇi, n. See கீரவாணி. . |
கீரந்தை | kīrantai, n. <>கீரன்+தந்தை. A poet of the middle sangam; இடைச்சங்கப்புலவருள் ஒருவர் . (இறை.1, உரை.) |
கீரம் 1 | kīram, n. <>kīram, 1. Rose ringed parakeet; கிளி. (திவா.) 2. Black parrot, Palaeornis columboides; |