Word |
English & Tamil Meaning |
---|---|
கு 1 | ku. . The compound of க் and உ. . |
கு 2 | ku, part.. 1. Sign of the dative case; நான்கனுருபு. (தொல். சொல். 76.) 2. Connective particle, as in 3. Suffix added to verbs, nouns, etc., to form (A) abstract nouns, as (b) verbal nouns, as (c) finite verbs in 1st pers. sing. fut., as |
கு 3 | ku, part. Perfix added to words in sanskrit, as in signifying badness, evil unfairness; குதர்க்கம், பெயர்க்கு முன்வந்து தீமைப்பொருள் குறிக்கும் ஒரு வடசொல். |
கு 4 | ku, n. <>ku Earth; பூமி. (திவா.) |
குக்கர் | kukkar, n. <>kukkura. [T. kukka.] Contemptible of despicable persons of low birth as a dog; மிக இழிந்தோர். குடிமையிற் கடை மைப்பட்ட குக்கரில் (திவ். திருமாலை, 39). |
குக்கல் 1 | kukkal, n. <>குக்கு-. Whooping cough; கக்குவான். (J.) |
குக்கல் 2 | kukkal, n. <>kukkura. [T. kukka.] See குக்கன். (குடா.) குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினி வடைத்து (விவேகசிந்.). . |
குக்கன் | kukkaṉ, n. <>id. Dxog; நாய். (திவா.) |
குக்கி | kukki, n. <>kukṣi. Belly; வயிறு. (திவா.) |
குக்கில் 1 | kukkil, n. prob. onom. Crowpheasant, Centropus rufipennis; செம்போத்து. குக்கிற்புறத்த சிரல்வாய (கலவழி. 5). |
குக்கில் 2 | kukkil, n. <>guggulu. 1. See குங்கிலியம், 4, 6, 8. . 2. Black dammar-resin; |
குக்கிலம் | kukkilam, n. prob. šuklā. Atees. See அடிவிடயம். (மலை.) |
குக்கிற்சூரணம் | kukkiṟ-cūraṇam, n. <>குக்கில்2+cūrṇa. A kind of medicinal powder prepared by stuffing a fowl with dammar resin, calcinating and pulverising it; ஒருவகைச் சூரண மருந்து. (W.) |
குக்கு - தல் | kukku-, 5. v. intr. To whoop hoop, as in whooping cough; இருமுதல். பிணியுற்றவனாகிக் குக்கிக் கக்கி (திருப்பு. 430). |
குக்கு | kukku-, 5. v. intr. [K. kukkarisu.] To sit on one's legs, squat; குந்துதல். (W.) |
குக்குடச்சூட்டு | kukkuṭa-c-cūṭṭu, n. <>kukkuṭa +. A kind of prepared arsenic. See கோழித்தலைகந்தகம். (W.) |
குக்குடசர்ப்பம் | kukkuṭa-cāppam, n. <>id.+. Winged serpent, a variety of serpents said to become shorter with age get wigns ultimately, and fly like domestic fowls; ஆயுள் நீட்டித்தலால் உடல்குறைந்து கோழி பறக்குமளவு பறந்துசெல்லுந் தன்னமியதான பாம்பு. (சீவக. 1271, உரை.) |
குக்குடதீபம் | kukkuṭa-tīpam, n. <>id. +. A fowl shapped lamp used in temples; கோழி வடிவான கோயில்வளக்கு. (பரத. ஒழிபி. 42, உரை.) |
குக்குடபுடம் | kukkuṭa-puṭam, n. <>id. +. calcination of metals in a pile of ten dried dungcakes approzimating to the height of a cock; கோழியினளவாகப் பத்து வறட்டிகொண்டு இடப்படும் புடம். குக்குடபுடம் நொய்தின் வீற்றுவீற்றாதாக்விட்டது நோக்கினன் (கந்தபு. மார்க்கண். 134). |
குக்குடம் | kukkuṭam, n. <>kukkuṭa. 1. Gallianceous fowl, cock hen; கோழி. குக்குடம்வாழ்க (கந்தபு. வள்ளி. 261). 2. Winged serpent; |
குக்குடாசனம் | kukkuṭācaṉam, n. <>id. + āsna. Sitting posture in yogic practice, the soles, touching the ground like those of a cock; இருபாதங்களையும் கீழ்வைத்துக்குந்தியிருந்து யோகஞ்செய்யும் ஆசனவகை. (திருமந். 561.) |
குக்குரம் | kukkuram, n. <>kukkura-dru. A very small plant. See கோடகசாலை. (மலை.) |
குக்குலு | kukkulu, n. <>guggulu. See குங்கிலியம், 1, 4, 5, 6. . |
குக்குலுவம் | kukkuluvam, n. <>id. See குங்கிலியம். குக்குலுவப்புகை (கந்தபு. தேவகிரி. 29). . |
குக்குறுப்பான் | kukkuṟuppāṉ, n. <>குக்கு1- See குக்குறுவான். . |
குக்குறுவான் | kukkuṟuvāṉ, n. <>id. A green screeching barbet; கீச்சென்று ஒலிக்கின்ற பசுநிறமுள்ள பறவைவிசேடம். (J.) |
குக்கூடல் | kukkūṭal, n. Veil or covering for the head; முட்டாக்கு. பொன்னொத்த வாடை குக்கூட லிட்டு (திவ். பெருமாள். 6, 5). |
குக்கூவெனல் | kukkū-v-eṉal, n. Onom. expr. signifying crowing sound, as of a cock; cooing sound, as of a dove; hooting noise, as of an owl; ஓர் ஒலிக்குறிப்பு. குச்கூவென்றது கோழி (குறுந். 157). |
குகப்பிரியா | kuka-p-piriyā, n. prob. guha-priyā. A musical mode; ஓர் இராகம். |
குகம் | kukam, n. See குகரம், 1. (W.) . |
குகரம் | kukaram, n. <>kuhara. 1. Cave, cavern; மலைக்குகை. மலைக்குகரத்து (அரிசமய. பக்தி சார. 37). 2. Cavity, hollow subternean passage; |